Published:Updated:

2018... முதலீட்டுக்கேற்ற ஃபண்டுகள்!

2018... முதலீட்டுக்கேற்ற ஃபண்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
2018... முதலீட்டுக்கேற்ற ஃபண்டுகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

2018... முதலீட்டுக்கேற்ற ஃபண்டுகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

Published:Updated:
2018... முதலீட்டுக்கேற்ற ஃபண்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
2018... முதலீட்டுக்கேற்ற ஃபண்டுகள்!

தோ 2018-ம் ஆண்டு வந்துவிட்டது. 2017-ம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வாறு வருமானத்தைக் கொடுத்துள்ளன என்று ஆராய்வதற்கும், 2018-ம் ஆண்டு எவ்வாறு இருக்கும் என்பதை அலசுவதற்கும் இதுதான் சரியான தருணம். அதை முதலில் செய்வோம்.  

2018... முதலீட்டுக்கேற்ற ஃபண்டுகள்!

கடந்த ஒரு வருடத்தில் நிஃப்டி 8000 புள்ளிகளிலிருந்து  இன்று 10500-யை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது சுமார் 31% வளர்ச்சி. நிஃப்டி குறியீடே இந்த வளர்ச்சியைக் கண்டது  எனில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானத்தைக் கேட்கவும் வேண்டுமா? லார்ஜ்கேப், மல்ட்டி கேப், ஸ்மால் & மிட்கேப் எனப் பல வகையான ஃபண்டுகளும் அபரிமித மான வருமானத்தைத் தந்துள்ளன.  எப்படிக் கிடைத்தது இந்த அசாத்தியமான வருமானம்?

2016 செப்டம்பரில், கிட்டத்தட்ட 9,000 புள்ளிகளைத் தொட்ட நிஃப்டி 50, அந்த வருட முடிவில் 8,000 புள்ளிகளை நோக்கிக் குறைந்தது. இதற்குக் காரணம், ரூ.1,000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை மதிப்பிழக்க செய்தது நமது அரசின் நடவடிக்கை தான். அந்த அதிர்ச்சியில் சந்தை விழுந்தது. அப்போது முதலீடு செய்த வர்கள் அனைவருக்கும் அபரிமித மான வருமானத்தை, சந்தை 2017-ம் ஆண்டு முடிவில் கொடுத்துள்ளது.

கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சராசரி யாக ஒரு வருட வங்கி எஃப்.டி- வட்டிக்கு நெருக்கமாக அல்லது அதற்கு மேல் கிடைத்துள்ளது. வட்டி வீழ்ச்சி அதிகம் இல்லாததால், கடன் சார்ந்த லாங் டேர்ம் கில்ட் ஃபண்டுகள் சற்று சுமாராகவே செயல்பட்டுள்ளன.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2018... முதலீட்டுக்கேற்ற ஃபண்டுகள்!

இதே காரணத்தினால், முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடித்தமான பெரும்பாலான பேலன்ஸ்டு பண்டுகள் நிஃப்டியைவிடக் குறைவாகத் தந்துள்ளன. இதற்குக் முக்கியக் காரணம், இதற்கு முந்தைய ஆண்டுகளில் பங்குச் சந்தை ஏறிக் கொண்டிருந்தது; அதே சமயத்தில் வட்டி குறைந்து கொண்டிருந்தது. அதனால், பாண்டுகளின் விலை அதிகமானது. இந்த இரண்டு சொத்து வகைகளும் ஏறியதால், பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் செயல்பாடு உன்னதமாக இருந்தது.

2018... முதலீட்டுக்கேற்ற ஃபண்டுகள்!2017-ல் வட்டி விகிதக் குறைப்பு அவ்வளவாக இல்லாததால், பெரும்பாலான பேலன்ஸ்டு ஃபண்டுகள் நிஃப்டி 50-யை  ஒட்டி அல்லது அதைவிடக் குறைவாகவே கொடுத்துள்ளன. (பல வகையான கேட்டகிரிகள் கடந்த ஒரு வருட காலத்தில் தந்த சராசரி வருமானம் குறித்த பட்டியல் முன்பக்கத்தில் தந்துள்ளோம்,)

ஸ்மால்கேப் ஃபண்டுகள் அதீத வருமானத்தைக் கொடுத்துள்ளன. அதற்கடுத்தாற்போல் மிட்கேப், மல்ட்டிகேப், லார்ஜ்கேப், பேலன்ஸ்டு, எம்.ஐ.பி என ரிஸ்க்கிற்கு ஏற்ற வருமானத்தை பல வகையான ஃபண்டுகளும் கொடுத்துள்ளன.

கடந்த வருடம், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் அள்ளிக் கொடுத்தன என்பதெல்லாம் சரிதான். அதே மாதிரியான வருமானத்தை 2018-லும் எதிர்பார்க்கலாமா?

இது, பல ஆயிரம் பேர் பதில் தெரிந்து கொள்ளத் துடிக்கும் கேள்வி.

சென்ற ஆண்டைப் போல கிடைப்பது சந்தேகமே என்று தோன்றுகிறது. ஆகவே, முதலீட்டாளர்கள் தங்களுடைய எதிர்பார்ப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். எஸ்.ஐ.பி முதலீட்டை எப்போதும்போல் தொடர்ந்து வாருங்கள்.   

2018... முதலீட்டுக்கேற்ற ஃபண்டுகள்!

மொத்த முதலீடு செய்யும் போது உங்களது தேவை மற்றும் காலம் அறிந்து முதலீடு செய்யுங்கள்.

நீண்ட கால கடன் சார்ந்த திட்டங்களுக்குப் பதிலாக, குறுகிய கால கடன் சார்ந்த திட்டங்களை முதலீட்டாளர்கள் பரிசீலிக்க லாம்.

ஏனென்றால் வட்டி விகிதம் ஏறிக் கொண்டிருப்ப தால்,  நீண்ட கால ஃபண்டுகளின் என்.ஏ.வி-யில் வீழ்ச்சி இருக்கலாம்.  

2017-ல் பல்வேறு கேட்டகிரியில் பல ஃபண்டுகள் நன்கு செயல்பட்டிருந்தாலும், இனி 2018-ல் எந்தெந்த கேட்டகிரியில் எந்தெந்த ஃபண்டுகள் நன்கு செயல்பட வாய்ப்புள்ளது என்கிற கேள்வி முக்கியமானது.

2018-ல் முதலீடு செய்வதற்கு ஒவ்வொரு கேட்டகிரியிலும்  சில ஃபண்டுகளை மேலே உள்ள அட்டவணையில் தந்துள்ளோம்.

உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீடு செய்யுங்கள். 2018-ல் உங்கள் முதலீடு நல்ல லாபம் சம்பாதிக்க வாழ்த்துகள்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism