Published:Updated:

சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி!

சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி!
பிரீமியம் ஸ்டோரி
சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி!

சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி!

சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி!

சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி!

Published:Updated:
சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி!
பிரீமியம் ஸ்டோரி
சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி!

“சொந்தமாத் தொழில் செய்யணும், பலருக்கு வேலை கொடுக்கணும், கூடவே தொழில்ல சமூக நோக்கம் இருக்கணும்ங்கிற மூணு விஷயத்தை அடிப்படையா வெச்சு எங்க பேப்பர் பிசினஸைச் சிறப்பா செய்திட்டி ருக்கிறோம்” - உற்சாகமும் புன்னகையுமாகப் பேசுகிறார்கள் லோகநாதன் - மணிமேகலை தம்பதி. சென்னை, அரும்பாக்கத்திலுள்ள இவர்களின் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா பேப்பர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் பேப்பர் ஷ்ரெட்டிங் மற்றும் டிரேடிங் தொழிலை வெற்றிகரமாகச் செய்துவருகிறார்கள். 

சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி!

லோகநாதன் முதலில் தன் கதையை  உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்தார்... “என் அப்பா ஒரு பத்திரிகை நிறுவனத்தில் மோனோ கீபோர்டு ஆபரேட்டரா வேலை செய்தார். அதனால பத்திரிகை, பிரின்ட்டிங் தொழில் பத்தின ஆர்வம் எனக்கு உண்டாச்சு. சூழ்நிலை காரணமா படிப்பு ப்ளஸ் டூ-வோட நின்னுபோச்சு. ஆனாலும், ஒரு தொழில்முனைவோரா வெற்றி யடையணும்ங்கிற எண்ணம் மனசுல இருந்துச்சு.

அப்போவெல்லாம் கார்ப்பரேட், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்கள்ல அலுவலகக் கோப்புகளைக் குறிப்பிட்ட காலம் வரை பாதுகாப்பாங்க. அப்புறமா  எரிச்சுடுவாங்க. இந்த வழக்கத்தால் மரங்களின் அழிவு அதிகமாகிறதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப் படுறதை உணர்ந்தேன். இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டுபிடிக்கணும்னு நெனைச்சேன். அப்பாவின் உதவி யோடும், பேங்க் லோன் வாங்கியும், 1993-ல் ரீ-சைக்கிளிங் பேப்பர் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பிச்சேன்.
தலா ரெண்டு லட்சம் மதிப்பில், பேப்பர்களைத் துண்டுகளாக்கும் ‘ஷ்ரெடர் மெஷின்கள் (shredder  machines)’ நான்கு வாங்கினேன். பல நிறுவனங்களும், காலாவதி யான தங்களின் கோப்புகளை எரிக்கிறதுக்குப் பதிலா என்கிட்ட அனுப்புவாங்க. அதை நாங்க எங்க மெஷின்கள் மூலமா பல துண்டு களாக்கி அரைச்சு, அதை ஒரு வெளி நிறுவனத்தாரின் மில்லுக்கு அனுப்புவோம். அங்கே பேப்பர் கூழாக்கப்பட்டு, மீண்டும் புது பேப்பராக மாற்றப்படும். அதை விற்பனைக்குக் கொடுப்போம்.

ஆரம்பகாலத்துல இந்தப் பிசினஸைப் பற்றி மக்களுக்குத் தெரியலை.  ‘மறுசுழற்சி பேப்பரா... தரமாயிருக்குமா?’னு நிறைய வாடிக்கையாளர்கள் சந்தேகமா கேட்டாங்க. அவங்களையெல்லாம் எங்க பிளான்ட்டுக்கு வரவெச்சு, செயல்பாடுகளை விளக்கி, பேப்பரின் தரத்தை நேரடியாகப் பார்க்கவெச்சேன். ரீடெய்லா செய்திட்டிருந்த பிசினஸ், கஸ்டமர்ஸுக்குக் கிடைச்ச விழிப்பு உணர்வால ஹோல்சேலா பிக்-அப் ஆச்சு. வாங்கின பேங்க் லோனையெல்லாம் அடைச்சுட்டு, படிப்படியா லாபம் பார்த்தோம்.

வணிக மற்றும் கல்வி நிறுவனங் களோட எண்ணிக்கை தொடர்ந்து பெருகிகிட்டேயிருந்ததால, பேப்பர்களுக்கான தேவை அதிகமாயிட்டே இருந்ததை உணர்ந்து, 2003-ல் பேப்பர் டிரேடிங் பிசினஸையும் கூடுதலா தொடங்கினேன். சில மாதங்களில் எனக்குத் திருமணம் முடிய, அதுவரை லட்சத்தில் இருந்த டேர்ன் ஓவர் மனைவியின் வருகைக்குப்பின் கோடிகளில்  வளர்ச்சியடைஞ்சது” என மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தார் லோகநாதன். 

சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி!

புன்னகை பிரியாமல் பேசினார் மணிமேகலை. “பி.பி.ஏ பட்டதாரி யான நான், ஆசிரியர் வேலை பார்த்துட்டிருந்தேன். கல்யாணத்துக்குப் பிறகுதான் கணவர் மூலமா அக்கவுன்ட்ஸ் உள்ளிட்ட பிசினஸுக்கான எல்லா விஷயங்களையும் கத்துக் கிட்டேன். மறுசுழற்சி பேப்பர் உற்பத்தியோடு, பெரிய பேப்பர் மேனுஃபேக்சரிங் நிறுவனங் களிடமிருந்து டன் கணக்கில் பேப்பர்களை வாங்கி, மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்ற ‘பேப்பர் டிரேடிங்’ பிசினஸிலும் கூடுதலா கவனம் செலுத்தினோம். அப்படி நாங்க வாங்கும் ஒவ்வொரு பேப்பர் ரோலரும், குறைந்தபட்சம் 400 கிலோ எடை கொண்ட தாயிருக்கும். அதை அப்படியேயும், பல நிறுவனங்களின் தேவைக்கேற்ப மாறுபட்ட வடிவத்தில் நாங்களே கட் பண்ணியும் விற்பனை செய்றோம். இப்படிப் பத்திரிகை, பிரின்ட்டிங், வணிக, கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவற்றுக்கும், மாறுபட்ட தரத்தில் மாசத்துக்கு 100 டன்னுக்கு அதிகமான பேப்பரை விற்பனை செய்றோம். 

 அரும்பாக்கத்துல இருக்கிற யூனிட்ல தினமும் பேப்பர்களைத் துண்டுகளாக்குகிற வேலை நடந்துட்டேயிருக்கும். பல வணிக நிறுவனங்கள் தங்களோட அலுவல் பயன்பாட்டுக்கு உதவாத பேப்பர்களை எங்களுக்கு வித்துடுவாங்க. அப்படியான பல டன் பேப்பரும் மில்லுக்குப் போய் கூழாகி, மீண்டும் மறுசுழற்சி பேப்பரானதும் நாங்களே வாங்கி விற்பனை செய்றோம்.

இது தவிர, பல நிறுவனங்களோடு பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அதன்படி அந்த நிறுவனங்களின் வளாகத்திலேயே நாங்க பேப்பரைத் துண்டுகளாக்கும் மெஷினை வெச்சிருக்கிறோம். அதில், அந்த நிறுவனத்தின் பயன்படாத பேப்பர்களைத் துண்டுகளாக்கி, மில்லில் அரைச்சுக் கொடுப்போம்” என்கிறார் மணிமேகலை.

“மனைவியின் வருகைக்குப்பிறகு, அக்கவுன்ட்ஸ், குவாலிட்டி அஷ்யூரன்ஸ் வேலைகளைப் பார்த்துக்கிறது அவங்க பொறுப்பு. மார்க்கெட்டிங், லேபர்களைக் கண்காணிக்கிறது, தொழிலை விரிவுபடுத்துறதெல்லாம் என் பொறுப்பு. இப்படி ஆளுக்கொரு பொறுப்பைக் கவனிக்கிறதால எந்த நேரமும் புரொடக்‌ஷன் தடையில்லாம நடக்குது, கஸ்டமர்ஸுக்கு உரிய நேரத்துக்கு டெலிவரி கொடுக்க முடியுது.

ஒரு ஏரியாவுல பிரச்னைனா, அதுக்கு உடனடியாத் தீர்வுகாண முடியுது. மேலும், ஆர்டர் எடுக்கிறது, பேப்பர்களைத் துண்டுகளாக்கறது, மில்லுக்குக்கொண்டுபோறது, தயாரான புது பேப்பரை உரிய நிறுவனத்துக்குக் கொண்டுசேர்க்கிறதுனு நடக்கும் இந்த வேலைகளில், திடீர்னு லேபர்ஸ் பற்றாக்குறை ஏற்படுற சமயத்துல நாங்க ரெண்டு பேருமே எல்லா வேலைகளும் செய்வோம். சமயத்துல, லோடு இறக்கி, ஏத்துற வேலைவரை நான் செய்திருக்கேன். ஆபீஸுக்கு வந்துட்டா, நாமளும் ஒரு லேபர்ங்கிற எண்ணத்துலதான் ஆரம்பத்திலேருந்து இப்போவரை வேலைசெய்றோம். கஸ்டமர்ஸோட தேவை உணர்ந்து உரிய நேரத்தில் பேப்பர்களை சப்ளை பண்றது மற்றும் வெளிப்படைத் தன்மையுடன்கூடிய நம்பிக்கை உள்ளிட்ட காரணங்களால, 20 வருஷத்துக்கும் மேல ரெகுலர் கஸ்டமர்ஸ் நிறைய பேர் இருக்காங்க.

இந்த அடித்தளம்தான், நிறையப் போட்டி நிறுவனங்கள் உருவாகி யிருக்கிற இன்றைய சூழல்லயும் எங்க வளர்ச்சியை உயர்த்திட்டேயிருக்கு. இன்று, 15 வேலையாள்களுடன், வருஷத்துக்கு 2.5 - 3 கோடி ரூபாய்க்கு டேர்ன் ஓவர் கிடைக்கும் அளவுக்கு எங்க நிறுவனம் வளர்ச்சி யடைந்திருக்குது” எனப் பெருமிதமாகப் பேசி முடித்தார் லோகநாதன்.

கணவனும், மனைவியும் கலந்துபேசி பிசினஸ் செய்தால், வெற்றி நிச்சயம் என்பதற்கு லோகநாதன் - மணிமேகலை தம்பதி ஓர் உதாரணம்!

- கு.ஆனந்தராஜ்

படங்கள்:  செ.விவேகானந்தன்

சொந்தபிசினஸ்... சமூக நோக்கம்... மறுசுழற்சி பேப்பர் தயாரிப்பில் சாதித்த தம்பதி!

ஓய்வு பெறுகிறார் மார்க் மோபிஸ்!

“பங்குச் சந்தையில் உலக அளவில் புகழ்பெற்ற முதலீட்டாளரான மார்க் மோபிஸ் இந்த மாதம்      31-ம் தேதி முதல் ஓய்வு பெறுகிறார். ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத் தில் முப்பது ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு,  இப்போது ஓய்வு பெறு கிறார் மார்க் மோபிஸ்.  முதலீடு செய்வதற்கு ஆப்பிரிக்கா மிகச் சிறந்த இடம் என்று முதன்முதலில் சொன்னவர் இவர்தான், 2008 சர்வதேச பொரு ளாதார நெருக்கடிக்குப் பிறகு சந்தை மீண்டும் வளர்ச்சி காணத் தொடங்கி விட்டது என்பதைச் சொன்னவர் இவர்தான். சிங்கப்பூரில் இவர் வேலை பார்த்தாலும், ஒரு ஆண்டில் 250 நாள்கள் உலகம் சுற்றிக் கொண்டிருந்தவர் தான் இந்த 81 வயது மனிதர்!