தற்போது சந்தையின் டார்லிங் ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டுகள்தான். இந்த வகை ஃபண்டுகள், கடந்த சில வருடங்களில் நல்ல வருமானத்தைத் தந்துள்ளன. இந்த வகை ஃபண்டுகளில் அதிக ரிஸ்க் மற்றும் ரிவார்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட், பெயரில் உள்ளதுபோல, ஒரு ஸ்மால்கேப் ஃபண்டாகும். இது முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் சராசரி சந்தை மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3,900 கோடியாகும். இந்த ஃபண்ட் தற்போது ரூ.5,600 கோடிக்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிகவும் கவர்ச்சிகரமான மதிப்புள்ள ஸ்மால் கேப் நிறுவனங்களில், நீண்ட கால நோக்கத்துடன் இந்த ஃபண்ட் முதலீடு செய்கிறது. பி.எஸ்.இ ஸ்மால்கேப் குறியீடு, இதன் பெஞ்ச்மார்க்காக உள்ளது.
ஸ்மால்கேப் முதலீட்டில் உள்ள ரிஸ்க்கைக் குறைப்பதற்காக 85 – 90 நிறுவனப் பங்குகளில் இந்த ஃபண்ட் முதலீடு செய்கிறது. மேலும், கரடிச் சந்தையைக் கருத்தில்கொண்டு, 20% முதலீட்டை நல்ல லிக்விடிட்டி உள்ள ஃபங்குகளில் முதலீடு செய்கிறது.
இதன் ஃபண்ட் மேனேஜர் சமீர் ரச் ஆவார். இதன் போர்ட் ஃபோலியோவில் கிட்டத்தட்ட 62% ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளிலும், 33% மிட்கேப் நிறுவனப் பங்கு களிலும், எஞ்சியது லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளிலும் உள்ளது.
பீட்டா சந்தையைவிட சற்று அதிகமாக 1.07 என்ற அளவிலும், ஆல்ஃபா உன்னதமாக 15.46 என்ற அளவிலும் உள்ளது.

இந்த ஃபண்ட் ஜி.எஸ்.டி-யால் லாபம் அடையும் நிறுவனங்கள், இன்ஃப்ரா துறை சார்ந்த நிறுவனங்கள், கெமிக்கல்ஸ் மற்றும் எலெக்ட் ரானிக்ஸ் நிறுவனங்கள் போன்ற பங்குகளில் தனது கவனத்தைத் தற்போது செலுத்தி வருகிறது. சந்தை கவனிக்காத/ விரும்பாத பங்குகள் மற்றும் பி/இ ரீரேட்டிங்குக்குத் (Rerating) தயாராக உள்ள பங்குகளையும் பொறுக்குவதில் ஆர்வம் காட்டுகிறது.
எந்தப் பங்கிலும் 3 சதவிகிதத்துக்கும் அதிகமான ஹோல்டிங்ஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபண்ட் ஆரம்பித்ததிலிருந்து தொடர்ச்சியாகத் தனது பெஞ்ச்மார்க் குறியீடு மற்றும் கேட்டகிரி ஆவரேஜை பீட் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த ஃபண்ட் ஆரம்பித்த போது (16/09/2010) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் தற்போது ரூ.4,88,760-ஆக உள்ளது. இது, சிஏஜிஆர் அடிப்படையில் ஆண்டுக்கு 24.24% ஆகும்.
கடந்த 7 வருட காலத்தில் வேறு சொத்து வகைகளைப் பார்க்கும்போது, இது ஒரு உன்னதமான வருமானமாகும். இது ஒரு ஸ்மால்கேப் ஃபண்ட் என்பதால், அதிக ரிஸ்க் உடையது.
ஆகவே, நீண்ட நாள்களுக்கு (குறைந்தது 7 வருடங்களுக்கு மேல்) பணம் தேவைப்படாதவர்கள் மட்டுமே இந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருக்கும் என்பதால், எஸ்.ஐ.பி முறை முதலீடு இந்த ஃபண்டில் சிறந்ததாகும்.

இந்த ஃபண்ட், மொத்த முதலீட்டை ஒரு பான் கார்டிற்கு ரூ.5 லட்சம் வரை அதிகபட்சத் தொகையாக நிர்ணயம் செய்துள்ளது. அதற்குமேல் முதலீடு செய்ய விரும்பு பவர்கள், எஸ்.ஐ.பி அல்லது எஸ்.டி.பி முறையில்தான் முதலீடு செய்ய வேண்டும்.

சந்தையைவிட அதிகமான ரிஸ்க்கை எடுக்க விரும்புபவர்கள், செல்வத்தை உருவாக்க மற்றும் வளர்க்க விரும்புபவர்கள், நீண்ட கால (7 ஆண்டுகள்) நோக்கங்களுக் காக முதலீடு செய்ய விரும்புபவர்கள் போன்ற அனைவரும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
யாருக்கு உகந்தது?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுக களில் அனுபவமுள்ளவர்கள், அதிக வருமானத்தைப் பெறுவதற்காக அதிக ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள், இளம் வயதினர் அல்லது பணம் அதிகம் உபரியாக உள்ளவர்கள், நீண்ட காலத்திற்கு முதலீட்டுப் பணம் தேவைப்படாதவர்களுக்கு ஏற்றது.
யார் முதலீடு செய்யக்கூடாது?
குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்களுக்கு இந்த ஃபண்ட் ஏற்றதல்ல.