மத்திய - மாநில அரசுப் பணி யிலிருந்து ஓய்வுபெறுவோர், மாதாந்திர ஓய்வூதியத்துடன் அவர்கள் கடைசி யாகப் பெற்ற சம்பளத்தைப்போல் (Pay Last Drawn) 56 மாத சம்பளத்தை, அதிகபட்ச ஓய்வுக்காலப் பணப் பலனாகப் பெறலாம். அதாவது,

1. கிராஜுவிட்டியாகப் பெறுவது 16.5 மாத சம்பளம்.

2. நிலுவையில் உள்ள விடுப்புக்கான சம்பளம் 11 மாதம் (மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 மாத சம்பளம் விடுப்பு ஊதியமாகத் தரப்படுகிறது).

3. பென்ஷன் - கம்யூட்டேஷன் செய்து பெறக்கூடிய தொகை (தற்போதைய நிலவரப்படி, 16.5 மாத சம்பளம்).

இந்த மூன்றும் அரசு வழங்கும் ஓய்வுக்காலப் பலன். ஓய்வுபெறும் ஊழியர் ஒருவரின் பி.எஃப் சேமிப்புத் தொகையானது, அவரது கடைசி மாத சம்பளத்தைப்போல் 12 மாத சம்பளமாக இருக்க வேண்டும் என்பது பொதுவான கணக்கீடு. அதன்படி, 12 மாத பி.எஃப் தொகையையும் சேர்த்துக் கொண்டால், ஓய்வுகாலப் பணப்பலன் 56 மாத சம்பளம் என்ற கூட்டுத் தொகையை எட்டக்கூடும்.

இவற்றுள் பென்ஷன், கிராஜுவிட்டி, விடுப்பு சம்பளம் மற்றும் பி.எஃப் தொகை ஆகிய நான்கும், தாருங்கள் என்று கேட்காமலே தரப்படக் கூடியவை.

ஆனால், பென்ஷன் கம்யூட்டேஷன் (Pension commutation) அப்படியல்ல! ‘வேண்டும்’ என்று கேட்டு, ‘விருப்பம் தெரிவித்தால்’ மட்டுமே கிடைக்கும். அதாவது, ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியர், தனது அடிப்படை ஓய்வூதியத்தில் (Basic Pension) மூன்றில் ஒரு பங்கை அரசிடம் ஒப்படைத்து விட்டு, ஒட்டுமொத்தத் தொகை ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம். இதைத்தான் பென்ஷன் கம்யூட்டேஷன் என்கிறார்கள்.

தற்போது மத்திய அரசின் அதிகபட்ச சம்பளம் ரூ.2.5 லட்சம். எனவே, அதிகபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.1.25 லட்சம். தமிழக அரசின் அதிகபட்ச அடிப்படை ஊதியம் ரூ.2.25 லட்சம். அதன்படி அதிகபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.1-1.25 லட்சம்.
உதாரணமாக, ரூ.1.5 லட்சம் அடிப்படை ஊதியம் பெறும் தமிழக அரசு அலுவலர் ஒருவரை எடுத்துக்கொள்வோம். இவருக்கான முழு ஓய்வூதியம் (Full Pension for 30 years service) ரூ.75,000-ஆக இருக்கும். இதில் மூன்றில் ஒரு பங்கான 25,000 ரூபாயை கம்யூட்டேஷன் செய்தால், ரூ.25,11,300 என்கிற அளவுக்கு ஒட்டுமொத்த தொகை (Capitalised Value) அந்த ஊழியருக்குக் கிடைக்கும். அதாவது, ஒப்படைக்கப்பட்ட 25,000 ரூபாயைப்போல் நூறு மடங்குக்கும் சற்று அதிகத் தொகை கிடைக்கும். இது லாபகரமான முதலீடு அல்லவா!

ஓய்வுபெற்ற தினத்தில் 25,000 ரூபாயை முதலீடு செய்து, அதற்கு அடுத்த நாளே ரூ.25 லட்சம் கிடைக்கும் என்றால், அதுமாதிரியான முதலீடு வேறெங்கும் நமக்குக் கிடைக்குமா? கிடைக்கவே கிடைக்காது. எனவே, பென்ஷன் - கம்யூட்டேஷன் என்பது லாபகரமானதுதான் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. பென்ஷன் - கம்யூட்டேஷன் செய்து ஓய்வுபெற்ற அலுவலரிடம் மாதம் ரூ.25,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு, அவரது ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். அப்படிப் பிடித்தம் செய்யப்படும் தொகை, அதாவது திரும்பக் கட்டும் தொகையின் மொத்த மதிப்பு ரூ.45 லட்சமாக இருக்கும்.

என்ன இது, ரூ.25 லட்சத்தை வாங்கிவிட்டு, ரூ.45 லட்சம் திரும்பக் கட்ட வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான். 8% வட்டி செலுத்துவதினால்தான் ரு.25 லட்சத்தை வாங்கிவிட்டு, ரூ.45 லட்சம் திரும்பச் செலுத்த வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மடங்குத் தொகையைத் திரும்பக் கட்டுகிறோம் என்றாலும், பென்ஷன் கம்யூட்டேஷன் மூலம் நமக்குக் கிடைக்கும் பல நன்மைகளைப் பார்க்க வேண்டும்.

* 58 வயதில் ஓய்வுபெற்று, 59-வது வயதில் வீட்டுக்கு வந்துசேரும் ஒரு மூத்த குடிமகனிடம் ரூ.25 லட்சத்தைத் தந்து, ‘இதனை ஒவ்வொரு மாதம் ரூ.25,000 வீதம் 15 வருடங்களில் திருப்பித் தந்தால் போதும்’ என்று யார் சொல்வார்கள்? எந்தத் தனிநபராவது அல்லது நிறுவனமாவது சொல்லுமா என்ன?

* சாதாரணமாக 12% கூட்டு வளர்ச்சி தரும் முதலீடுகூட ரூ.25 லட்சத்துக்கு மாதம் 25,000 ரூபாயைத் தந்துவிடும். அதாவது, கம்யூட் டேஷனுக்காகப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஈடுகட்டிவிடும்; முதலீடு முழுமையாக இருக்கும்.

* ரியல் எஸ்டேட் முதலீடுகளில், 15 வருடங்களில் 15 மடங்கு வேண்டாம்; இரண்டு அல்லது மூன்று மடங்கு வளர்ச்சி தரக்கூடிய மனைகள் பல பகுதிகளில் இருக்கத்தான் செய்கின்றன.

* இத்தனை காலமும் கட்டிக்கொள்ளத் தவறிய சொந்த வீட்டை இப்போது கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தால், இந்த வயதில் இந்த அளவுக்கு அத்தனை சுலபமாகக் கடன் கிடைத்து விடுமா?

* மகன் / மகளுக்குத் தொழில் தொடங்க, இப்படிக் குறைந்த வட்டியில் சுலபத் தவணையில் வேறெங்கு கடன் கிடைக்கும்?

* ஓய்வுபெற்று வீட்டில் இருக்கப் பிடிக்காமல், வணிக நிறுவனம் ஒன்றைத் தொடங்க நினைத்தால் இந்தத் தொகை ஒன்றே போதுமே.

* இவை அனைத்துக்கும் மேலாக வருமான வரிச்சலுகை வேறு கிடைக்கும். கம்யூட்டேஷன் செய்து பெறும் ரூ.25 லட்சம், வருமானம் என்ற கணக்கில் வராது. எனவே, வருமான வரியும் கிடையாது. அது மட்டுமன்றி, கம்யூட்டேஷன் செய்த ரூ.25,000 ஓய்வூதியத்திலிருந்து குறைக்கப்படும். அந்தவகையில் ஆண்டொன்றுக்கு ரூ.3 லட்சத்துக்கு ரூ.60,000 வரிச்சலுகை கிடைக்குமே.

இனி, பென்ஷன் கம்யூட்டேஷன் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

* உதாரணமாக, ரூ.75,000 ஓய்வூதியத்தில் ரூ.25,000 கம்யூட்டேஷன் செய்யப்பட்டது என்றாலும், அவருக்கான அகவிலைப்படி, அடிப்படை ஓய்வூதியமான 75,000 ரூபாய்க்கே கணக்கிட்டு வழங்கப்படும்.

* மனித வாழ்வில் மரணம் இயல்பானது. பென்ஷன் கம்யூட்டேஷன் பெற்ற ஓய்வூதியதாரர் ஒருவர், அதைச் செய்த மறுநாளே இறந்துவிட்டாலும், கம்யூட்டேஷனுக்கான தொகை, அவரது மனைவி / கணவருக்கு வழங்கப் படவுள்ள குடும்ப ஓய்வூதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படாது.

* இறந்துபோன ஊழியரின் / மனைவி, கணவருக்கும் அவருடைய அதிகபட்ச குடும்ப ஓய்வூதியத்தில் குறைப்புச் செய்யப்படாது.

* மூன்றில் ஒரு பங்குதான் கம்யூட்டேஷன் செய்ய வேண்டும் என்பதில்லை. தேவையான அளவுக்குக் குறைந்த தொகையையும் கம்யூட்டேஷன் செய்யலாம்.

* ஓய்வுபெறுவதற்குமுன் அனுப்பப்படும் ஓய்வூதியக் கருத்துருவிலேயே (Pension Proposals) கம்யூட்டேஷன் செய்ய இசைவு தெரிவித்துவிடுவது நலம். பணமும் கூடுதலாகக் கிடைக்கும்.

* ஓய்வுபெற்ற ஓராண்டுக்குள் விண்ணப்பித்துவிட்டால், கம்யூட்டேஷன் தொகை சிறிது குறைய வாய்ப்புண்டு. ஆனால், மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டிய தில்லை.

* ஓய்வுபெற்ற ஓராண்டு சென்றபின் விண்ணப்பித்தால் பணம் குறையும்; மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டியிருக்கும். மருத்துவப் பரிசோதனையில் உடல்நலக் குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் கம்யூட்டேஷன் மறுக்கப்படும்.

கம்யூட்டேஷன் தருவது அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை தான். அதனையும் பொறுத்துக்கொண்டு அரசாங்கம் தரும்போது, அதனை வாங்கிச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

படம்: சு.குமரேசன்

அதிகம் வசூலான நேர்முக வரி!

நடப்பு நிதியாண்டில், கடந்த டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் வசூலிக்கப்பட்டுள்ள நேர்முக வரி ரூ.6.56 லட்சம் கோடி என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டோடு ஒப்பிடும்போது, இது 18.2% அதிகம் என்பது முக்கியமான தகவல். ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், நேர்முக வரி மூலமாக ரூ.9.8 லட்சம் கோடி வசூலாகும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. தற்போது வரை 67% நேர்முக வரி வசூலாகி இருப்பதாகச் சொல்லப் பட்டுள்ளது.

கம்யூட்டேஷன் தொகை... யாருக்கு எவ்வளவு?

* தமிழக அரசு ஊழியர்கள் அதிகபட்சமாக, தனது அடிப்படை ஓய்வூதியத்தில் 33.33% மட்டுமே கம்யூட்டேஷன் செய்ய முடியும்.

* மத்திய அரசு ஊழியர்கள் 40% ஓய்வூதியத்தை கம்யூட்டேஷன் செய்யலாம்.

* ராணுவத்தினர் 50% வரை கம்யூட்டேஷன் செய்யலாம்.

கம்யூட்டேஷன் தொகையானது, கம்யூட்டேஷன் செய்யும் ஊழியரின் வயது, அவரது அடுத்த பிறந்த நாளின்போது என்னவோ, அதன் அடிப்படையிலே கணக்கிடப்படுகிறது. எனவே, வயது அதிகரிக்கும்போது தொகை குறையும். குறைந்த வயதிலேயே கம்யூட்டேஷன் செய்யும்போது தொகை அதிகரிக்கும்.