Published:Updated:

நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?

நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?

நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?

நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?

நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?

Published:Updated:
நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?

நாணயம் விகடன் சார்பில் `பிசினஸ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ் மற்றும் எக்ஸ்போ’நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் காலை, ஜி.எஸ்.டி குறித்துப் பேசினார் டைக்கூன்+ அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், சி.இ.ஓ-வுமான   எம்.சத்யகுமார். அவர் பேசியதன் சுருக்கம் இனி...  

நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?

“இந்தியா போன்ற கூட்டாட்சியை அடிப்படை யாகக் கொண்டு இயங்கும் ஒரு நாட்டில் ஜி.எஸ்.டி சட்டத்தை நிறைவேற்றுவது மிகவும் கடினம்.  அமெரிக்காவிலேயே இன்னும் ஜி.எஸ்.டி-யை நடைமுறைப் படுத்தவில்லை.

ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப் பட்டபோது மக்களைவிட திரைத்துறையினரும், ஹோட்டல் நிறுவனர்களும்தான் அதைத் தீவிரமாக எதிர்த்தனர். திரைத்துறையில் நடக்கும் பல பரிவர்த்தனைகள் கணக்கில் வராமல் இருந்துவந்தன. இப்போது ஜி.எஸ்.டி வரி நடைமுறையில் அனைத்தும் கணக்கில் வருவதுடன், அவற்றில் சிலவற்றுக்கு உள்முக வரியைப் பெற முடியாத நிலையும் இருக்கிறது. இதனால்தான் திரைத்துறையினர் ஜி.எஸ்.டி-யை எதிர்த்தனர்.

தற்போது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான். இதுபற்றி விவாதம் நடத்தப்பட்டு வந்தாலும், அதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

ஜி.எஸ்.டி-யைப் பொறுத்தவரை, அரசு செய்திருக்க வேண்டி முக்கியமான விஷயம், ஒவ்வொரு பொருளுக்குமான வரியைத் தீர்மானிக்குமுன் அந்தப் பொருளின் அடக்க விலை என்ன என்பதைத் தீர்மானித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், கூடுதல் விலைக்கு விற்று, கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுத்திருக்க முடியும். அதன்மூலம் மக்களுக்கு நன்மை செய்திருக்க முடியும்’’ என்றார்.

அடுத்து, ‘ஆட்டோமேஷன் & ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ பற்றிப் பேசினார் சென்னை ஐ.ஐ.டி கணினி மற்றும் பொறியியல் துறையின் தலைவர் பேராசிரியர் வி.காமகோடி.  

நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?

“மருத்துவத்துறையில் உடல் பரிசோதனைகளைச் செய்வதற்கு ஆட்டோமேஷன் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. காற்று மாசுபாட்டைக் கண்டறியவும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும்படி ஒரு புத்தகத்தை வாசிக்கவும், பேசவும் ஆட்டோ மேஷன் பயனுள்ளதாக இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கார், ஆட்டோமேட்டிக் விமானம், ஆட்டோமேட்டிக் சாட்டிலைட் என்று மனிதன் செய்யும் அனைத்தையும் செய்யும் அளவுக்கு அவற்றின் வளர்ச்சி இருக்கிறது. ஆனால், இவை அனைத்துமே மனிதனுடைய உத்தரவுக்குக் கட்டுப்பட்டுத்தான்  செயல்பட்டு வருகிறது. மெஷினால் சுயமாகச் சிந்திக்க முடிந்தாலும்கூட மனிதனைப்போல் ஒருநாளும் சுயமாகச் செயல்பட முடியாது. 

மனிதனால் செய்ய முடியாத, மனிதன் செய்ய வேண்டிய அவசியமில்லாத வேலைகளுக்கு ரோபோக்களைப் பயன்படுத்த லாம். உதாரணமாக, தென்னை மரத்தில் ஏறி இளநியைப் பறிக்கவும், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றவும், கழிவு அகற்றும் வேலைகளுக்காகவும் பயன் படுத்தலாம். அதற்குத்தான் இந்த ஆட்டோமேஷன் மிகவும் உதவியாக இருக்கும். எந்தவொரு தொழில்நுட்பத்தையும் மனிதகுலத்துக்குப் பயனுள்ளதாக உருவாக்க வேண்டுமே தவிர, மனிதகுலத்துக்கு எதிரானதாக உருவாக்கிவிடக் கூடாது. ஏனெனில், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸை எந்த அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது யாருக்கும்  தெரியவில்லை. 

ஆட்டோமேஷனால் வேலை வாய்ப்புகள் குறைய வாய்ப்பிருக் கிறது. ஆனால், அந்த வேலைகள் மனிதன் செய்ய தகுதியான வேலைகளாக நிச்சயமாக இருக்காது” என்றார்.   

நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?

அதைத் தொடர்ந்து பேசிய டை (TiE) நிறுவனத்தின் தலைவரும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஆலோசகருமான வி.சங்கர், தற்போதுள்ள நிலையில் பலரும் தொழில்முனைவோர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை எடுத்துரைத்தார். அவர் பேசியதாவது...

``1985-ம் ஆண்டில் கம்ப்யூட்டர் அறிமுகமானபோது அதை  எப்படிப் பயன்படுத்துவது என்று பயிற்சி வழங்கவும், நிறுவனங்களுக்கு புரோகிராமிங் எழுதித் தரும் வகையிலும் நிறுவனத்தைத் தொடங்கினோம். புரோகிராமை இயக்குவதற்கு நினைவக வசதியை மேம்படுத்த லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டியிருந்ததால், தகுந்த வாடிக்கையாளர்களைக் கண்டறிவது கடினமாக இருந்தது.

கிடைத்த வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கியது தவறு என்று எண்ணம் ஓடியது. அந்தச் சமயத்தில் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ஆள்களும் இல்லை. தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்குச் சவால்களும் நிறைய இருந்தன. ஆகையால், உற்பத்தி செய்யும் திறனையோ அல்லது சேவைத் திறனையோ கொண்ட  தகுந்த வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பது அவசியமாக இருந்தது.    

நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?

நிறுவனத்தை நடத்தச் சிரமப்பட்டபோது, உற்பத்தித் துறையில் மட்டுமே கவனம் செலுத்துவதை விட்டு நிதித் துறையில் சாஃப்ட்வேர் பிரிவுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்று நண்பர்கள் வழிகாட்டினார்கள். இந்த வழிகாட்டுதலால், நிதி நிறுவனங்களை அணுகி வாய்ப்பைப் பெற்றோம். அப்படி உருவானதே கேம்ஸ் (CAMS) நிறுவனம். இந்த நிறுவனத்தின் வழியாகத்தான் 62% மியூச்சுவல் ஃபண்ட் டிரான்ஸாக்‌ஷன் நடக்கின்றன. மேலும், நிறுவனத்தின் 80% மியூச்சுவல் ஃபண்ட் வாடிக்கையாளர்களின் சேவை குறித்த பணிகளைக் கவனித்துக்கொள்கிறது.

1984-ம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்ட் தனியார் நிறுவனங்களால் தொடங்கப்பட்டது. சந்தையில் பரிமாற்றம் நடக்கும்போது தொலைபேசிக் கட்டணம் அதிகமாக இருந்தது. இதனைச் சமாளித்து நான்கு, ஐந்து இடங்களில் அலுவலகங்களை அமைத்தோம். இப்போது மியூச்சுவல் ஃபண்ட் வாடிக்கையாளருக்குச் சேவை செய்யும் சிறந்த நிறுவனமாக மாற்றியிருக்கிறோம். எப்போதும் வாய்ப்பை ஒரு புராடக்ட்டாகப் பாருங்கள். நாங்கள் மியூச்சுவல் ஃபண்டை ஒரு எஃப்.எம்.சிஜி பொருளாகத்தான் பார்த்தோம்.

ஸ்டார்ட் அப் நிறுவனத்தை பெரிய நிறுவனமாகத் தொடங்க வேண்டிய அவசியமில்லை. சிறிய அளவில் தொடங்கினால்கூட போதுமானது. அது அழகு நிலையமாகவோ, ஹேர்ஸ்டைல் கடையாகக்கூட இருக்கலாம். அதில், ஏற்கெனவே உள்ளதைவிட வித்தியாசத்தைக் காட்ட வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். தொழில்முனைவோர் என்பவர், குறிப்பிட்ட பிரிவில் திறன் மிகுந்த நபராக இருக்க வேண்டும். தொழில்நுட்ப அடிப்படையில் தொழில் முனைவோராக வர ஆசைப்படுபவர்கள், தொழில்நுட்பத்தில் மிகுந்த அறிவுகொண்டவராக இருப்பார்கள். அடுத்தடுத்த நிலைக்குச் செல்லும்போது இதர திறன்களையும் வளர்த்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நிறுவனத்தைத் தொடங்குபவர்கள், தங்களுடைய திறனை வெளிக்காட்டுவதற்கான இடமும் காலமும் இருக்கவேண்டியது அவசியம்” என்றார்.

நாணயம் கான்க்ளேவ்-ல் இரண்டாம் நாள் மதியத்துக்குப்பிறகு நடந்த நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் அடுத்த இதழில்...

 -ஜெ.சரவணன், ஞா.சக்திவேல் முருகன்

படங்கள் : பா.காளிமுத்து

நாணயம் கான்க்ளேவில் கிளம்பிய பரபரப்பு - ஜி.எஸ்.டி-க்குள் வருமா பெட்ரோல், டீசல்..?

சிக்கியது பி.ஏ.சி.எல்-ன் ஆஸ்திரேலிய சொத்து!

பண மோசடி நிறுவனமான பி.ஏ.சி.எல் நிறுவனத்துடன் தொடர்புடைய ரூ.472 கோடி மதிப்புள்ள அசையா சொத்தைக் கைப்பற்றி யுள்ளது அமலாக்கத் துறை. 2015-ம் ஆண்டு  பி.ஏ.சி.எல் நிறுவனத்தின்  நிர்வாகிகள் மற்றும் நிர்வாக அலுவலர்கள்மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஆஸ்தி ரேலியாவிலுள்ள அந்த மோசடி நிறுவனத்தின் தொடர்புடைய அசையாச் சொத்து கண்டு பிடிக்கப் பட்டது.அந்தச் சொத்தா னது, பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) பதிவு செய்யப் பட்டு, அந்த நிறுவனத்தின் சொத்துக் கணக்கோடு இணைக்கப்பட்டுள்ளது.