Published:Updated:

ட்விட்டர் சர்வே - உங்கள் குடும்பத்தில் எத்தனை செல்போன்?

ட்விட்டர் சர்வே - உங்கள் குடும்பத்தில் எத்தனை செல்போன்?
பிரீமியம் ஸ்டோரி

பெரிய, சிறிய நகரங்களைத் தாண்டி கிராமப்புறங்களிலும் புகுந்திருக்கிறது செல்போன். கடந்த 15 ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பத்தை மக்கள் தேடிச் சென்று ஏற்றுக்கொண்டதுபோல, வேறெந்த தொழில்நுட்பத்தையும் ஏற்றுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. இன்றைக்கு உங்கள் குடும்பத்தில் எத்தனை செல்போன்கள் இருக்கின்றன என்று நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு கேள்வியைக் கேட்டோம். இந்த ட்விட்டர் சர்வேயில் நமக்குத் தெரியவந்த தகவல்கள் சுவாரஸ்யமானவை.

ட்விட்டர் சர்வே - உங்கள் குடும்பத்தில் எத்தனை செல்போன்?

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் சுமார் 81% பேர் தங்கள் குடும்பத்தில் ஒரு நபருக்கு ஒரு செல்போன் இருப்பதாகச் சொல்லி யிருக்கின்றனர். தகவல்தொடர்புத் துறையில் இது மிகப் பெரிய வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும். இனி தனிமனிதர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் செல்போன் மூலம் அனுப்பிப் பயன்பெறச் செய்ய வைக்க முடியும்.

ட்விட்டர் சர்வே - உங்கள் குடும்பத்தில் எத்தனை செல்போன்?

இந்த சர்வேயில் 13% பேர், தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இரண்டு செல்போன்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கின்றனர். தவிர, அலுவலகத்துக்கு ஒரு போன், தனிப்பட்ட முறையில் ஒரு போன் எனச் சிலர் வைத்துக்கொள்ளத் தொடங்கி யிருப்பதையே இது காட்டுகிறது.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்கள் 6% பேர் மட்டுமே இருவருக்கு ஒரு போன் இருப்பதாக சொல்லியிருக்கின்றனர். குறைவான வருமானம் ஈட்டுகிற குடும்பத்தில் இந்த நிலை இருக்கலாம். அல்லது செல்போன் பயன்படுத்துகிற அளவுக்குக் கல்வியறிவு இல்லாத குடும்பத்தில் இந்த நிலைமை இருக்கலாம். எதிர்காலத்தில் இந்தச் சதவிகித எண்ணிக்கையும் குறையவே வாய்ப்புண்டு. 

ட்விட்டர் சர்வே - உங்கள் குடும்பத்தில் எத்தனை செல்போன்?

அடுத்த சில ஆண்டுகளில், நூறு சதவிகித மக்களையும் சென்றடையப் போகும் செல்போனை வெறும் பொழுதுபோக்கு மட்டும் பயன்படுத்தாமல், பயனுள்ள காரியங்களுக்குப் பயன்படுத்துவது நல்லது.

-ஏ.ஆர்.கே