“பட்ஜெட்டுக்குப்பிறகு சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக உள்ளதே... இப்போது நான் என்ன செய்ய வேண்டும்..?’’, ‘‘மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் சேர்த்த தொகையைத் திரும்ப எடுத்து விடலாமா?”, ‘‘எஸ்.ஐ.பி முதலீட்டைத் திரும்ப எடுத்துவிட்டு, அந்தப் பணத்தை எஃப்.டி.யில் போட்டுவிடலாமா?’’ என வாசகர்கள் பதற்றத்துடன் கேட்டனர்.

இன்டகிரேட்டட், என்.எஸ்.டி.எல், என்.எஸ்.இ, சிட்டி யூனியன் வங்கி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து நாணயம் விகடன் புதுக்கோட்டையில் நடத்திய ‘அஸெட் அலோகேஷன்... செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா’ நிகழ்ச்சியில் தான் முதலீட்டாளர்கள் இத்தனை கேள்விகளையும் எழுப்பினார்கள்.
இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய என்.எஸ்.டி.எல் நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் சிவப்பழம் டீமேட் நடைமுறைகள் குறித்தும், இன்டகிரேட்டட் நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் லாபம் பார்க்கும் சூட்சுமங்கள் குறித்தும், இன்டகிரேட்டட் இன்ஷூரன்ஸ் உதவிப் பொது மேலாளர் ஆர்.குருராஜன், நம் மதிப்பை அறிந்து இன்ஷூரன்ஸ் எடுக்கும் வழி முறைகள் குறித்தும் விளக்கமாகப் பேசினார்கள். இறுதியாகப் பேசிய நிதி ஆலோசகர் பா.பத்மநாபன், அஸெட் அலோகேஷன் முறைப்படி முதலீடு செய்வது ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை அதிகரிக்க உதவும் என விளக்கினார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டு பதற்றமடையாதீர்கள். நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்டுகளின் செயல்பாடு நன்றாக இருக்கும் பட்சத்தில் நீண்ட காலத்தில் சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கடந்து, பணவீக்கத்தைத் தாண்டிய நல்ல வருமானம் கிடைக்கும். எனவே, எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தாமல் செய்யுங்கள்’’ என விளக்கமளித்தார்.

சந்தை இறக்கம் கண்டுள்ள நிலையில், பதற்றத்தில் இருந்த முதலீட்டாளர்கள் நிபுணர் களின் பேச்சைக் கேட்டுத் தெளிவடைந்தனர்!
- கா.முத்து சூரியா
படங்கள்: எம்.அரவிந்த்