Published:Updated:

ஃபண்ட் டேட்டா! - 12 - சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்... - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

ஃபண்ட் டேட்டா! - 12 - சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்... - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் டேட்டா! - 12 - சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்... - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

த்திய அரசின் பட்ஜெட் 2018-ல்  பிரதானமாக இருந்தது கிராமப்புற இந்தியாவுக்கான திட்டங்கள்தான். ஆகவே, கிராமப்புறங்களை அடிப்படையாக வைத்தும் தொழில் செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் எனலாம். மேலும், இன்று கிராமப்புறங்களில்தான் அதிகமான மக்கள்தொகை உள்ளது. அங்குதான் இன்னும் பூர்த்தியாக வேண்டிய தேவைகள்/கனவுகள் பல உள்ளன.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக கிராமப்புறங்கள் இருக்கப் போகின்றன. இந்தக் கருவின் அடிப்படையில் இயங்கிவருவதுதான் சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட். இனிவரும் காலத்தில் கிராமப்புற வளர்ச்சியில் அரசாங்கத்தின் கவனம் அதிகமாக இருக்கும் என்பதே இந்த ஃபண்டை நாம் பரிந்துரைக்கு எடுத்துக்கொண்டதற்கான முக்கியக் காரணம் ஆகும்.

இது ஒரு மல்ட்டிகேப் ஃபண்டாகும். இதன் போர்ட்ஃபோலியோவில் சுமார் 52% லார்ஜ்கேப் பங்குகளிலும், எஞ்சியது ஸ்மால் அண்டு மிட்கேப் பங்குகளிலும் உள்ளது.

கிராமப்புறங்களில் கனிசமாக தொழில் செய்யும் நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யூனிலீவர், மஹிந்த்ரா & மஹிந்த்ரா, ஐ.டி.சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மாருதி போன்ற நிறுவனங்களிலும் இன்னும் பல நிறுவனங்களிலும் தனது முதலீட்டை வைத்துள்ளது.

ஃபண்ட் டேட்டா! - 12 - சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்... - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

இந்த ஃபண்ட் இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சியில் அதீத நம்பிக்கை வைத்துள்ளது. அதுபோல கிராமப்புற மக்களின் கைகளில் வருங்காலத்தில் அதிகமாக பணப்புழக்கம் இருக்கும் என்றும் நம்புகிறது.

இந்த ஃபண்ட் நான்கு கிராமப்புற தீம்களில் தனது முதலீட்டுக் கவனத்தை விரிவாகச்  செலுத்துகிறது. அவை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபண்ட் டேட்டா! - 12 - சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்... - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

* விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் – உரங்கள், ட்ராக்டர்கள், பூச்சி மருந்துகள், ரசாயனங்கள், சர்க்கரை ஆலைகள்.

* கிராமப்புற நுகர்வு – மோட்டார் பைக், பிஸ்கட், ஏ.சி, சோப், அழகு சாதனப் பொருள்கள் போன்ற நுகர் பொருள் நிறுவனங்கள்.

* கிராமப்புறங்களில் நிதி சேவை வழங்கும் நிறுவனங்கள்

* கிராமப்புற வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் துணைத் துறைகள்/நிறுவனங்கள் – சிமென்ட், பெயின்ட் போன்றவை.

எஸ். கிருஷ்ணகுமார் இதன் ஃபண்ட் மேனேஜராக இருக்கிறார். இவரே இந்த நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரியும் ஆவார். சுந்தரம் செலக்ட் மிட்கேப் போன்ற ஃபண்டுகளையும் இவரே வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.

இந்த ஃபண்டின் பீட்டா 0.97 என்ற அளவில் சந்தையைவிட சற்றுக் குறைவாகவும், ஆல்ஃபா 9.02 என்ற அளவிலும் உள்ளது. தற்சமயத்தில் 91 சதவிகிதத்துக் கும் அதிகமான பங்குகளில்  இந்த ஃபண்ட் தனது முதலீட்டை வைத்துள்ளது.

ஃபண்ட் டேட்டா! - 12 - சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்... - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

எஃப்.எம்.சி.ஜி துறையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி முதலீட்டை வைத்துள்ளது இந்த ஃபண்ட். அடுத்தகட்டமாக கெமிக்கல்ஸ், கன்ஸ்ட்ரக் ஷன், ஆட்டோமொபைல், ஃபைனான்ஸ் போன்ற துறைகளில் தனது முதலீட்டை வைத்துள்ளது.

குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆகிய இரு ஆப்ஷன்களையும் இந்த ஃபண்ட் வழங்குகிறது. இனிவரும் காலங்களில் அனைத்துப் பங்கு சார்ந்த ஃபண்டுகளிலும் டிவிடெண்டுக்கு மூலத்திலேயே 10% வரி பிடித்தபிறகுதான் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வரும் என்பதை கருத்தில்கொண்டு, ஆப்ஷனை முதலீட்டாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதுபோல, நீண்டகால முதலீட்டு ஆதாய வரி 10% உரித்தாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த அறிவிப்புகள் சமீபத்திய பட்ஜெட்டில் வந்துள்ளன.

2006-ம் ஆண்டில் ஃபண்ட் துவங்கிய போது ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.4,23,470-ஆக உள்ளது. இது சி.ஏ.ஜி.ஆர் அடிப்படையில் 13.09% ஆகும்.

இது ஒரு தீம் சார்ந்த ஃபண்ட் என்ப தால், ரெகுலர் டைவர்சிஃபைடு ஃபண்டைவிட சற்றுக் கூடுதலான ரிஸ்க் இதில் உள்ளது. ஆகவே, உங்களின் போர்ட்ஃபோலியோவில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை இந்த ஃபண்டுக்கு ஒதுக்கலாம்.

சந்தையைவிட அதிகமான ரிஸ்க்கை எடுக்க விரும்புபவர்கள் மற்றும் கிராமப் புற வளர்ச்சியில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஃபண்டில் தாராளமாக முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் டேட்டா! - 12 - சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்... - எல்லா வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்!

   யாருக்கு உகந்தது?

அனைத்து வயதினர், முதன்முறை முதலீட்டாளர்கள், பணம் உபரியாக உள்ளவர்கள், சந்தையைவிட சற்று அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பங்கு சார்ந்த முதலீட்டில் மீடியம் ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், பணம் உடனடித் தேவையில்லாதவர்கள்.

   யார் முதலீடு செய்யக்கூடாது?

குறுகிய காலத்தில் பணம் தேவைப் படுபவர்கள், முதலீடு செய்வதற்கு சர்ப்ளஸ் இல்லாதவர்கள், உறுதியான/ நிலையான வருமானத்தை விரும்புப வர்கள், ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் குறித்துப் போதிய ஞானம் இல்லாதவர்கள்.