Published:Updated:

சென்னையில் தங்கம் விலை மேலும் சரிவு!

சென்னையில் தங்கம் விலை மேலும் சரிவு!
சென்னையில் தங்கம் விலை மேலும் சரிவு!
சென்னையில் தங்கம் விலை மேலும் சரிவு!

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.624 குறைந்துள்ளதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் தங்கத்தின் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த ஜனவரி  22ஆம் தேதி, 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக மத்திய அரசு திடீரென்று உயர்த்தியது. இதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்தது.

இதனிடையே, அமெரிக்க பொருளாதாரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நல்ல எழுச்சி ஏற்பட்டதன் விளைவாக தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தங்கத்தினை விற்பனை செய்து, அதற்கு பதிலாக பங்குசந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக தங்கத்தின் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 11ஆம் தேதி ஒரு பவுன் தங்களம் ரூ.22,080க்கு விற்பனையானது. 12ஆம் தேதி பவுனுக்கு ரூ.352 விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.21,728க்கும், 13ஆம் தேதி பவுனுக்கு மேலும் ரூ.672 விலை குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.21,056க்கும் விற்பனையானது.

##~~##
இந்த நிலையில் நேற்று தங்கம் அதிரடியாக ஒரே நாளில் ரூ.984 விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.20,072க்கு விற்பனையானது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் அதிரடியாக பவுனுக்கு ரூ.2008 விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.2,509க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.20,072கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே,  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.624 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.20 ஆயிரத்திற்கும் கீழே இறங்கி ரூ.19,448 விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2730 விலை குறைந்ததால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை குறைந்து இருப்பதால் சென்னை பெரம்பூர், புரசைவாக்கம், தியாகராய நகர் உள்பட நகரின் முக்கிய பஜார் வீதிகளில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.