நாணயம் விகடன், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் இணைந்து ‘செல்வம் சேர்க்கும் செயல் திட்டம்’ எனும் தலைப்பில், மியூச்சுவல் ஃபண்ட் குறித்த முதலீட்டாளர்கள் விழிப்புஉணர்வு நிகழ்ச்சியைத் திருநெல்வேலியில் நடத்தின.இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஏ.ஹெச். முகம்மது இப்ராஹிம் ஆகியோர் பேசினார்கள்.

முகம்மது இப்ராஹிம் முதலீட்டின் அவசியம் குறித்தும், முதலீட்டின் தன்மை குறித்தும் விரிவாகப் பேசினார். “தென்னை மரம், முதல் தென்னங்காயைக் கொடுப்பதற்குக் குறைந்தது ஆறு வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. மேலும், அது தன்னுடைய அதிகபட்ச விளைச்சலைத் தருவதற்கு 15 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. ஆனாலும், அதற்குத் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறோம். முதலீடும் அப்படித்தான். முதலீடு நீண்டகாலத்தில் அதிகப் பலனைத் தரவல்லது. ஆனால் நாம் அதைப் புரிந்துகொள்ளவில்லை” என்றார். நம்முடைய இலக்குக்கேற்ப முதலீடுகளைத் திட்டமிடுவதுதான் சரியானது என்றும் அவர் விளக்கினார்.

சொக்கலிங்கம் பழனியப்பன், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த பல நுணுக்கங்கள் குறித்து சுவாரஸ்யத்துடன் விளக்கினார். “இந்தியச் சந்தைகள் மீது சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் அதிகரித்தே இருக்கிறது. அதனால்தான் பெரு நிறுவனங்களின் பெரும்பகுதி பங்கு சதவிகிதம் வெளிநாட்டினரின் வசமே உள்ளன. தற்போது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. மேலும், மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் இனிவரும் ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுதான் லாபகரமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.

- ஜெ.சரவணன்

படங்கள்: எல்.ராஜேந்திரன்