Published:Updated:

ஃபண்ட் டேட்டா! - 14 - டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட்... ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற ஃபண்ட்!

ஃபண்ட் டேட்டா! - 14 - டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட்... ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற ஃபண்ட்!
பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் டேட்டா! - 14 - டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட்... ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற ஃபண்ட்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

ட்சியம் பெரிதா அல்லது வருமானம் பெரிதா என்றால், நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? நம்மில் பலர் லட்சியத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். காரணம், நாம் ஓய்வுக்காலத்திற்காகப் பணம் சேர்க்க வேண்டும் என்பதை ஒரு லட்சியமாக எடுத்துக்கொண்டால், அந்த லட்சியத்தை அடைவதுதான் பெரிது.

கொஞ்சம் கூடவோ அல்லது குறையவோ இருக்கலாம். ஆனால், பணம் நமக்கு உறுதியாகத் தேவை. நம்மில் பலர், ‘இன்று எனக்கு அதிக வருமானம் வேண்டும்’ என்ற எண்ணத்தில், ஓய்வுக்காலத்திற்கான முதலீட்டை அதற்காக அமைக்கப்பட்ட ஃபண்டுகளில் முதலீடு செய்யாமல், எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளக்கூடிய ஃபண்டுகளில் முதலீடு செய்கிறோம் – ஒருசில சதவிகிதம் அதிக வருமானம் கிடைக்கும் என எண்ணி! அதன் அசௌகரியம் என்ன? ரிட்டையர்மென்ட் தவிர, வேறு முக்கியத் தேவைகள் வரும்போது அந்த முதலீட்டை எடுத்து உபயோகித்து விடுகிறோம். அப்போது உங்களின் லட்சியம் பூர்த்தி அடையாமல் போய்விடுகிறது.

ஃபண்ட் டேட்டா! - 14 - டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட்... ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற ஃபண்ட்!

ஆகவேதான் இந்த வாரம், உங்களின் ஓய்வுக் கால லட்சியத்திற்காக ஒரு கான்செப்ட் ஃபண்டை பரிந்துரை செய்கிறோம். டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்டில் மூன்று வகைகள் உள்ளன– புரொகிரஸிவ் பிளான், மாடரேட் பிளான் மற்றும் கன்சர்வேட்டிவ் பிளான். ஆட்டோமேட்டிக்காக பிளான் ஸ்விட்ச் ஆகும் வசதியும் உள்ளது. ஒருவர் 30 வயதில் புரொகிரஸிவ் பிளானில் நுழைந்தால், ஆட்டோ மேட்டிக்காக 45 வயதில் மாடரேட் பிளானிற்கு முதலீடுகள் மாறிவிடும். அதுபோல் 60 வயதில் கன்சர்வேட்டிவ் பிளானிற்கு மாறிவிடும். மேலும், பென்ஷன் போல் முதலீட்டாளரின்            60-ஆவது வயதிலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தை அல்லது குறிப்பிட்ட தொகையை மாதாந்திரமோ அல்லது காலாண்டிற்கு ஒரு முறையோ பெறும் வசதியும் உள்ளது.

இந்த ஃபண்டில் முதலீடு செய்பவர்கள், தங்களின் 60 வயதுவரை பணத்தை எடுப்பதை இத்திட்டம் ஊக்குவிப்பதில்லை. 60 வயதிற்கு முன் பணத்தை வெளியில் எடுத்தால் 1% வெளியேற்றுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதலீடு செய்த முதல் 3 வருடங்களுக்குள் பணத்தை வெளியில் எடுத்தால், வெளியேற்றுக் கட்டணம் 3% ஆகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபண்ட் டேட்டா! - 14 - டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட்... ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற ஃபண்ட்!

நாம் இங்கு அலச எடுத்துள்ளது, முழுக்க முழுக்க பங்கு சார்ந்த திட்டமான புரொகிரஸிவ் பிளானைத்தான். இளம் வயதினர் இத்திட்டத்தைத் தாராளமாக தங்களின் ஓய்வுக் காலத் தேவைகளுக்காகத் தேர்வு செய்து, முதலீடு செய்யலாம். இத்திட்டம் ஒரு மல்ட்டிகேப் திட்டமாகும்.

ஃபண்ட் டேட்டா! - 14 - டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட்... ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற ஃபண்ட்!

தற்போது ரூ.389 கோடி மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் ஸோனம் உதாசி ஆவார். இவரே டாடா ஈக்விட்டி பி/இ திட்டத்தையும் வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். இத்திட்டத்தை நாம் பரிந்துரைக்கு எடுத்துக்கொண்டதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்றுக் கடந்த காலங்களில் இந்த ஃபண்டின் சிறந்த செயல்பாடு. மற்றொன்று இதுபோன்ற கான்செப்ட் ஃபண்டுகளில் மக்கள் முதலீடு செய்து, தங்களின் இலக்குகளை அடைந்து பயன்பெற வேண்டும் என்பதே.

இந்த ஃபண்டில் ஃபைனான்ஸ், சர்வீசஸ், ஆட்டோமொபைல், கன்ஸ்ட்ரக்‌ஷன் மற்றும் எஃப்.எம்.சி.ஜி துறைகள் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இதன் பீட்டா, சந்தையையொட்டி 0.99 என்ற அளவிலும், ஆல்ஃபா 6.11 என்ற அளவிலும் சிறப்பாக உள்ளன.

ஃபண்ட் டேட்டா! - 14 - டாடா ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட்... ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற ஃபண்ட்!

யெஸ் பேங்க், எல் அண்டு டி, ஹெச்.டி.எஃப்.சி, மாருதி சுஸூகி, பவர் கிரிட் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இதன் போர்ட்ஃபோலியோ வில் 56% லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளிலும், எஞ்சியது நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 6+ வருடங்களுக்கு முன்பு, இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.2,83,630-ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டிற்கு 18% வருமானம் ஆகும்.

ஓய்வுக்காலத்திற்கு நிச்சயம் பணம் தேவைப்படுபவர்கள், ஓரிரு சதவிகிதம் அதிக வருமானத்தைவிட லட்சியம் முக்கியம் என நினைப்பவர்கள், லாக்-இன்-ஐ விரும்புபவர்கள், பென்ஷன் வசதி இல்லாதவர்கள், பி.பி.எஃப், பி.எஃப் போன்றவற்றுக்கான (ரிஸ்க்குடன் கூடிய) அதிக வருமானம் உள்ள மாற்று முதலீடுகளை விரும்புபவர்கள் போன்ற அனைவரும் இத்திட்டத்தில் எஸ்.ஐ.பி முறையிலும், சந்தை இறக்கத்தைப் பயன்படுத்தி மொத்தமாகவும் தாராளமாக முதலீடு செய்யலாம்.