Published:Updated:

“எது தொழில் தர்மம்?” விளக்கும் சுரேஷ் கிருஷ்ணா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“எது தொழில் தர்மம்?” விளக்கும் சுரேஷ் கிருஷ்ணா
“எது தொழில் தர்மம்?” விளக்கும் சுரேஷ் கிருஷ்ணா

“எது தொழில் தர்மம்?” விளக்கும் சுரேஷ் கிருஷ்ணா

பிரீமியம் ஸ்டோரி

தென்னிந்தியாவைச் சேர்ந்த வெற்றி பெற்ற தொழில்முனைவோர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்ச்சியை, இந்தியத் தொழில் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான  சி.ஐ.ஐ-யின் தென் மண்டலம் சமீபத்தில் நடத்தியது.  ‘வளர்ந்துவரும் தொழில்முனைவோர் விருது’ ஐந்து தொழில்முனைவோர்களுக்கு அளிக்கப் பட்டது.

கவின்கேர் பிரைவேட் லிமிடெட்டின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன் இந்த விருதுக் குழுவின் தலைவராகவும், சி.ஐ.ஐ தென் மண்டலத்தின் முன்னாள் தலைவரும், டெய்லர் ரப்பர் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநருமான டி.டி.அசோக், விருது பெறும் நபர்களைத் தேர்வு செய்வதற்கான நடுவர் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார்கள்.  இந்த நிகழ்ச்சியில் சி.ஐ.ஐ-யின் முன்னாள் தலைவரும், சுந்தரம் ஃபாசனர்ஸ் பி.லிட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான சுரேஷ் கிருஷ்ணா, விழாவுக்குத் தலைமையேற்று, விருது வழங்கி சிறப்புரை யாற்றினார்.

‘‘ஒரு நிறுவனத்தின் நோக்கமானது, அதன் தலைமையில் இருப்பவரின் எண்ணமாக  மட்டும் இல்லாமல், அந்த நிறுவனத்தில் முன்னேற்றத் துக்காக உழைக்கும் பணியாளர்களின் எண்ணங் களின் கலவையான வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும். அது காலச்சூழலுக்கேற்ப மாற வேண்டும்.பணியாளர்களுக்கும், நிர்வாகத்துக்குமான தொடர்பானது மிகவும் நெருக்கமாக, வெளிப்படையாக இருப்பதும், தமது கருத்துக்கு நிர்வாகம் மதிப்பளிக்கிறது என்ற நம்பிக்கையுமே நிறுவனத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் சக்திமிக்க வழிமுறையாகும்.

“எது தொழில் தர்மம்?” விளக்கும் சுரேஷ் கிருஷ்ணா

ஒரு தொழில்முனைவோரின் தொழில் தர்மம் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து வதுமே. சிறு சிறு தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தொழில்முனைவோர்களின் வெற்றியே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும்’’ என்று அவர் பேசி முடித்தபோது அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள். இனி விருது பெற்றவர்கள் பற்றிப் பார்ப்போம்.

   பிஎஸ் அப்பேரல்


இந்த நிறுவனத்தின் தலைவர் பி.விஜயராகவன். இவர், பின்னலாடைத் தயாரிப்புக்கு உதவும் பல்வேறுவிதமான துணிகள் மற்றும் சந்தையில் அவற்றுக்கான தேவை குறித்துத் தெரிந்து வைத்திருப்பதே இந்த நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றியதன் காரணமாக, வாடிக்கையாளர்களின் தற்போதைய ட்ரெண்ட், தேவை உள்ளிட்டவை குறித்து இவர் நுணுக்கமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.

   சிக்னி எனர்ஜி பி. லிட்


இந்த நிறுவனத்தின் தலைவர் வெங்கட் ராஜாராமன், புராடக்ட் டிசைனிங்கில் 20 ஆண்டு கால அனுபவமிக்கவர். அமெரிக்காவிலுள்ள சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். என்.சி.பி.ஆர்.இ (National Center for Photovoltaic Research and Education -NCPRE)) அட்வைஸரி கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.

   இன்டெலிஜோன் எனர்ஜி பி. லிட்

இந்த நிறுவனத்தின் தலைவர் குஷாந்த் உப்பல். சென்னை ஐ.ஐ.டி-யில் பி.டெக். மற்றும் சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் மற்றும் பி.ஹெச்.டி முடித்துள்ளார். கலிபோர்னியா விலுள்ள சிலிக்கான்வேலியில் முன்னணித் தொழில்நுட்பப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றியவர். ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா வரை விரிந்த உலகளாவிய நிறுவனத்தில் தயாரிப்பு, ரிசர்ச் & டெவலப்மென்ட், மார்க்கெட்டிங் துறைகளை நிர்வகித்தவர்.

   ஸ்டெல்லாப்ஸ் டெக்னாலஜீஸ் பி. லிட்

பெங்களூரைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ரஞ்சித் முகுந்தன். இவர் சிகாகோவிலுள்ள இல்லினாய்ஸ் ஆஃப் டெக்னாலஜியில் டெலிகாம் & சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் துறையில் எம்.எஸ் முடித்தவர். புதுமுயற்சியாக ஐ.ஐ.டி-யில் படித்து முடித்தவர் களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் இணைத்து இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

  சைஃபோ ஆர்&டி சொல்யூஷன்ஸ்


சென்னையைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் தலைவர் ராஜ்பிரகாஷ். எலெக்ட்ரிகல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் துறையில் பி.இ. முடித்த இவர், லைஃப் சயின்ஸ், பேங்கிங் உள்ளிட்ட தகவல்தொழில்நுட்பத் துறைகளில்  பணியாற்றியுள்ளார். இவர், பாம்புகளைக் காப்பாற்றுவதில் ஆர்வத்துடன் செயல்படுபவர்.

விருது பெற்றவர்களுக்கு நாணயம் விகடனின் வாழ்த்துகள்!

- தெ.சு.கவுதமன்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு