ஏழு பேருக்குச் சொந்தமான பாகம் பிரிக்கப்படாத சொத்தினை, யாராவது ஒரு பாகஸ்தர் மூன்றாவது நபருக்கு விற்பனை செய்ய உரிமை உண்டா?

சுந்தரமூர்த்தி, கீழத்திருமாணிக்கம்.

அழகுராமன், வழக்கறிஞர்.

''ஏழு பேருக்குச் சொந்தமான பாகம் பிரிக்கப்படாதச் சொத்து, கூட்டு குடும்பச் சொத்து. அது பாகம் பிரிக்கப்படாததால் எந்த பாகம் யாருக்கு என்பது தெரியாது. ஆனால், ஒரு பாகஸ்தர் தன்னுடைய பாகம் பிரியாத 1/7 பாகத்தை மூன்றாம் நபருக்கு விற்க முடியும். அப்படி விற்பதற்கான உரிமை அவருக்கு உண்டு. ஆனால், எந்த பாகம் யாருக்கு என்பதைப் பாகப் பிரிவினையின் போதுதான் தெரிந்து கொள்ள முடியும். அப்படி பிரிக்கும்போது ஒரு குறிப்பிட்ட பகுதிதான் வேண்டும் என கோர முடியாது.''

அந்நிய செலாவணி என்றால் என்ன?

சுரேஷ், திருப்பத்தூர்.

. கிருஷ்ணன், .முதன்மை மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி. .
''வெளிநாடுகளோடு தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகள் எல்லாமே அந்நியச் செலாவணிதான். அதாவது, ஒரு நாட்டின் பணத்திற்கு ஈடாக மற்றொரு நாட்டின் பணத்தை வாங்குவது. அரசு, நிறுவனங்கள், தனிநபர்கள் மேற்கொள்கிற வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகள் எல்லாமே அந்நியச் செலாவணி என்கிற வகைக்குள் வந்துவிடும். குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து வாங்கக்கூடிய கடன்கள், கொடுக்க வேண்டிய கடன்கள் மற்றும் இறக்குமதி - ஏற்றுமதி வர்த்தக நடவடிக்கைகள், பணப் பரிமாற்றம் போன்ற அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் அந்நியச் செலாவணிக்குள்தான் வருகின்றன.'

நீண்டகால நோக்கில் முதலீடு செய்வதற்கான பங்குகளையோ அல்லது கம்பெனிகளையோ எப்படி தேர்வு செய்வது?

செந்தில், பொள்ளாச்சி.

ஏ.எஸ்.ராமகிருஷ்ணன். இயக்குநர், ரிலையபிள் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்.

''சந்தையில் நல்ல நிலையில் இருக்கும் புளூசிப் நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்து அவற்றில் முதலீடு செய்வது நல்லது. முதலீடு செய்ய விரும்பும் நிறுவனம் சார்ந்திருக்கும் துறை, குறிப்பிட்ட நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள், நிதிநிலை இருப்பு, பங்குகள் கொடுக்கும் டிவிடெண்ட் தொகை மற்றும் அந்நிறுவனத்துக்கு இருக்கும் சொத்துக்கள், எதிர்கால ஆர்டர்கள் போன்றவற்றைக் கவனிக்க வேண்டும். தவிர, அந்த பங்கு பற்றிய டெக்னிக்கல் அனாலிசிஸ் ரிப்போர்ட்டையும் கவனிக்க வேண்டும். மேலும், அந்நிறுவனம் அல்லது பங்குகள் பற்றிய ரிசர்ச் ரிப்போர்ட்டுகளையும் படித்துவிட்டு முதலீடு செய்யலாம்.''

பார்க்கிங் பகுதியையும் பத்திரப்பதிவு செய்து கொள்ள வேண்டுமா?

கதிரேசன், பூந்தமல்லி.

மணிசங்கர், தலைவர், தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன்.

''மற்ற குடியிருப்புவாசிகளோடு எதிர்காலத்தில் பிரச்னைகள் இல்லாமல் இருக்க, உங்களுக்கான கார் பார்க்கிங் ஏரியாவை தெளிவாக குறிப்பிட்டு பதிவு செய்துகொள்வது நல்லது. இதை உங்கள் மனையின் அளவோடுச் சேர்த்தே பதிவு செய்து கொள்ளலாம்.''

எனக்கு ஆறு வயதிலும் மூன்று வயதிலுமாக இரண்டு பெண் குழந்தைகள். இவர்கள் பெயரில் மாதம் 2,000 முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். எந்த வகை மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்யலாம்?

பழனிச்சாமி, ஈரோடு.

சுவாமிநாதன், ஓம் ஸ்பெக்ட்ரம் ஃபைனான்ஷியல் கன்சல்டன்ட்ஸ்.

''குழந்தைகள் பெயரில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதில்லை. பெற்றோர்கள்கூட அவர்கள் பெயரில் முதலீடு செய்யலாம். நீண்டகால நோக்கிலான முதலீடு என்பதால் ஆறு வயது குழந்தைக்காக கோல்டு மியூச்சுவல் ஃபண்டிலும், மூன்று வயது குழந்தைக்காக லார்ஜ்கேப் ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட் என இரண்டிலும் தலா ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம்.''

நான் டீமேட் கணக்கு வைத்திருக்கும் நிறுவனத்தில் புரோக்கிங் கமிஷன் போக வேறு சில பிடித்தங்களையும் செய்கிறார்கள். இது தொடர்பாக புகார் அளிக்க முடியுமா? யாரை அணுகுவது?

சுந்தரராஜன், சென்னை.

லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்.

''பொதுவாக எல்லா புரோக்கிங் அலுவலகங்களுமே கணினிமயமாக மாறிவிட்டதால் எந்த வகையிலும் உங்களிடமிருந்து கூடுதலாக பணத்தை வாங்க வாய்ப்பிருக்காது. புரோக்கிங் கமிஷன், சேவைக் கட்டணம், பங்கு பரிமாற்றக் கட்டணம் மற்றும் சில வழக்கமான கட்டணங்கள் தவிர வேறு எதையும் உங்களிடமிருந்து வசூலிக்க முடியாது. உங்களிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக நீங்கள் உணர்ந்தால், வேறு ஒரு புரோக்கிங் நிறுவனம் இதுபோன்ற ஒரு பரிவர்த்தனைக்காக வசூல் செய்யும் கட்டணங்களோடு உங்களது கட்டணங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதற்கு பின்னரும் நீங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்ந்தால், சம்பந்தப்பட்ட புரோக்கிங் நிறுவனம் எந்த பங்குச் சந்தையில் உறுப்பினராக உள்ளதோ அதனிடம் புகார் தெரிவிக்கலாம். அப்படியும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், செபியை அணுக வேண்டும்.

வீட்டுக் கடனில் பகுதி தொகையை (பார்ஷியல் பிரீபேமன்ட்) கட்டினால் 80 - சி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்குமா?

ரவிச்சந்திரன், சென்னை

இளங்குமரன், ஆடிட்டர்.

''வரிவிலக்கு பெறக்கூடிய வகையினங்களில் (80சி) வீட்டுக் கடனுக்காக முன்கூட்டியே செலுத்தும் அசல் தொகையும் வருகிறது. அப்படி கட்டும்போது இந்த தொகை மற்றும் பி.எஃப்., லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம் எல்லாம் சேர்ந்து ஒரு லட்சத்துக்குத்தான் வரி சேமிக்க முடியும். கையில் கூடுதல் தொகை இருந்தால் அதனை கடன் சார்ந்த ஃபண்டுகளில் போட்டு வைத்துவிட்டு, அந்த தொகையை அடுத்த நிதி ஆண்டில் வீட்டுக் கடனுக்குப் பகுதி தொகையாக கட்டினால் அந்த ஆண்டிலும் வரிச் சலுகையை அனுபவிக்க முடியும்.''