டீமேட் கணக்குத் தொடங்கணுமா?

பங்குச் சந்தையில் ஷேர் வாங்க டீமேட் கணக்கு அவசியம் தேவை. வங்கிகள் மற்றும் புரோக்கிங் நிறுவனங்கள் மூலம் இந்த டீமேட் கணக்கைத் தொடங்கலாம். இந்த கணக்கைத் தொடங்க பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பான் கார்டு, முகவரிச் சான்று (ரேஷன் கார்டு / மின்சாரக் கட்டண ரசீது போன்றவை) புகைப்படச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை) அவசியம் வேண்டும். இந்த கணக்கை ஓராண்டு காலத்திற்குப் பராமரிக்க 300-500 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டியிருக்கும்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்!

. குறைவான வருமானம் உடையவர்களுக்கு திடீரென ஏற்படும் பெரிய மருத்துவச் செலவுகளை தவிர்க்க, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி அவசியம் வேண்டும். நீங்கள், உங்கள் மனைவி மற்றும் குழந்தை என மூன்று பேருக்கு குறைந்தது 2 லட்சம் ரூபாய்க்கு இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ள ஆண்டு பிரிமீயம் 3,600 ரூபாய். (இந்த பிரீமியம் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு) மாதம் 300 ரூபாய் வீதம் பன்னிரெண்டு மாதங்கள் சேர்த்து, இந்த பணத்தைக் கட்டிவிட்டு, மருத்துவச் செலவை ஈஸியாக சமாளிக்கலாம்!.
எஃப்.டி. - 5 விஷயங்கள்!

மாதாந்திரச் சேமிப்புக்காக ஃபிக்ஸட் டெபாசிட்டை தேர்வு செய்யும்போது பின்வரும் முக்கியமான ஐந்து விஷயங்களை நீங்கள் அவசியம் கவனிக்க வேண்டும்.

முதலீட்டுத் தொகைக்கான வட்டி!

மறுமுதலீடு செய்யும் வசதி!

முதிர்வு காலத்திற்குமுன் பணம் எடுத்தால் எவ்வளவு அபராத கட்டணம்?

ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் பணம் நமக்கு பிறகு யாருக்குச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்யும் நாமினி வசதி..!

வரிச் சலுகை!

800 ரூபாயில் 20 பங்குகள்!

800 ரூபாயில் 20 பங்குகள் வாங்க முடியுமா? நிச்சயம் முடியும். மார்க்கெட் சரிந்திருக்கிற இந்த சமயத்தில் நல்ல அடிப்படை கொண்ட சில பங்குகள் மலிவான விலையில் கிடைக்கின்றன. சென்னையைத் தலைமையிடமாக கொண்ட, கனரக வாகனங் களைத் தயாரிக்கும் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை வெறும் 25 ரூபாய். இதே துறையைச் சேர்ந்த நம்மூர் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 54 ரூபாய். (பங்கின் விலை 13.12.11 நிலவரப்படி). விலை குறையக் குறைய ஒவ்வொரு மாதமும்கூட இந்த பங்குகளை வாங்கி, நீண்ட காலத்திற்கு வைத்திருக்கலாம்!

தவணையில் பொருள் வாங்குறீங்களா?

யெஸ் எனில் இதைக் கொஞ்சம் கவனிங்க!

பண்டிகை காலங்களில் கவர்ச்சிகரமான ஆஃபர்களுடன் இந்தத் தவணை அறிவிப்புகள் வரும். இந்த சமயத்தில் இரண்டாம் தரமான பொருட்களை நம் தலையில் கட்டிவிட வாய்ப்புண்டு. எனவே, உஷார்!

பொருள் வாங்க முன்பணம் உங்களிடம் இல்லையெனில், தவணை முறையில் பொருள் வாங்க வேண்டாம். முன் பணத்தையும் வட்டிக்கு கடன் வாங்கி, பொருளுக்கும் வட்டி கட்டினால், இரண்டு விதமான வட்டி கட்டுகிறீர்கள் என்பதை மறக்காதீர்கள்.

உங்களுக்குத் தேவை என்றால் மட்டுமே தவணைத் திட்டத்தில் பொருள் வாங்குங்கள். சுலபமாக இருக்கிறது என்பதற்காக பொருட்களை வாங்கி, சுமையை அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள்!

- செ.கார்த்திகேயன்

முடிஞ்சவரை சேமிக்கிறேன்!

''கோயம்புத்தூர்ல இருக்குற தனியார் நிறுவனத்துல மேலாளராக வேலை செஞ்சுட்டு இருக்கேன். என் மாச சம்பளம் 10,000 ரூபாய். எனக்கு கல்யாணமாகி நாலு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு. ஒத்திக்கு குடியிருக்கறதால வீட்டு வாடகை இல்லை. குடும்பச் செலவு, கல்விச் செலவுன்னு மாசம் 6,000 ரூபாய் வரைக்கும் போயிடும். மீதி இருக்குற 4,000 ரூபாயில 2,500 ரூபாயை 50,000 ரூபாய் சீட்டுக்கு கட்டிக்கிட்டு வர்றேன்.

ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 மற்றும் சுந்தரம் செலக்ட் மிட்கேப் ஃபண்டுகள்ல மாசம் தலா 500 ரூபாய் முதலீடு செய்ஞ்சுட்டு வர்றேன். மீதி இருக்குற 500 ரூபாயை என்னுடைய சொந்த செலவுகளுக்குப் பயன்படுத்திக்குவேன். சிக்கனமா செலவு செஞ்சாக்கூட இந்த வருமானம் பத்தலை. எதிர்காலத்துக்காக அதிகமாக முதலீடு செய்ய முடியலை.அதனால விரைவில் வருமானத்தைப் பெருக்க சொந்தமாக தொழில் தொடங்கலாம்ன்னு இருக்கேன்''.