குடும்பத்திற்காகச் சம்பாதிப்பது கணவனாக இருந்தாலும் அதை செலவிடுவது என்னவோ குடும்பத் தலைவியான மனைவிதான். அவர் எந்தளவுக்கு குடும்பத்தை வரவுக்குள் செலவு செய்கிறாரோ, அதைப் பொறுத்தே அந்த குடும்பத்தின் பொருளாதாரம் இருக்கும். இதற்கொரு உதாரணமாக இருக்கிறார் பழைய வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் ஷோபா ரமேஷ்பாபு. மாலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ரிலாக்ஸ்-ஆக உட்கார்ந்திருந்தவர் தனது ஃபைனான்ஸ் நிர்வாகம் பற்றி தெளிவாக எடுத்துச் சொன்னார்.

. ''எங்களுக்கு கல்யாணம் முடிந்து 12 வருஷம் ஆகுது. காதல் கல்யாணம்தான். எங்க கல்யாணத்துக்கு எங்க வீட்ல பெரிசா எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஆனா, எங்க மாமியார் வீட்டுல என்னை ஏத்துக்கிட்டாங்க. .
கல்யாணத்திற்கு முன்பு வரை நான் கஷ்டம்னு பெரிசா அனுபவிச்சதில்லை. ஆனா, எனக்கு கல்யாணம் முடிந்து கூட்டுக் குடும்பத்தில் வாழ வந்தேன். எங்க மாமியார், நாத்தனார் அவங்க பசங்கன்னு பெரிய குடும்பம் என் கணவருடையது. இதுல எங்க வீட்டுக்காரர் சம்பாதிக்கிறதை வச்சுதான் மொத்த குடும்பத்தையும் நடத்தணும். அப்ப அவருக்கு 4,000 ரூபாய்தான் சம்பளம். அவருக்கு சேல்ஸ் ஆபீஸர் வேலை. ஆனா, நாலு இடம் சுத்த அவர்கிட்ட வண்டி கிடையாது. எங்கே போகணும்னாலும் பஸ்லதான் போயிட்டு வருவார். அதனால் அவர் வீட்டுக்கு வர ராத்திரி 11 மணி ஆயிடும். அவரு வர்ற வரைக்கும் நான் காத்துக்கிட்டு இருப்பேன்.

அவர் படுற கஷ்டத்தைப் பார்த்து நானும் சில மாதத்துல வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். என்னோட இரண்டாவது பொண்ணு பிறந்த பிறகு கருத்தடை ஆபரேஷன் செஞ்சு கிட்டேன். அப்பகூட ஆபீஸுக்குப் போறதை நான் நிறுத்தவில்லை. வலி - வேதனையோட வேலைக்குப் போன அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது.

பிறகு ஆறு வருஷத்துக்கு அப்புறம் நாங்க பெரம்பூருக்கு தனியா குடித்தனம் போனோம். ஒரு வருஷம் தனியாத்தான் இருந்தோம். ஆனா, எங்க மாமியாருக்கு உடம்பு சரி இல்லாததால அவங்களையும் பெரம்பூருக்கே கூட்டிட்டு வந்தோம். அதுக்கு பிறகு மருத்துவச் செலவு, அது இதுன்னு வரவுக்கு மீறின செலவு ஆக ஆரம்பிச்சிடுச்சு.

வாடகையா தர்ற பணத்தை வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாமேன்னு திரும்பவும் மாமியார் வீட்டுக்கே வந்துட்டோம்.

இந்த வீடு பழசுதான்; வசதிங்க குறைவுதான். அதனால எங்க நாத்தனார் எல்லாம் தனியா வீடு பார்த்துட்டு போயிட்டாங்க. பெரம்பூர்ல இருந்த வரைக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செஞ்சு கிட்டு இருந்தேன். வண்ணாரப்பேட்டைக்கு வந்தபிறகு நான் முழுநேரமா வேலைக்குப் போறதில்லை. பிள்ளைகளும் வளர்ந்துட்டாங்க; பெரிய பொண்ணு அனு ஆறாம் வகுப்பு, சின்னப் பொண்ணு ஆஷா ஐந்தாம் வகுப்பும் படிக்கிறாங்க. அவங்க படிப்புக்கும் கொஞ்ச நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கு. தவிர, என் கணவரோட வருமானமும் கூடியிருக்கு.

முழு நேரமா வேலைக்குப் போக முடியலைன்னாலும் பகுதி நேரமா வேலைக்குப் போய்ட்டு இருக்கேன். வீட்டு வேலைகளை முடிச்சிட்டு சும்மாதானே இருக்கோம்னு ஒரு மார்வாடிகிட்ட அக்கவுன்ட்ஸ் பார்த்துட்டு இருக்கேன். தவிர, 10-11 மணி வரை தபால் நிலையத்துல போஸ்ட்உமேனா வேலை பார்க்குறேன். அதுபோக, மத்த நேரத்துல ஏதாவது செஞ்சு சம்பாதிக்கணுங்கிறதுக்காக எம்.எல்.எம். மார்க்கெட்டிங் செஞ்சு மாசத்துக்கு 4,500 ரூபா சம்பாதிக்கிறேன். இப்படி ஒண்ணுக்கு மூணு வேலை செஞ்சுதான் வருமானத்தைப் பெருக்கி, செலவைக் கட்டுப்படுத்தி சேமிப்பும் செய்ய முடியுது.

என் கணவருடைய சம்பளம் மாசம் பிறந்த உடனே வராது. அது வர்ற வரைக்கும் என் சம்பளத்தை வைச்சு குடும்பத்தை நடத்துவேன். அவரு சம்பளம் வந்ததுக்கப்புறம் அதை சேமிப்புக்குன்னு தனியா வச்சிக்குவேன். இப்படி சேமிச்ச பணத்துலதான் ஃபிரிட்ஜ், டிவி., பீரோன்னு பல பொருளை வாங்கி இருக்கேன். என் கணவருக்கு ஒரு வண்டியும் வாங்கி இருக்கோம். நகை விக்கிற விலைக்கு எங்கள மாதிரி ஆளுங்க ஒரே நேரத்துல போய் வாங்கிட முடியாதுங்கிறதால நகைச் சீட்டும் போட்டு வர்றேன்.

செலவுகளை எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சதாலதான் எங்க குடும்பம் ஓரளவுக்கு முன்னுக்கு வந்திருக்கு. கல்யாணம் ஆன புதுசுல ஓட்டல், சினிமா, பீச்சுன்னு நிறையவே ஆடம்பரச் செலவு எல்லாம் செஞ்சிருக்கோம். ஆனா, இப்ப அது எல்லாம் கிடையாது. குழந்தைங்க ஆசைபடுறதால மாசத்துக்கு ஒரு முறை பீச், சினிமா போவோம். எப்பயாவது ஓட்டலுக்குப் போவோம். குழந்தைங்க பிறந்த சமயத்துல அவங்க கேட்டதை எல்லாம் வாங்கித் தந்தோம். ஆனா, இப்ப கொஞ்சம் அதட்டி முடியாதுன்னு சொல்லிடறேன். அப்பதான் அவங்களுக்கு பணத்தோட அருமை புரியும். அத்தியாவசியத் தேவைன்னா தான் ஒரு பொருளை வாங்கணும்னு தெரியும். நாங்களும் தேவை இல்லாமல் எந்த செலவையும் செய்யறதில்லை.

நாங்க இப்ப இருக்கிற வீட்டை இடிச்சுட்டு புதுசா கட்டணும்ங்கிறதுதான் என் ஆசை. இதுக்காக கடந்த ரெண்டு வருஷமா ரொம்பவே சிக்கனமா இருக்கோம். எங்க கனவு இல்லம் கட்டி முடிக்கிற வரைக்கும் இப்படி சிக்கனமா இருக்கணும். வேறு வழியே இல்லை!''

- பானுமதி அருணாசலம்,
அ.முகமது சுலைமான்
படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்