Published:Updated:

ரூ.15 லட்சம் தங்கம் கடத்தி வந்த இலங்கை வாலிபர் கைது!

ரூ.15 லட்சம் தங்கம் கடத்தி வந்த இலங்கை வாலிபர் கைது!
ரூ.15 லட்சம் தங்கம் கடத்தி வந்த இலங்கை வாலிபர் கைது!

சென்னை: இலங்கையில் இருந்து விமானம் மூலம் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வாலிபரை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

##~~##
இலங்கை திரிகோணமலையை சேர்ந்த முகம் மதுரியாஸ், இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது, சந்தேகத்தின் பேரில் முகம் மதுரியாஸ் வைத்திருந்த லேப் டாப்பை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, வழக்கத்துக்கு மாறாக லேப் டாப் அதிக எடையுடன் காணப்பட்டது.
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், லேப் டாப்பை திறந்து பார்த்த போது தங்க பிஸ்கட்டுகளை தகடாக மாற்றி லேப் டாப்பில் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, லேப் டாப் உள்பட 6 தங்க தகடுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து மதுரியாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
600 கிராம் எடை கொண்ட தங்க தகடின் மதிப்பு ரூ.15 லட்சம்  என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.