‘‘பொதுத்துறை வங்கியில் உள்ள மக்களின் பணம் 100% பாதுகாப்பாக இருக்க, மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவும்” என சமீபத்தில் சொன்னார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். மத்திய அமைச்சர் இப்படிப் பேசியதன் அர்த்தம் என்ன, பொதுத்துறை வங்கிகளில் உள்ள பணம் பாதுகாப்பாக இல்லையா என்கிற கேள்வி எழுந்தது.

இதற்குக் காரணம், கடந்த நிதியாண்டின் (2017-18) முடிவில் 19 வங்கிகள், தன்னுடைய நிதிநிலை அறிக்கையில் நஷ்டத்தைக் காட்டி யுள்ளன. இரண்டே வங்கிகள் மட்டும் லாபத்தைக் காட்டியுள்ளன. இந்த நிலையில், நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளின் நிலை குறித்து பலரும் கவலை கொண்டுள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளின் நஷ்டத்தை ஈடுசெய்ய, பொதுமக்களிடம் பெறப்படும் வரிப் பணத்தைப் பயன்படுத்தி வருகிறது மத்திய அரசு. ஆனால், வாடிக்கையாளர்களின் முழுப் பணத்தையும் பாதுகாக்கும் வகையில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்படும் டெபாசிட் தொகைக்கு எந்தவிதமான உத்தர வாதமும் இல்லை என்பதே தற்போதைய நிலை.

ரிசர்வ் வங்கியின்கீழ் இயங்கும் பொதுத் துறை வங்கிகள், டெபாசிட் இன்ஷூரன்ஸ் அண்டு கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன் (Deposit Insurance and Credit Guarantee Corporation) நிறுவனத்தில் ரூ.1 லட்சத்துக்கு ரூ.10 மட்டும் இன்ஷூரன்ஸ் பிரீமியமாகச் செலுத்திவருகின்றன. இந்த வகையில், 2016-17-ம் நிதியாண்டில் 188.50 கோடி வங்கிக் கணக்குகள் பாதுகாப்பு வளையத்தில் உள்ளன. இதில், 92% கணக்குகள் முழுமையாகவும், 8% கணக்குகள் பகுதியாகவும் இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ளன.

வங்கிகளில் மொத்தம் ரூ.103.53 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் 70% தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட வில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தி.

கிரெடிட் இன்ஷூரன்ஸ் கேரன்டி கார்ப்பரேஷன் நிறுவனத்தில், இதுவரை 336 கூட்டுறவு வங்கிகள் ரூ.4,738.77 கோடி க்ளெய்ம் பெற்றிருக்கிறார்கள். 2017-ம் ஆண்டில் மட்டும் 27 தனியார் வங்கிகள் ரூ.295.90 கோடியும், பல்வேறு மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள் ரூ.58.63 கோடியும் க்ளெய்ம் பெற்று உள்ளனர். கிரெடிட் இன்ஷூரன்ஸ் கேரன்டி கார்ப்பரேஷன் 2017-ம் ஆண்டில் இழப்பீடு வழங்க மட்டுமே ரூ.223.10 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக அதன் நிதிநிலை அறிக்கையில் தெரிந்துள்ளது.

இதுகுறித்து கனரா வங்கியின் உதவிப் பொது மேலாளர் (ஓய்வு) செல்வமணியிடம் பேசினோம்.

``வங்கி வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கென தனியே இன்ஷூரன்ஸ் கிடையாது. அதற்காக வாடிக்கை யாளர்களிடம் எந்தத் தொகையும் பெறுவதில்லை. வங்கிகளுக்கென உள்ள `டெபாசிட் இன்ஷூரன்ஸ் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷனில்’ ஒவ்வொரு வங்கியும் டெபாசிட் தொகைக்குத் தகுந்தாற்போல் இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்தும்.

ஒருவேளை, வங்கி திவாலாகி மூடப்படும் நிலை வந்தால், எவ்வளவு தொகை டெபாசிட் செய்திருந்தாலும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது 30 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. அதை மாற்றியமைப்பது அரசின் கையில்தான் உள்ளது.

ஆனால், இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் தற்போது சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. ஒவ்வொரு வங்கிக்கும் அரசாங்கம் பெரிய அளவில் நிதி வழங்குகிறது. எனவே, வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை’’ என்றார்.

சாதாரண மக்கள் வங்கியில் டெபாசிட் செய்துள்ள தொகைக்கு எந்தப் பாதிப்பும் வராமல் இருந்தால் சரி!

- ஞா.சக்திவேல் முருகன்