பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி!

உருளைக்கிழங்கு!

கமாடிட்டி!

இந்த வாரத்தில் உருளைக்கிழங்கு 3.5 சதவிகிதம் வரை அதிகரித்து மார்ச் கான்ட்ராக்ட் 600 ரூபாய்க்கு ஒரு குவிண்டால் வர்த்தகமானது. ஆனால், இந்த வாரத்தில் வந்த உணவு பணவீக்கம் 1.8 சதவிகிதம் குறைந்ததற்கு மிக முக்கிய காரணமே உருளைக்கிழங்கின் விலை குறைவினால்தான். போன வருடத்தைவிட இந்த வருடம் 50% விலை இறங்கியிருக்கிறது. இப்படியிருக்கும்போது இந்த கமாடிட்டியின் விலை இந்த வாரத்தில் அதிகரித்துள்ளது தற்காலிக நிலைமைதான். இந்த விலையேற்றத்தை நம்பி டிரேடர்கள் லாங்க் போக வேண்டாம்.

மிளகு!

என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் ஜனவரி 20-ல் முடியும் கான்ட்ராக்ட்டில் குவிண்டாலுக்கு 35,000 ரூபாய்க்கு (டிசம்பர் 23-ம் தேதியன்று) வர்த்தகமானது. இது முந்தைய தினத்தைவிட 4% குறைவு.

2011-ம் ஆண்டு மிளகு உற்பத்தி 49,000 டன்னாக இருந்தது; வரும் ஆண்டில் 45,000 டன்னாக இருக்கும் என சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இது சுமார் 10-15% குறைவு என்பதால் விலை இன்னும் அதிகரிக்க  வாய்ப்பிருக்கிறது. அதனால்  டிரேடர்கள் லாங்க் போகலாம்.

சென்னா!

##~##
இந்திய பருப்பு மற்றும் தானிய வகைகளின் அமைப்பான ஐ.பி.ஜி.ஏ. வரும் ஆண்டில் பருப்பு வகைகளின் உற்பத்தி 5-10% குறையும் என சமீபத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், விவசாயத் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னா அதிக இடங்களில் விளைச்சல் செய்யப்பட்டுள்ளதால் உற்பத்தி அதிகரிக்கும் என சொல்லியிருக்கிறது. சென்னாவைப் பொறுத்தவரை உள்நாட்டில் உற்பத்தி குறைந்தால் வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். அப்படி இறக்குமதி செய்யப்படும் நாடுகளான பர்மா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் உற்பத்தியை கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால், கனடா மற்றும் பர்மாவில் உற்பத்தி குறைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் விலை இன்னும் குறைந்தாலும் டிரேடர்கள் வாங்கலாம்.'
கமாடிட்டி!


வெள்ளி!

தங்கத்தின் விலை இறக்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கடந்த வாரம் இறக்கத்தையே கண்டது. தங்கத்தையாவது வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், வெள்ளியை சீண்டுவதற்கே ஆளில்லை. வெள்ளி விலை இன்னும் குறையும் என்று  நினைத்து யாரும் வாங்க முன்வரவில்லை.

எம்.சி.எக்ஸ். கமாடிட்டி சந்தையில் ஒரு கிலோ வெள்ளிக்கான மார்ச் மாத கான்ட்ராக்ட் கடந்த 23-ம் தேதி மாலை 7.30 மணிக்கு 52,894 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனால், சர்வதேச சந்தையில் குறைந்த அளவிற்கு, இந்திய சந்தையில் வெள்ளி விலை குறையவில்லை. காரணம், டாலரின் மதிப்பு உயர்வால் அதிக ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. அதனால் டாலர் இறங்கினால் இந்தியாவில் வெள்ளி விலையும் குறையும்.

கமாடிட்டி!


ரப்பர்!

கமாடிட்டி!

சமீப நாட்களில் ரப்பரின் விலை அதிக ஏற்ற, இறக்கம் இல்லாமல் நடுநிலையாக இருக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இந்த ஆண்டு குறைந்ததை அடுத்து ரப்பரின் தேவை 9,77,000 டன்னுக்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று ரப்பர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், அதிக வட்டி விகிதம் காரணமாக ஆட்டோமொபைல் விற்பனை இந்த ஆண்டு குறைந்திருப்பதாலும் ரப்பரின் தேவை குறைந்துள்ளது.

உலக சந்தைகளில் ரப்பரின் விலை அதிகரித்தாலும் உள்நாட்டில் ரப்பர் தயாரிப்பு அதிக ஏற்றுமதி காரணமாக விலை குறைந்தே காணப்பட்டது.

கமாடிட்டி!


மஞ்சள்!

உள்நாட்டு தேவை அதிகரித்ததாலும், பொங்கலுக்கு அதிகளவில் மஞ்சள் வாங்குவதற்கு வியாபாரிகளிடமிருந்து ஆர்டர்கள் வந்துள்ள தாலும் இந்த வாரம் மஞ்சளின் விலை குவிண்டாலுக்கு இருநூறு ரூபாய் அதிகரித்தது.

டிசம்பர் 22-ம் தேதி விரலி மஞ்சள் குவிண்டால் 4,755 - 5,499 ரூபாய்க்கும், சாதாரண மஞ்சள் 4,064 - 4,359 ரூபாய்க்கும் விற்பனையானது. வரும் வாரத்திலும் இதன் தேவை இருக்கும் என்பதால் விலை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

-பானுமதி அருணாசலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு