புத்தகத்தின் பெயர் : ஹெள கம் தட் இடியட் இஸ் ரிச் அண்டு ஐயம் நாட்? (How Come That Idiot’s Rich and I’m Not?)

ஆசிரியர் : ராபர்ட் ஷெமின் (Robert Shemin)

பதிப்பகம் : Crown Business

‘‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றி பெற்ற மனித ரெல்லாம் புத்திசாலி இல்லை’’ - பல பத்தாண்டுகளுக்குமுன்பு சந்திரபாபு பாடிய பாடல் நமக்குப் பல உண்மைகளை எடுத்துச்சொல்லும். ‘அந்த மனிதன் ஐந்தாம் கிளாஸ்கூட படிக்கவில்லை. ஆனா, ஐந்தாயிரம் கோடி சம்பாதிச்சுட்டாரே!’ என்று நாம் திரும்பத் திரும்ப கேட்டு ஆச்சர்யப்படுவோம். நமது இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறது இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் ராபர்ட் ஷெமின் என்பவர் எழுதிய ‘ஹெள கம் தட் இடியட் இஸ் ரிச் அண்டு ஐயம் நாட்?”

“பள்ளியில் படிக்கும்போது மிகக் குறைவான மதிப்பெண் வாங்குகிறவன், கடையில் சில்லறை சரியாக வாங்கத் தெரியாதவன் என நமக்குத் தெரிந்த முட்டாள்கள் பலரும் பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். நாம் முதல் மதிப்பெண் வாங்கி, சில்லறையெல்லாம் பைசா சுத்தமாக வசூல் பண்ணக்கூடிய புத்திசாலியாக இருந்தும் நம்மால் பணம் சம்பாதிக்க முடியவில்லையே, ஏன்..?’’ என்கிற முக்கியமான கேள்வியை எடுத்த எடுப்பிலேயே எழுப்புகிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

“பள்ளியில் சரியான மதிப் பெண்களைப் பெறாத, பள்ளிக்கே ஒழுங்காகப்போகாமல், படிப்பைத் தொடர முடியாத ஒரு முட்டாளாக இருந்தபோதிலும், பணம் சம்பாதிக்கத் தெரிந்த முட்டாளாக உருவெடுத்தேன். வாழ்வியல் முட்டாள்தனங்கள் வேறு; பணம் சம்பாதிக்கத் தேவையான புத்திசாலித்தனங்கள் வேறு என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டதால்தான் என் வாழ்வில் சுபிட்சமே ஏற்பட்டது. அந்த ரகசியங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தப் புத்தகம்” என்று சொல்லும் ஆசிரியர், இந்தப் புத்தகம் வாயிலாக பணம் சம்பாதிக்க நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில ரகசியங்களைச் சொல்கிறார்.

“படிப்பு வராத காரணத்தால் உணவகம் ஒன்றில் டேபிள் துடைக்கும் வேலைக்குச் சேர்ந்தேன். அமெரிக்க மொழி வழக்கில் ‘பிசிபாய்’ என்பதுதான் டேபிள் துடைக்கும் நபரின் தொழில்ரீதியான பதவியின் பெயர். நான் அந்தப் பெயரை மாற்றி, ‘மேசை பராமரிப்புப் பொறியாளர்’ (டேபிள் மெயின்டெனன்ஸ் இன்ஜினீயர்) என என்னை அழைத்துக் கொள்வேன். அந்தப் பதவியைப் பொறித்த பேட்ஜை அணிந்தே நான் வேலை பார்ப்பதை மற்ற ‘பிசிபாய்’கள் என்னைக் கிண்டல் செய்வார்கள். ஆனால், அந்தப் பதவியில் நான் இருப்பதாக வாடிக்கையாளர்களுக்குச் சொல்வதால், எனக்கு ஏனைய ‘பிசிபாய்’களைவிட அதிக டிப்ஸ் கிடைக்கும்.

அந்த வேலையிலிருந்து நான் உணவு பரிமாறும் பணியாளராகப் பதவி உயர்வு பெற்றேன். அப்போது நான் என்னை ‘மேசை சேவை வல்லுநர்’ என அழைத்துக் கொள்வேன். அந்தப் பணியில் நான் வாரம் 800 டாலர் சம்பாதிப் பேன். அது அந்த நேரத்தில் என் பள்ளி ஆசிரியர்கள் சராசரியாக ஈட்டிய வருமானத்தை விட அதிகம். நான் என்னுடைய பதவி களுக்கு விளையாட்டாகப் புதிய பெயரைக் கொடுத்தாலும், அது என் வருமானத்தை அதிகரிக்கவே உதவியது. அதுவே பின்னாளில் என் வாழ்க்கையில் பல விஷயங் களைப் பெற உதவியது” என்று சொல்லும் ஆசிரியர், எவ்வாறு அந்தக் குணம் தனக்கு உதவியது என்பதைப் பட்டியலிடுகிறார்.

“அது என் வருமானத்தை நான் தீர்மானிக்க அது உதவியது. நான் செய்யும் வேலையைப் பெருமிதத் துடன் செய்தேன். அதனாலேயே பல்வேறு புதுப் பெயர்களை உருவாக்கினேன். மாறாத வாரக் கூலி என்பதைவிட அன்றாடம் ஏற்ற இறக்கத்துடன் கூடிய வருமானம் (டிப்ஸ் மூலம்) என்பதை மதிக்கத் தொடங்கினேன். எரிந்து விழும் சமையல்காரர் முதல் கடித்துக் குதறும் வாடிக்கையாளர் வரை எப்படி மனிதர்களைக் கையாள்வது என்று தெரிந்து கொண்டேன். இவையே என் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தது.

என்னை முட்டாள் என்று சொன்ன பள்ளி ஆசிரியர் அனை வருக்கும் நன்றி. ஏனென்றால், என்னை முட்டாள் என்று ஓரம் கட்டியதாலேயே நான் பிழைப்புக் காக வேறு பாதைகளைத் தேடிப் போனேன். கொஞ்சம் பரவா யில்லை என என்னை அனுசரித்துப் படிக்கவிட்டிருந்தால் என்னவா யிருக்குமோ” என்கிறார் ஆசிரியர்.

“பணக்கார முட்டாள்கள் அவர்கள் பணத்தை வேலைக்கு அனுப்பிவிட்டு, ஜாலியாக வீட்டில் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். ஒரு செயலைச் செய்வது குறித்து, பணக்கார முட்டாள்கள் எப்போதுமே என்னால் முடியாது என்று சொல்வதே யில்லை. எப்படி அதைச் செய்துமுடிப்பது என்ற கேள்வியையே கேட்கின்றனர். அதனால் முடியாது என்ற வார்த்தையை உங்கள் அகராதியிலிருந்து எடுத்து வெளியே வீசிவிடுங்கள் என்கிறார் ஆசிரியர்.

பள்ளிப் பாடத்தை ஒழுங்காகப் படிப்பவர்களுக்கு ஒரு பெரிய சிக்கல் உருவாகிறது. உலகத்தை எதிர்கொள்ளும் போது, அவர்கள் படித்த பாடத்தை விட்டு அவர்களுக்கு வெளியேவரும் கலை தெரிந்திருக்கவேண்டும் என்று எச்சரிக்கும் ஆசிரியர், ஒரு விஷயம் குறித்து நீங்கள் மிக ஆழமாக யோசித் தால், நீங்கள் நிச்சயம் தோற்றுத்தான் போவீர்கள் என்கிறார்.

பிறவியில் நாம் அனைவரும் முட்டாள்களே. இது என்ன, அது என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனேயே அனைவரும் பிறக்கிறோம். பயம் என்பது அறவே இல்லாமலேயே பிறக்கும் நாம், பள்ளிக்குச் செல்லும்வரை ஆர்வத்தி லேயும், பயமில்லாமலும் உலகத்தைக் கற்றுக்கொள்கிறோம். நல்லது செய்தால் அரவணைப்பும், தவறுகள் செய்து பிரச்னைகள் வந்தால் பாதுகாப்பும் நமக்கு அந்த வயதில் கிடைக்கிறது. ஆனால், பள்ளிக்குச் சென்றபின்னர் சட்டதிட்டங்களுக்கு வளைந்து கொடுத்து, அடங்கிப்போகக் கற்றுக் கொள்கிறோம். 18 வருடம் அடங்கிப் போதல் என்ற நிலைக்குப்பின்னால், இருக்கும் இடத்தின் நடைமுறை சட்டத்துக்குக் கட்டுப்படும் சிறந்த மனிதனாக உருவெடுத்துவிடுகிறோம். ஆனால், பண விஷயத்தில் கோட்டை விட்டுவிடுகிறோம். ஆளுகைக்குப் பழகிவிட்ட நாம் பணம், சம்பாதிக்க முதல் தகுதியே ஆர்வத்தில் புதியன செய்து (சட்டமெல்லாம் கிடக்கட்டும் – இது மக்களுக்குத் தேவை என்று கணித்து) பார்ப்பதையே முழுமையாக மறந்துபோகிறோம்.

இங்கேதான் முட்டாள்களின் வெற்றி சாத்தியமாகிறது. முட்டாள்கள் சட்டத்துக்குக் கட்டுப்படுவதில்லை. உலகம் எனக்கு உதவும் என்ற நம்பிக்கையில் செயல்படுவார்கள். எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவார்கள். பரந்து விரிந்த உலகில் எனக்கு வாய்ப்புகள் பல இருக்கிறது என நம்பு வார்கள். என்னிடம் இருக்கும் செல்வத்திற்கு நான் தகுதியானவன் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கும்.

மாறாக, புத்திசாலிகளோ உலகம் ரொம்ப மோசமானது. ஆசைப்படுவது தவறு. உலகில் வாய்ப்புகள் குறைவு. எனவே, இருப்பதைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் எனப் படாதபாடுபடுவார்கள். அடுத்தவர்கள் வசதியாக இருப்பதைப் பொறாமையோடு பார்ப்பார்கள். நான் எதற்கும் தகுதியானவன் இல்லை என்ற எண்ணத்தை நாளடைவில் வளர்த்துக்கொள்வார்கள் என்கிறார் ஆசிரியர்.

செலவுகள் மற்றும் கடன்கள் பற்றி விலாவாரியாகப் பேசும் ஆசிரியர், பணக்கார முட்டாள்கள் தங்களால் திருப்பிச் செலுத்த முடியும் என்ற கடனை மட்டுமே வாங்க முயற்சி செய்வார்கள் என்கிறார். தனிநபர் முன்னேற்றம் குறித்து பல முக்கியக் கருத்துகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை நிச்சயம் படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்

படிப்பு, உங்களைப் பணக்காரர் ஆக்காது!

புத்திசாலிகள் புத்திசாலித்தனமாகச் சேமித்து வாழ முயற்சி செய்கின்றனர். நாளைய வசதிக்கு வழி இன்றைய சேமிப்பு என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கிறது. வசதியான முட்டாள்களோ நாளைய வசதிக்கு வழி இன்றே வசதியாக வாழ்ந்துகாட்டுவது என்ற எண்ணத்தோடு வாழ்ந்துவரும் குணமுள்ளவர்கள். வசதியான முட்டாள்கள் எதிர்காலத்தில் வசதி வரும் என்று காத்திருப்பதில்லை. அதனால் இன்றைக்கே வசதியாக வாழ முனைகின்றனர். சில சமயம் இல்லாத வசதியைக்கூட இருப்பதுபோல் காட்டி வாழ்ந்து வெற்றி பெறுகிறார்கள் அவர்கள் என்கிறார் ஆசிரியர்.

படிப்பு, பணத்திற்கான வழிவகை செய்யாது என்று எச்சரிக்கும் ஆசிரியர், நீங்கள்தான் உங்கள் வாழ்வின் முதன்மை சொத்து. அதற்கு அடுத்தபடியான முக்கியமான சொத்து, உங்களுடைய நேரம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிறார் புத்தக ஆசிரியர்.