என் வயது 45. மாதச் சம்பளம் 75,000 ரூபாய். 58 வயதில் பணி ஓய்வு பெறும்போது ரூ.2 கோடி தொகுப்பு நிதியை உருவாக்கத் தேவையான ஆலோசனை கூறவும்.

கோதண்டராமன், கோபி செட்டிப்பாளையம்

ஸ்ரீகாந்த் மீனாட்சி,

துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா

“இன்னும் 13 வருடங்களில் ரூ.2 கோடி தொகுப்பு நிதியை உருவாக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஆண்டுதோறும் சராசரியாக 12% வருமானம் கிடைத்தால்கூட, மாதாமாதம் சுமார் ரூ.56,000 முதலீடு செய்தால்தான் உங்கள் இலக்கை எட்ட முடியும். உங்கள் வருமானம் ரூ.75,000 என்கிறபோது அது சாத்தியமா என்று தெரிய வில்லை. ஆனால், நீங்கள் ரூ.1 கோடிக்கு முயற்சி செய்தால், மாதமொன்றுக்கு ரூ.25,000 முதலீடு செய்து, இலக்கை எட்டுவது சாத்தியம். வருடம் 12% லாபம் கொடுக்கும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம்.’’

பெற்றோரின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் பிள்ளைகள் எந்த வயது வரை இருப்பார்கள்?

அருள்வளன், புதுக்கோட்டை

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

“மகன் எனில், 25 வயது அல்லது வேலை கிடைப்பது என்ற இரண்டில் எது முதலில் நடக்கிறதோ, அதுவரை பெற்றோரின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இணைந்திருக்கலாம். மகளைப் பொறுத்தவரை, திருமணம் அல்லது வேலை கிடைப்பது என இந்த இரண்டில் எது முதலில் நடக்கிறதோ, அதுவரை பெற்றோரின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இருக்கலாம்.”

என் வயது 40. தனியார் துறையில் பணியாற்றும் நான் முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டில் மாதாமாதம் 20,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய விரும்புகிறேன். பத்தாண்டு காலத்தில் அதிக வருமானத்தைப் பெற ஆலோசனை கூறவும்.

சுரேஷ்குமார், மார்த்தாண்டம்.

எஸ்.ராமலிங்கம் நிதி ஆலோசகர்

“உங்கள் வயது (40), முதலீடு செய்யும் காலம் (10 ஆண்டுகள்), முதன்முதலாக மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்பவர் என்கிற மூன்று விஷயங்களையும் கணக்கில்கொண்டு அஸெட் அலோகேஷனுடன்கூடிய (லார்ஜ்கேப், மிட் கேப், ஸ்மால்கேப், புளூசிப், ஹைபிரீட்) பரிந்துரை இதோ.

ரூ.4,000 வீதம் இன்வெஸ்கோ இந்தியா குரோத் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட், எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், எல் & டி ஹைபிரீட் ஈக்விட்டி ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்து பலன் பெறுங்கள்.”

ஈக்விட்டி ஃபண்ட் டிவிடெண்டுக்கு வரி கட்ட வேண்டுமா?

மணிகண்டன், கரூர்

எஸ்.பாலாஜி, ஆடிட்டர்

“மியூச்சுவல் ஃபண்ட் டிவிடெண்டுகளுக்கு முதலீட்டாளர்கள் வரி கட்டத் தேவையில்லை. 2018-19-ம் நிதியாண்டிலிருந்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் டிவிடெண்ட் விநியோக வரி 10% கட்ட வேண்டும். இந்த வரியை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்தியபின்னர் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் அளிக்கும். எனவே, நீங்கள் தனியாக வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை.’’

எனக்கு 50 வயது. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.25 லட்சம் முதலீடு செய்ய விரும்புகிறேன். எந்த மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்ததாக இருக்கும்?

சக்திவேல், திருப்பூர்

எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்

“ஈக்விட்டி ஃபண்டுகளில் ரூ.25 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்வது சரியான உத்தியல்ல. எனவே, மொத்த ரூபாயையும் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து, அதிலிருந்து எஸ்.ஐ.பி முறையில் வாரம் ரூ.50,000 வீதம் டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், லிக்விட் ஃபண்ட் மூலம் வரும் வருமானம், மூலதன ஆதாயம் மூலம் ஆண்டுக்கு 12 சதவிகிதத்திற்கு மேல் லாபம் கிடைக்கக்கூடும்.”

கடந்த ஏப்ரல் மாதம் வி.ஆர்.எஸ் பெற்றதற்காக எனக்கு ரூ.17 லட்சம் கிடைத்துள்ளது. இந்தத் தொகைக்கு நான் வரி கட்ட வேண்டுமா?

ராஜேந்திரன், கோவில்பட்டி

கே.ஆர்.சத்தியநாரயணன், ஆடிட்டர்

“விரும்ப ஓய்விற்காக பெற்ற தொகையில் ரூ.5 லட்சத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும். மீதித் தொகைக்கு வரி கட்ட வேண்டி வரும்.”

மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் டிவிடெண்ட் கிடைக்கிறது. ஒருவேளை வருமானம் இழப்பு ஏற்படுமானால் டிவிடெண்ட் கிடைக்குமா?

கார்த்திகேயன், சென்னை

விஜய்குமார், நிதி ஆலோசகர்

‘‘சில நேரங்களில் டிவிடெண்ட் உங்கள் முதலீட்டிலிருந்து வழங்கப் படலாம்; அது உண்மையான வளர்ச்சி அல்ல. அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட ஒரு காலம் வரை முதலீட்டை வளர அனுமதித்து, அதன்பிறகு சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் மூலம் திரும்பப் பெறுவது லாபகரமாக இருக்கும்.”

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.