Published:Updated:

ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்

ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்
ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்

இந்த இதழ்  நாணயம் விகடன் படிக்க: https://www.vikatan.com/nanayamvikatan/

ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்

கச்சா எண்ணெய்யை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இந்த விலை இறக்கத்தினால் நல்ல பலனடைய வாய்ப்புண்டு. எனவே, அவற்றின் பங்கு விலை உயர வாய்ப்புண்டு... ஆனால், சர்வதேச விலை இறக்கத்தில் கிடைக்கக்கூடிய முழுப் பலன்களையும், நுகர்வோருக்குத் திருப்பிவிடாததால், தொலைநோக்கு பார்வையில் முதலீடு சிறந்ததாக அமைய வாய்ப்புண்டு... இந்தத் தருணத்தில் பங்குகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, முதலீடு செய்வது அவசியம்!  - சரியான புரிதலையும் வழிகாட்டுதலையும் தருகிறது 'குறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்?' எனும் கவர் ஸ்டோரி.

ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது இந்தியாவில் 11% மக்களைச் சென்றடைந்திருக்கிறது. இந்த முக்கியமான இலக்கை எட்டுவதற்குக் காரணமாக அமைந்த முக்கியமான நிறுவனம் என்றால் அது ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்தான். இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் தனியார் நிறுவனமான இது, நமது சென்னையைச் சேர்ந்தது என்பதில் நாம் நிச்சயம் பெருமைப்படலாம். இதன் ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட் மற்றும் ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் ஆகிய இரு ஃபண்டுகள் கடந்த டிசம்பர் 1-ம் தேதியுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 25 ஆண்டுகளில் இந்த நிறுவனம் அடைந்த வளர்ச்சியானது வியப்பானது. அந்த வரலாற்றைச் சுருக்கமாகத் தருவதுடன், மியூச்சுவல் ஃபண்ட் குறித்த தகவல்களைத் தருகிறது 'கால் நூற்றாண்டைக் கடந்த ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்!' எனும் சிறப்புப் பார்வை.

ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்

என்.ஆர்.ஐ / ஓ.சி.ஐ-கள் தாய்நாட்டில் வாழும் இந்தியர்களைப் போன்றே ஏறக்குறைய அனைத்து சொத்துகளிலும் முதலீடு செய்யலாம். ஆனால், இதில் வேளாண் நிலத்துக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. பொதுவாக, என்.ஆர்.ஐ-கள் முதலீடு மூலம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பணப் பரிமாற்றம் செய்வதை அனுப்புதல் (Remittance) என்று கூறலாம்... - இதுபோல் என்.ஆர்.ஐ-கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யும்போது அவசியம் கவனிக்கவேண்டிய பல அம்சங்கள் உள்ளன. அவற்றைக் கச்சிதமாக சொல்கிறது 'முதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!' எனும் ஆர்ட்டிகிள். 

ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்

ஜி.டி.பி என்பது அதிமுக்கியமான பொருளாதார புள்ளிவிவரம் என்றாலும், நிறுவனங்களின் விற்பனை, வங்கிக் கடன், கரன்சி புழக்கம், வரிவசூல், பங்குச் சந்தைகள், அந்நிய முதலீடு, ரூபாய் மதிப்பு போன்ற முக்கிய பொருளாதாரக் காரணிகளில் ஏற்படும் மாற்றங்கள் பொருளாதாரத்தின் உண்மையான நிலையைப் புடம்போட்டுக் காட்டுகின்றன. தன்னாட்சி அமைப்புகள் வெளியிட வேண்டிய பொருளாதார புள்ளிவிவரங்களை, அரசியல் சார்புள்ள நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டது புதிய சர்ச்சையையும் எழுப்பியுள்ள நிலையில், 'ஜி.டி.பி குழப்பங்கள் ஏன்?' - சிறப்பு அலசல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த இதழ்  நாணயம் விகடன் படிக்க: https://www.vikatan.com/nanayamvikatan/

ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்

கேரளாவில் தனிநபர் வருமானம் அதிகமாக இருப்பதற்கு கல்வி முக்கியமான காரணம், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப் பட்டுள்ளதுதான். அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக 45 லட்சம் பெண்கள் வேலைகளில் உள்ளனர். அதனால் தனிநபர் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்றால் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்... - , பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தில் பொருளாதாரத்தில் பெண்களும் கலந்துகொள்ளும் பட்சத்தில் எவ்வளவு வலிமை (Power of Parity) பெற முடியும் என்பது குறித்த தகவலை மெக்கென்ஸி நிறுவனம் வெளியிட்டது. அதன் சுருக்கமான வடிவம்தான் 'பெண்கள் கைகொடுத்தால் பொருளாதாரம் எவ்வளவு உயரும்?' எனும் முக்கியப் பதிவு. 

ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்

இ.எம்.ஐ கடனைத் திரும்பச் செலுத்தும் 15 வருட அல்லது 20 வருட வாழ்க்கையில் சிக்கிக் கொள்பவர்கள் யார் என்று பார்த்தால்,   இன்றைய, நவீன முதலீட்டு முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதவர்களும், தெரிந்திருந்தும் அதில் முதலீடு செய்யத் தயங்கி ஒதுங்கி நிற்பவர்களும்தான்... - முதலீடு செய்வதற்கான எளிய முறைகளைச் சொல்லும் 'இ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்?' வழிகாட்டுதலை வாசிக்கத் தவறாதீர்கள்.

ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்


 
ரயில் முதல் ஸ்டேஷனிலிருந்து கிளம்புவதில் ஆரம்பித்து கடைசி ஸ்டேஷனுக்கு ரயில் போய்ச்சேரும் வரை, பயணியானவர் விபத்தையோ அல்லது இடர்பாட்டையோ சந்தித்து அவருக்கு இழப்பு ஏற்பட்டால், டிராவல் பாலிசி மூலம் க்ளெய்ம் பெறலாம். பயணம் செய்கிறவர் ரயிலில் ஏறும்போதோ, இறங்கும்போதோ பிரச்னைகளைச் சந்தித்தாலும் க்ளெய்ம் பெறலாம். - 'ரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்!' எனும் இந்திய ரயில் பயண பாலிசி குறித்து எளிதாக விளக்கும் பயனுள்ள கட்டுரை மிகவும் அவசியமானது. 

ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்

தனிநபர் கடன்கள் வழங்கப்படுவதற்கான செயல்பாட்டு நடைமுறைக் காலம் குறைவுதான் என்றாலும், அனுமதிக்கப்படும் கடன் அளவு, திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் போன்ற வற்றில் சில கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் சொத்துக் கடனில் அதிக நெகிழ்வுத்தன்மை, குறைந்த வட்டி, அதிக கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்த நீண்டகால அவகாசம் போன்ற சலுகைகள் கிடைக்கும்... - நம்மில் பலருக்கு நிதித் தேவைக்காக சுலபமாகக் கிடைக்கும் தனிநபர் கடனை வாங்குவதா அல்லது சொத்து அடமானக் கடனை வாங்குவதா என்கிற குழப்பம் இருக்கிறது. இந்தக் குழப்பத்தைத் தீர்க்கிறது 'சொத்து அடமானக் கடன் Vs தனிநபர் கடன்... உங்களுக்கு ஏற்றது எது?' எனும் வழிகாட்டுதல்கள்.

ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்

ஸ்மால்கேப் ஃபண்டுகள் வளர்ந்து வரக்கூடிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதால், இந்த விதமான ஃபண்டுகளின் வளர்ச்சி விகிதம் நீண்டகாலத்தில் அபரிமிதமாக இருக்கும். 10 வருடத்திற்கும் மேலான இலக்கு களுக்காக இந்த வித ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம். பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்நீண்டகாலத்தில் கிடைக்கும். இந்த வகை ஃபண்டுகளில் எந்தளவிற்கு வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளதோ, அதே அளவிற்கு ஏற்ற இறக்கங்களும் இருக்கும்... - ஸ்மால்கேப் ஃபண்டுகளில் உள்ள ரிஸ்குகளையும், அதிக வருமானத்தையும் உள்ளடக்கிய பார்வையைத் தருகிறது, 'ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை!' தொடர் பகுதி.

> சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

* இந்திய பங்குச் சந்தை சாண் ஏறினால் முழம் இறங்குவதாக இருக்கிறது. அதுவும் மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் அதிக இறக்கம் கண்டுள்ளன. இந்தியத் தேர்தல்கள், அமெரிக்க - சீன வர்த்தகப் போர் போன்ற வற்றால் சந்தை இன்னும் இறக்கம்காண வாய்ப்பு இருக்கிறது. அதிக ரிஸ்க்கைத் தாங்கக்கூடிய முதலீட்டாளர் கள் நன்கு இறங்கியிருக்கும் நல்ல நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம். மற்றவர்கள் விலகி நின்று வேடிக்கைப் பார்க்கலாம். 

- இதை இன்னும் விரிவாக விளக்குவதுடன் பங்குச்சந்தை ட்ரெண்டிங் தொடர்பான பல சந்தேகங்களுக்கும் பதிலளித்திருக்கிறார் ஷேர்லக். 
 

ஷேர் to இ.எம்.ஐ. - 5 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் பக்குவமான 11 அம்சங்கள்

கண் முழித்தவுடன் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டளையை மூளை பிறப்பிக்கிறது. அதன்பின் பல் துலக்கவேண்டும். அப்புறம் என்ன..?, அடுப்பைப் பற்றவைத்து காபி அல்லது டீ என்ற போடுவதுதானே!  இதற்கு மாறாக, காலையில் எழுந்த வுடன் போனை கையில் எடுத்தீர்கள் என்றால், எப்படி இருக்கும், இதனால் எந்த மாதிரியான தொடர் பழக்கவழக்கங்கள் வரும் என நினைத்துப்பாருங்கள்... - பெஞ்சமின் ஸ்பால், மைக்கேல் ஸான்டர் என்ற இருவர் எழுதிய ‘மை மார்னிங் ரொட்டீன் - ஹெள சக்சஸ்ஃபுல் பீப்பிள் ஸ்டார்ட் எவ்ரி டே இன்ஸ்பையர்டு’ என்னும் புத்தகத்தின் சிறப்பு அம்சங்களை நமக்குத் தருகிறது 'காலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி!' வழிகாட்டி கட்டுரை.

இந்த வார நாணயம்  விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  http://bit.ly/2QMfslK