தற்போதைய நிலையில் என்.சி.டி. அல்லது மியூச்சுவல் ஃபண்ட், இந்த இரண்டில் எது பெஸ்ட்டான முதலீடாக இருக்கும்?

சித்தார்த்தன், கள்ளக்குறிச்சி.

ஸ்ரீதேவி, நிதி ஆலோசகர், கேமோமைல் இன்வெஸ்ட்மென்ட் கன்சல்டன்ட்.

''என்.சி.டி-களை வெளியிடும் நிறுவனம் அடிப்படையில் வலுவான, சிறந்த நிர்வாகத்தைக் கொண்டதாக இருப்பது அவசியம். நிறுவனத்தின் கடந்த காலச் செயல்பாடுகள், இதற்கு முன் அவர்கள் வழங்கியுள்ள ரீபேமண்டுகள், எதிர்காலத் தொழில் வாய்ப்புகள், கையில் வைத்திருக்கும் ஆர்டர்கள் எல்லாவற்றையும் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் அந்நிறுவனத்தால் வட்டி மட்டுமல்லாமல் அசலையும் சரியாக திருப்பித் தரமுடியும். மியூச்சுவல் ஃபண்டுகளில் ஈக்விட்டி, டெட் ஃபண்டுகளில் நீண்ட காலத்தில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் பார்க்கலாம்.

சந்தை இறக்கத்தில் இருப்பதால் குறுகியகால முதலீடு எனில் கடன் அல்லது அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. டி.எஸ்.பி. பிளாக்ராக், பிர்லா சன் லைஃப், ஐ.டி.எஃப்.சி. போன்ற ஃபண்ட் நிறுவனங்களின் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்தது. சுருக்கமாகச் சொன்னால், என்.சி.டி-யைவிட மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் குறைவுதான். ஆனால், ஈக்விட்டி ஃபண்ட் என்று வரும்போது சந்தைக்கான ரிஸ்க்கும் உண்டு என்பதை மறக்க வேண்டாம்.''

இஸ்லாமியர்கள் முதலீடு செய்வதற்கேற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் இந்தியாவில் உள்ளதா?

நசுருதீன், திருப்பூண்டி

ராமலிங்கம், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட்.

''இஸ்லாமியர்கள் மத கோட்பாடுகளின்படி வட்டி, புகையிலை, போதை போன்ற தொழில்களில் முதலீடு செய்யக்கூடிய வகையில், பெஞ்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்ட நிறுவனத்தின் ஷரியா பீஸ் (shariah bees)) மற்றும் டாரஸ் ஃபண்ட் நிறுவனத்தின் டாரஸ் எத்திகல் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.''

இண்டெக்ஸ் இ.டி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாமா? நல்ல வருமானம் கிடைக்குமா?

செந்தில்பாலஜி, பொள்ளாச்சி.

ஸ்ரீபரத், திருப்தி ஃபைனான்ஷியல் பிளானிங் சர்வீஸஸ்.

''பங்குச் சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்து இண்டெக்ஸ் இ.டி.எஃப்-ன் வருமானம் இருக்கும். நீண்டகால முதலீட்டில் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். செலவு விகிதம் (எக்ஸ்பென்ஸ் ரேஷியோ) குறைவாக இருக்கும் என்பதால் இண்டெக்ஸ் இ.டி.எஃப்-கள் கூடுதல் லாபம் தரும். தற்போதைய நிலையில் மொத்த முதலீட்டை இ.டி.எஃப்-பில் போடாமல், எஸ்.ஐ.பி. முறையில் அல்லது சந்தை இறங்க இறங்க கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது கூடுதல் லாபம் தரும்.''

எங்களது பூர்வீக நிலத்தை சகோதரர்கள் நாங்கள் மூன்று பேரும் 1998-ல் பிரித்துக்கொண்டோம். சகோதரிகளும் இருக்கிறார்கள். பிரித்துக்கொண்ட நிலத்தை எனது சகோதரர்கள் விற்றுவிட்டார்கள். இப்போது சகோதரிகள் பங்கு கேட்கிறார்கள். என்ன செய்வது?

முருகன், சென்னை.

ஆர்.முருகபூபதி, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

''பூர்வீகச் சொத்தில் உங்களது சகோதரிகளும் பாகஸ்தர்கள் ஆகிவிடுகிறார்கள். அவர் களுக்குரிய பாகத்தைக் கோர அவர்களுக்கு உரிமை உள்ளது.

பாகம் பிரிக்கப்படாமல் தங்களின் சொத்து விற்கப் பட்டுள்ளதாக, அந்த விற்பனையை எதிர்த்து சகோதரர்கள் மீதும் நிலத்தை வாங்கியவர்கள் மீதும் வழக்கு தொடுக்க உங்களின் சகோதரி களுக்கு உரிமை இருக்கிறது.''

தங்க நகை வாங்கும்போது 1 சதவிகிதம் வாட் (மதிப்புக்கூட்டு வரி) போடுகிறார்கள். ஆனால், ஃபர்னிச்சர் வாங்கும்போது 14.5% வாட் போடுகிறார்கள். ஏன் இந்த வித்தியாசம்?

ஜாகிர் உசேன், ஊட்டி.

அ.செந்தில்குமார். ஆடிட்டர், ஏ.ஆர். கிருஷ்ணா அசோஸியேட்ஸ்.

''பொருட்களின் நுகர்வு மற்றும் மக்களின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு சதவிகிதத்தில் மதிப்புக்கூட்டு வரியை அரசு விதிக்கிறது. சில அத்தியாவசிய பொருட்களுக்குகூட வரி விலக்கு உண்டு.

நமது நாட்டில் மக்கள் அதிக அளவில் தங்க நகைகள் கொள்முதல் செய்வதாலும், எல்லோருமே விரும்பி வாங்கக்கூடிய பொருளாக இருப்பதாலும், மறுவிற்பனை மதிப்பு இருப்பதாலும் தங்கத்துக்கு குறைவான வரி விதிக்கப்படுகிறது. விலை அதிகமான ஃபர்னிச்சர் பொருட்களை அடிக்கடி எவரும் வாங்குவதில்லை. தவிர, ஆடம்பரம், சொகுசு பொருட்கள் என்கிற வகையில் அது வருவதாலும் அதற்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது.''

மியூச்சுவல் ஃபண்டு களில் குறைந்தபட்சம் 100 ரூபாய் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யும் வசதியை ஏஜென்டுகள் செய்து தருவதில்லை. ஏஜென்டுகளின் உதவி இல்லாமல் இந்த வசதியை எப்படி பயன்படுத்திக் கொள்வது?

சுமதி, ஓசூர்.

லெட்சுமி நாராயணன், நிதி ஆலோசகர்.

''மியூச்சுவல் ஃபண்ட் முகவர்களுக்கு கமிஷன் தொகை குறைவு என்பதால் இந்த திட்டத்தில் ஏஜென்டுகள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். முகவர் இல்லாமலும் முதலீடு செய்யலாம் என்பதால் நீங்கள் நேரடியாகவே குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்ய முயற்சிக்கலாம். நேரடியாக அலுவலம் இல்லாத நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட கார்ப்பரேட் ஏஜென்டுகள் இருப்பார்கள். அவர்கள் மூலமும் முதலீடு செய்யலாம். அடுத்ததாக, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவும் முதலீடு செய்ய முடியும்.''

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இழப்பீடு கோராத பட்சத்தில் கட்டிய பிரீமியம் மட்டும் திரும்ப கிடைக்கும் பாலிசிகள் உள்ளதா?

செந்தில்குமார், தர்மபுரி.

வி.கிருஷ்ணதாசன், வெல்த் அட்வைஸர், இந்தியா நிவேஷ் செக்யூரிட்டிஸ் லிமிடெட்

''அண்மைக் காலம் வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி களின் பிரீமியத் தொகையை திரும்பப் பெற முடியாது என்றுதான் இருந்தது. ஆனால், தற்போது பாலிசி காலம் முடிந்ததும் கட்டிய பிரீமியத் தொகையை திரும்ப பெறக் கூடிய வகையில் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வந்துவிட்டன. ஆனால், இந்த பாலிசிகளில் பிரீமியம் அதிகமாக இருக்கும். இந்த பாலிசியை எடுப்பதைவிட, பிரீமியம் திரும்பக் கிடைக்காத டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொண்டு, அதிகமாகச் செலுத்தும் பிரீமியத் தொகையை ஆர்.டி அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும்.''