Published:Updated:

அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதில்லை: வணிகர் சங்கம் முடிவு

அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதில்லை: வணிகர் சங்கம் முடிவு
அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதில்லை: வணிகர் சங்கம் முடிவு
அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதில்லை: வணிகர் சங்கம் முடிவு

செங்கல்பட்டு: சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என வண்டலூரில் நடந்த இந்திய வணிகர்கள் பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அகில இந்திய வணிகர்கள் பாதுகாப்பு மாநாடு வண்டலூர் வி.ஜி.பி திடலில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வி.ஜி.பி.சந்தோஷ் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில், இந்தியாவில் சில்லைரை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கடுமையாக பாதிக்கச் செய்யும் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச்சட்டம் 2006ஐ அமல்படுத்துவதை உடனடியாக தடுக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த ஏற்பாடு செய்து வருகின்றது. இதனால் அனைத்து பொருட்களுக்கும் 16 முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது.

அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதில்லை: வணிகர் சங்கம் முடிவு

வணிகர் மற்றும் சிறு, குறுந்தொழில் வளர்ச்சிக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தியுள்ள உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும். வால்மார்ட்டை அனுமதிக்க லஞ்சம் பெற்றவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் கட்சிகளுக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வணிகர்கள் வாக்களிப்பதில்லை. சேவைவரி மற்றும் வருமானவரி சட்டங்களை எளிமையாக்க வேண்டும். வணிகர்களையும், பொதுமக்களையும் பாதிக்கும் திடீர் கடையடைப்பு அறிவிப்புகளை கைவிட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி வசூல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அந்நிய முதலீட்டை ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதில்லை: வணிகர் சங்கம் முடிவு

விழாவில் பேசிய அகில இந்திய வணிகர்கள் சம்மேளன மாநிலத் தலைவர்

##~~##
விக்கரமராஜா, ''எங்களுடைய வாழ்வாதாரமான சில்லரை வணிகத்தை அன்னிய நாட்டிற்கு தாரை வார்த்து தந்தவர்கள் யார்? மன்மோகன்சிங்கின் சொந்த சொத்தை அதிகாரம் செய்யலாமே தவிர இந்தியாவில் உள்ள ஏழறை கோடி வணிகர்களின் உயிரையும் பனையம் வைத்து நடத்தும் வாழ்வாதாரங்களை அந்நியருக்கு தாரை வார்த்து கொடுக்க அவரால் முடியாது என மத்திய அரசிற்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
வரியிருந்தால்தான் தரமான உணவு தருவார்கள் என மத்திய அமைச்சர் நாராயணசாமி சொல்கின்றார். இதுவரை நீங்கள் தரமில்லாத உணவு சாப்பிடாமல் மத்திய அமைச்சராக ஆகியிருக்கின்றீர்களா? இன்று சில்லரை வணிகத்திலே அந்நிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்தே தீருவோம் என சிதம்பரம் சொல்கிறார். தேர்தல் நேரத்திலே நீங்கள் அமெரிக்கா சென்று வாக்கு கேட்பீர்களா? இல்லை இந்தியாவில் வாக்கு கேட்பீர்களா? என்று பார்க்கத்தான் போகின்றோம்” என மத்திய அரசிற்கு எதிராக கொதித்தெழுந்தார்.

-பா.ஜெயவேல்