- ஏ.ஆர்.குமார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஃபைனான்ஸிங் தொழிலில் நகரத்தார்கள் ஓப்பீடு செய்ய முடியாத அளவுக்கு சிறந்து விளங்கினார்கள். 1930-ல் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், காரைக்குடி, சிவகங்கை பகுதிகளில் மட்டும் 136 நகரத்தார்கள் வெற்றிகரமாக ஃபைனான்ஸிங் செய்து வந்தார்கள்.

. திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி நகரங்களில் 107 நகரத்தார்கள் ஃபைனான்ஸிங் தொழில் செய்து வந்தார்கள். இவர்கள் மொத்தமாக ஃபைனான்ஸ் செய்திருந்த தொகை சுமார் 109 கோடி ரூபாய்க்குமேல்..
ஒரு சமூகம் ஃபைனான்ஸிங் தொழிலில் சிறந்து விளங்க கை நிறைய பணம், ஒரு இரும்பு பீரோ, ஒரு எழுத்து மேஜை, தடியான நோட்டு இருந்தாலே போதாது. சிறுவயது முதலே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்கிற நான்கு கணக்குகளையும் சொடுக்கு போடும் நேரத்தில் செய்து முடிக்கும் திறமை வேண்டும்.

எல்லா வரவு-செலவுகளையும் பேரேட்டு புத்தகத்தில் உடனுக்குடன் எழுத வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக யாருக்கு பணம் தருவது என்று சரியாக தீர்மானிக்க வேண்டும். கொடுத்த பணம் திரும்ப வராத பட்சத்தில் அதை வசூல் செய்யும் திறமையும் இருக்க வேண்டும்.

இத்தனை வேலைகளையும் செய்து முடிக்கிற பயிற்சி நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறுவயது முதலே தரப்பட்டது. பள்ளிப் படிப்பு முடிந்த கையோடு நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இலங்கை, பர்மாவில் இருக்கும் கடைகளுக்கு அனுப்பப் பட்டனர். இரண்டு வேட்டி, இரண்டு சட்டை சகிதமாக கப்பலேறியவர்கள் அங்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் கடுமையான பயிற்சி பெற்ற பிறகே சொந்த ஊருக்கு திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர். இத்தனை கடுமையாக பயிற்சி பெற்றதால்தான் அவர்களால் பிற்காலத்தில் இத்தொழிலில் சிறந்து விளங்க முடிந்தது.

ஃபைனான்ஸ் தொழிலுக்குத் தேவையான பணத்தை நகரத்தார்கள் பல வகையில் திரட்டினார்கள். அப்படி திரட்டிய பணத்திற்கு பல பெயர்களை வைத்தனர்.

முதல் பணம்: நகரத்தார்கள் தங்களின் சொந்த முதலீட்டை இப்படி அழைத்தார்கள்.

மேம்பணம்: மேலதிகமாக இருக்கும் பணம் அல்லது மற்றவர்களிடமிருந்து வாங்கும் பணமே இப்படி குறிக்கப்பட்டது. இந்த மேம்பணத்தையும் பல வகையாகப் பிரித்து வைத்திருந்தார்கள்.

ஆச்சிமார் பணம்: நகரத்தார் வீட்டுப் பெண்களுக்கு சேர வேண்டிய பணத்தை குறிப்பது. வரதட்சணையாக வரும் பணம் பிஸினஸுக்கு எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் அதை ஆச்சிமார் பணத்தின் கீழ் குறித்து வைத்தனர்.

தவணைமுறைப் பணம்: நகரத்தார்களின் பங்காளிகள் மற்றும் அதே கோயிலைச் சேர்ந்தவர்கள் தவணையாக வாங்கிய பணத்தைக் குறிப்பது.

கோயில் பணம்: நகரத்தார்களுக்கு ஒன்பது முக்கிய கோயில்களிலிருந்து பெறப்படும் பணத்தைக் குறிப்பது இது.

அடகு கடை பணம்: நகரத்தார்கள் நடத்தும் ஃபைனான்ஸிங் கடைகளிலிருந்து பெறப்பட்ட பணம்.

வெள்ளைக்காரன் பணம்: ஐரோப்பிய வங்கிகளில் இருந்து பெறப்பட்ட பணம்.

இப்படி பல்வேறு வகையில் பெற்ற பணத்தை ஃபைனான்ஸ் செய்து வந்து, அதில் கிடைக்கும் லாபத்தை மீண்டும் மறுமுதலீடு செய்து, பெரும் பணத்தை சேர்த்தார்கள்.

ஃபைனான்ஸ் செய்த பணத்திற்கு அது திருப்பித் தரப்படும் காலத்திற்கு ஏற்ப வட்டியையும் வசூலித்தார்கள். கடைக் கணக்கு, நடப்புக் கணக்கு, வயன் வட்டிக் கணக்கு என பல வகைகளை பின்பற்றினார்கள். உதாரணமாக, கடைக் கணக்கிற்கு சிம்பிள் வட்டியும், நடப்புக் கணக்கிற்கு அதைவிட கொஞ்சம் கூடுதலான வட்டியும் வயன் வட்டிக் கணக்கிற்கு இன்னும் கூடுதலான வட்டியும் வசூலித்தார்கள். ஒவ்வொரு தமிழ் மாதத்தின் 16-ம் தேதி இந்த கணக்கிற்கான வட்டி விகிதத்தை முடிவு செய்ய, அது அடுத்த மாதம் 15-ம் தேதி வரை நடைமுறையில் இருந்தது.

ஃபைனான்ஸிங் தொழில் வெற்றி கண்டதால், பிற்பாடு தற்போது இருக்கும் 'மணி சேஞ்சர்’கள் போல, பணத்தை மாற்றித் தரும் தொழிலையும் செய்தனர். உதாரணமாக, இங்குள்ள வியாபாரி ஒருவர் கொழும்புவில் அரிசியை விற்றால் அவருக்கு ஸ்டெர்லிங்கில் பணம் கிடைக்கும். இந்த பணத்தை எடுத்துக் கொண்டு அங்குள்ள நகரத்தார் மணி சேஞ்சரிடம் கொடுத்தால், அவர் இந்திய பணத்தை தருவார். ஹுண்டி என்று அழைக்கப்பட்ட இந்த சேவையை இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் நகரத்தார்கள் தந்தனர்.

இந்த அனுபவம் பிற்காலத் தில் இந்தியன் வங்கியையும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியையும் தொடங்கி நடத்தும் திறமையை நகரத்தாருக்கு தந்தது.

(அறிவோம்)

நச்சரிப்புகளும் நல்ல பிஸினஸ் தரும்!

1920-ல், அமெரிக்காவில் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் கம்பெனியில் ஏர்ல் டிக்ஸன் என்பவர் பணியாற்றினார். அவரது மனைவி காய்கறி வெட்டும்போது அடிக்கடி கை விரலை வெட்டிக் கொள்வார்.

மெல்லிய வலை போன்ற துணியை காயத்தில் சுற்றி, பசை தடவப்பட்ட நாடாவால் ஒட்டி காயத்தை ஆற வைப்பது அப்போதைய வழக்கம். இந்த இரு பொருட் களையுமே ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் விற்பனை செய்தது. ஏர்ல், மேற்சொன்ன இரு பொருட்களையும் ஒட்டி, சின்னச் சின்னதாக வெட்டி அதை மனைவிக்கு பயன்படுத்தி வந்தார். இந்த விஷயம் உயரதிகாரிகளுக்கு தெரிந்ததும், பிற்பாடு இதுதான் பான்ட் எய்ட்-ஆக அறிமுகமானது. சில நச்சரிப்புகளும் நல்ல பிஸினஸ் ஐடியாக்களைத் தரும்!

- அத்வைத்