'அண்ணேணணண!'

தங்கையின் குரல் கேட்டு வீட்டிற்கு வெளியில் வந்தார் ஆனந்தன். வேகமாக ஓடி வந்ததால் மூச்சிரைப்புடன் நின்றுகொண்டிருந்தாள் அவரது தங்கை; கையில் ஒரு அஞ்சல் உரையுடன்! 'அண்ணே, நீங்க செலக்ட் ஆகிட்டீங்க. நீங்க அனுப்பின கண்டுபிடிப்பை செலக்ட் செஞ்சுட்டதா லெட்டர் வந்திருக்கு. நம்ம குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் பரிசளிப்பு விழாவிற்கு சென்னைக்கு வரச் சொல்லி அழைப்பு அனுப்பியிருக்காங்க' என்றாள் பெருமிதத்துடன்.

. நி.ம்மதிப் பெருமூச்சு விட்டார் ஆனந்தன். இத்தனை நாட்களாக காத்திருந்த வாய்ப்பு கிடைத்து விட்டதை நினைத்து சந்தோஷப்பட்டார். ஆனால், அவருக்கு பெரிய அளவில் பொருளாதார பின்புலமோ, கல்வியோ இல்லை என்பதால் அவர் கண்டுபிடித்ததை அவரால் பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்ய முடியவில்லை. இந்த இரண்டு விஷயங்களும் ஆனந்தனிடம் இருந்திருந்தால் அவரும் ஒரு முதல் தலைமுறை தொழில் முனைபவராக ஆகியிருப்பார்..
இன்றைய இளைஞர்கள் பலர் கல்லூரியில் படிக்கும் போதே எதிர்காலத்தில் ஒரு தொழில் முனைபவராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நிலைமை முற்றிலும் தலைகீழ். உண்மையைச் சொன்னால், கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கிற போதுகூட 'ஆன்ட்ரபிரனர்ஷிப்’ (Entrepreneurship) என்கிற வார்த்தைக்கு எனக்கு சரியாக அர்த்தம் தெரியாது. ஆனால், இன்றைக்கு மாணவர்கள் இந்த வார்த்தையை மிகச் சரியாகப் பயன்படுத்துவதைப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு வருடமும் சென்னை ஐ.ஐ.டி.யில், எம்.பி.ஏ. மாணவர் சேர்க்கையின் போது நூற்றுக்கணக்கான மாணவர்களை இன்டெர்வியூ செய்திருக்கிறேன். டில்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பல ஊர்களிலும் இன்டெர்வியூ செய்திருக்கிறேன். அப்போது பலரிடம் நான் கேட்கும் கேள்வி, 'ஏன் நீங்கள் எம்.பி.ஏ. படிக்க விரும்புகிறீர்கள்?' என்பதுதான்.

பலரும் ஒரே மாதிரியாகதான் இந்த கேள்விக்கு பதில் சொல்வார்கள்.

'நான் தொழில் முனைபவராக ஆகவேண்டும்.அதற்கு தயார்படுத்திக்கொள்ளவே எம்.பி.ஏ. படிக்க விண்ணப்பித்துள்ளேன்.'

இது யாதார்த்தமான பதிலா அல்லது தயாரித்து வைத்த பதிலா என பல சமயங்களில் வியந்ததுண்டு. பெருநகரங்கள் அல்லது பிஸினஸ் குடும்பத்தில் இருந்து வருபவர்கள் மட்டுமல்ல... சிறு நகரங்கள், நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வருபவர்கள்கூட இதையே சொல்கிறார்கள்.

சரி, தொழில் முனைவது என்பது படித்து அறிந்து கொள்கிற விஷயமா? முறையான கல்வி இல்லாமல் தொழில் முனைதலில் வெற்றி பெற முடியாதா? திருபாய் அம்பானி மெட்ரிக்குலேஷன் மட்டுமே படித்தவர். உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸ் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸும் அதே போலத்தான். இவர்கள் எல்லாம் வெற்றி பெறவில்லையா என நீங்கள் கேட்கலாம்.

வெற்றி பெற முடியும். ஆனால் ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த ஐம்பது வருடங்களில் இவ்வுலகம் பல வகையில் முன்னேறி உள்ளது. போட்டி யின் தீவிரம் இன்று பன்மடங் காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சந்தையின் மன்னிக்கும் மனப்பான்மை குறைந்து கொண்டே வருகிறது. பிஸினஸில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த ஒரு சிறு பிழைகூட பல அடிகள் பின்னோக்கித் தள்ளிவிடும். கல்வியானது அந்த தவறு களிலிருந்து நம்மை எளிதில் காப்பாற்றும். படிப்பறிவு ஒரு நல்ல அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்கும். தொழில் முனைபவருக்கு முறை சார்ந்த படிப்பினால் மேலும் பல நன்மைகள் உண்டு. அதில் சிலவற்றைக் கூறுகிறேன்.

1. நான் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு சுயவளர்ச்சி பயிற்சிக்காக சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்த பயிற்சியாளர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, ''நான் வாழ்க்கை என்னும் பல்கலைகழகத்தில் அடிபட்டு பட்டம் பெற்றேன்'' என்றார்.

வாழ்க்கை என்பது மிகப் பெரிய பள்ளிக்கூடம். ஆனால் அதில் பட்டம் பெறுவதற்கு நிறைய நாட்கள் ஆகும். கல்லூரியிலோ அதை முறைப்படுத்தி ஒரு குறுகிய காலத்திற்குள் கற்றுத் தருவதால் காலத்தையும் மிச்சப்படுத்தலாம். அடிபடாமலும் கற்றுக் கொள்ளலாம்.

2. கடை வீதிக்குச் சென்று பாருங்கள். எத்தனை எத்தனை பிஸினஸ்கள்! இணையதளத்தில் ஆராய்ந்தபோது இந்தியாவில் இன்று கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் கம்பெனிகள் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன்.

2010 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை கிட்டத்தட்ட 65,000 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு நாளில் சராசரியாக 300 கம்பெனிகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில் பல மழையில் முளைத்த காளான்கள்தான். இன்று இருக்கும், நாளை இருக்காது. ஆனால், சில கம்பெனிகள் வேரூன்றி வளரும் மரங்களைப் போல நிலைத்து நிற்கும். இத்தனை பேர் பிஸினஸ் செய்ய புறப்பட்டதன் விளைவுகளை ஒரு உதாரணத்தின் மூலம் சொல்கிறேன்.

பழம் பறிப்பதற்கு நீங்கள் தோட்டத்திற்கு போகிறீர்கள். முதலில் எதைப் பறிப்பீர்கள்? கிட்டே இருக்கும் கனியைத் தானே? உங்களுக்குப் பிறகு வேறு ஒருவர் வருகிறார். அவர் எதைப் பறிப்பார்? அடுத்ததாக சற்று உயரே இருக்கும் கனியைத் தான் பறிப்பார். மூன்றாவதாக ஒருவர் வருகிறார். கனிகள் எதுவும் எட்டும் உயரத்தில் இல்லை. என்ன செய்வார்? ஒரு குச்சியில் ஒரு கொக்கியை மாட்டி, கனியை பறிப்பார். பிஸினஸிலும் இன்று அந்தச் சூழ்நிலைதான். எட்டும் கனியாக இருந்த பல வாய்ப்புகள் இன்று பறிக்கப்பட்டுவிட்டன. மேலே சென்று பறிக்க ஒரு கருவி தேவைப்படுவதைப் போல கல்வியானது தொழில் முனைபவருக்கு நடைமுறையில் பெரிய வித்தியாசம் தரும்.

3.நூற்றுக்கணக்கான வருடங்களாக மீன் பிடிக்கி றோமே, கடலில் மீன்கள் குறைந்து விட்டதா? என மீனவரை கேளுங்கள்; இல்லை என்பார். எவ்வளவுக்கு எவ்வளவு பிடிக்கப்பட்டதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மீன்கள் கடலில் இருக்கின்றன. ஆனால் ஒரு வித்தியாசம், கடற்கரைக்கு அருகாமையில் இன்று மீன் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டும். நீங்கள் ஆழ்கட லுக்குச் செல்ல வேண்டும் என்றால் தைரியமாக எதில் செல்வீர்கள்? கட்டுமரப் படகிலா அல்லது பலம் வாய்ந்த விசைப் படகிலா? கல்வி என்பது விசைப் படகைப் போல. தொழில் முனைபவருக்கு தைரியத்தையும் பாதுகாப்பையும் தரும்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. ஆனால், இன்றோ நிலைமை முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. எப்படி? அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொழில் முனைவோம்)

கேளுங்கள் சொல்கிறேன்!

நான் பி.இ. ஆட்டோமொபைல் முடித்துவிட்டு, இப்போது பஞ்சாபிலிருந்து டயரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து விற்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த டயர் எந்த பிரபலமான கம்பெனிக்கும் சொந்தமானதல்ல. ஆனால், 10 - 20% வரை விலை குறைத்து விற்கமுடியும். நான் கஸ்டமர்களை எப்படி பிடிப்பது?

- சந்தோஷ், மெயில் மூலமாக

அன்புள்ள சந்தோஷிற்கு,

''முதலில், நீங்கள் கொண்டுவரும் பொருளுக்கு சந்தையில் ஆதரவு கிடைக்குமா என்று தெரிந்து கொள்ளுங்கள். நேரடியாக நுகர்வோரிடமோ அல்லது டிஸ்ட்ரிபியூட்டரிடமோ ஒரு மார்க்கெட் ரிசர்ச் செய்து கொள்வது நல்லது. மார்க்கெட் ரிசர்ச் முடிவுகள் சாதகமாக இருந்தால் மட்டுமே நீங்கள் மேற்கொண்டு இறங்குவது நல்லது. அடுத்து, மார்க்கெட்டிங். உங்கள் பொருளைப் பற்றி நுகர்வோர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? நீங்கள் இங்கே உங்கள் போட்டியாளர்களைப் பார்க்க வேண்டும். அவர்கள் எப்படி மார்க்கெட்டிங் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதற்குண்டான செலவு என்ன? உங்களால் அது முடியுமா? என்று கணித்துக் கொள்ளுங்கள். உங்களால் அது முடியாவிட்டால் நீங்கள் கிரியேட்டிவ்வாக ஏதாவது யோசியுங்கள். பல கம்பெனிகள் அவர்களின் அற்புதமான மார்க்கெட்டிங் மூலமாக நுகர்வோர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன என்பதை மறக்காதீர்கள்.''

முதல் பில்லியன்!

ஹென்ரி ஃபோர்டு தன் முதல் பில்லியன் டாலரை சம்பாதிக்க எடுத்துக்கொண்ட வருடங்கள் 23. வால் மார்ட் நிறுவனர் ஸாம் வால்ட்டனுக்குத் தேவைப்பட்டது வருடங்கள் 20. மைக்ரோசாப்ட்டின் பில் கேட்ஸ் 12 வருடத்திலேயே முதல் பில்லியனை தொட்டுவிட்டார்.

அமேஸான்.காம் என்னும் இணையதளத்தை தொடங்கிய ஜெஃப் பெஸோஸ் மூன்றே ஆண்டுகளில் முதல் பில்லியன் டாலரை ருசித்துவிட்டார். இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி, 2004-ல் ஃபேஸ்புக் தொடங்கிய மார்க் ஸுக்கர்பெர்க் ஏழு ஆண்டுகளில் சம்பாதித்தது 17.50 பில்லியன் டாலர்! உங்க டார்கெட் எப்போ?

- அத்வைத்