ஒரு வீட்டில் கணவன் கஷ்டப்பட்டு சம்பாதித்துத் தரும் பணத்தை கச்சிதமாகச் செலவு செய்கிற பொறுப்பு குடும்பத்தலைவியான மனைவியைத்தான் சேரும். நான்தானே சம்பாதிக்கிறேன் என கணவனே அதிரடியாகச் செலவு செய்யத் துணிந்தாலும், அதை தடுத்து நிறுத்தி, சிக்கனமாக குடும்பத்தை நடத்துபவள்தான் ஒரு நல்ல திருமதி எஃப்.எம். புதுக்கோட்டை சந்தியா மணிகண்டன் வீட்டு நிர்வாகத்தில் திறமையானவர் மட்டுமல்ல, ஊருக்கு உதவும் உள்ளம் கொண்டவர். இந்த இதழின் திருமதி ஃபைனான்ஸ் மினிஸ்டரும் அவர்தான். இனி சந்தியா பேசுவதைக் கேட்போமா?

''நாகர்கோவில் அருகே மார்த்தாண்டம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமம் என் சொந்த ஊர். நான் எம்.எஸ்.சி., பி.எட். முடிசிருக்கேன். ஒரு தங்கை, இரண்டு தம்பின்னு நடுத்தரமான குடும்பம் எங்களுடையது. ரொம்ப கஷ்டம் இல்லைன்னாலும் ஆரம்பத்துல இருந்தே காசோட அருமை தெரியுற மாதிரிதான் எங்க அப்பா எங்களை வளர்த்தார். அதனால பணத்தோட அருமை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரிய ஆரம்பிச்சிடுச்சு.

. கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சு டீச்சர் ரெக்குரூட்மென்ட் போர்டு தேர்வுல நல்ல மார்க் எடுத்ததுனால எனக்கு ஆசிரியர் வேலை கிடைச்சுது. என் கணவருக்கு கந்தர்வகோட்டை பக்கத்துல மங்கனூர் கிராமம். இவருக்கு இரண்டு தம்பி, ஒரு தங்கை. என்னைப் போலவே என் கணவரும் எம்.எஸ்.சி. பி.எட்.தான். குடும்பத்தோட முழுப்பொறுப்பும் இவர்தான் சுமக்க வேண்டியிருந்தது..
நாங்க இரண்டு பேருமே ஆரம்பம் முதலே கஷ்டங்களைச் சந்திச்சு வந்ததால, எதிர்காலத்திலும் கஷ்டபடக்கூடாதுன்னு முடிவெடுத்தேன். அவரோட சொந்த ஊரான கந்தர்வக்கோட்டைல வாடகை வீட்டுலதான் குடியிருக்கோம். எங்க கல்யாணத்துக்கே நிறைய கடன் வாங்கித்தான் நடத்தினாருன்னு தெரிஞ்சிக்கிட்டேன். முதல்ல கல்யாணக் கடனை கொஞ்சம் கொஞ்சமா அடைச்சு வந்தோம்.

ஆனா, எங்க கல்யாணக் கடனை அடைக்குறதுக்குள்ள இவரோட தங்கச்சியோட கல்யாணம் வந்துருச்சு. என் நகைகளை அடகு வச்சும், அப்புறம் பேங்க்ல லோன் போட்டும்தான் கல்யாணம் பண்ணி வச்சோம். இப்படி வரிசையான செலவு வந்துக்கிட்டே இருந்ததுனால, ஆரம்பத்துல இருந்தே எங்களால சரியா சேமிக்க முடியாம போச்சு.

அப்பதான் இனி ரொம்ப சிக்கனமா இருக்கணும்னு முடிவு எடுத்தேன். ஒவ்வொரு மாதமும் என் வீட்டுக்காரரு பணம் முழுவதையும் எங்கிட்ட குடுத்துடுவாரு. பிடித்தம் போக இரண்டு பேருக்கும் சேர்த்து 25,000 ரூபாய் வரை சம்பளம் வரும்.

மளிகை சாமான், காய்கறி, பால் இதுக்கெல்லாம் மாதம் எப்படியும் 2,500 ரூபாய் ஆயிடும். அந்த ரூபாயைத் தாண்டி போகாம ஒவ்வொரு மாதமும் அதுக்குள்ள வர்ற மாதிரியே பார்த்துப்பேன். வீட்டுக்கு பின்னாடி காய்கறித் தோட்டம் போட்டிருக்கேன் இதுனால காய்கறி செலவு கொஞ்சம் மிச்சம் ஆகும். மருத்துவச் செலவு, வேறு அவசர தேவைக்காக ஒரு கணிசமான தொகையை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கிடுவேன்.

என் கணவர் ஒரு பொருள் வாங்கணும்னு சொன்னா, நான் கண்டிப்பா நமக்கு தேவையான்னு ஒண்ணுக்கு பத்து முறை யோசிப்பேன். வாங்கியே ஆகணும்னு தேவையிருந்தாதான் அந்த பொருளை வாங்குவேன்.

என் கணவர் வரதட்சணையா எங்ககிட்ட இருந்து எதுவும் வாங்கலை.

கல்யாணத்துக்கு அப்புறம் எங்க இரண்டு பேரோட சம்பளத்துல இருந்துதான் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி பீரோ, டிவி, மிக்ஸி, கிரைண்டர்னு வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கினோம்.

என்னதான் இருந்தாலும் சொந்தமா வீடு இருந்தாதானே நல்லது. அதனால கடனோட கடனா வீடு கட்டுறதுக்காக சீட்டு போட்டு இப்பத்தான் சொந்தமா நிலம் வாங்கினோம். எங்க ரெண்டு பேருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, அதுலயும் கொஞ்ச பணத்தை சேமிச்சுட்டு வர்றோம்.

எனக்கு ஆடம்பரச் செலவு பண்ணவே பிடிக்காது. முக்கியமா, அழகுச் சாதன பொருட்கள் வாங்கவே மாட்டேன். கடவுள் இயற்கையாவே தனி அழகை கொடுத்திருக்கிறப்ப, இதுல காசை கொண்டு போடுறது வேஸ்ட்னு நினைப்பேன்.

ஓட்டல், சினிமா, அடிக்கடி டிரஸ் எடுக்குறதுன்னு இதெல்லாம் எங்க ரெண்டு பேருக்குமே அவ்வளவா பிடிக்காது. அதுல போடுற காசை சேமிக்கலாம்னு நினைப்பேன். அவருக்கு நகை சீட்டெல்லாம் போடுறது பிடிக்காது. அதனால நகை வாங்குறதுக்குன்னு அப்பப்ப கொஞ்சமா வீட்டுலயே சேத்துவச்சு நகை வாங்கிக்குவேன்.

நான் சம்பாதிக்கிற பணத்துலதான் என் தம்பி, தங்கையும் படிக்க வைக்கிறேன். தவிர, நாங்க சம்பாதிக்கிற பணத்துல பத்து சதவிகிதம் எங்க மாணவர்களுக்காக ஒதுக்கிடுவோம். கஷ்டப்படுற வங்களுக்கு உதவுறதுல கிடைக்கிற சந்தோஷம் வேறு எதுலையும் இல்லை.

எங்களுக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகுது. இப்பத்தான் கடன் பிரச்னை எல்லாம் கொஞ்சம் குறைஞ்சு நல்லபடியா இருக்கோம்.

இப்ப எங்களுக்கு திருக்குறளரசன்னு மூணு வயசுல ஒரு பையன் இருக்கான். அவனை அடுத்த வருஷம் நல்ல ஸ்கூல்ல சேக்கணும்; அவனோட வருங்காலத்துக்கு உதவுற மாதிரி கொஞ்சம் பணத்தை சேமிச்சு வைக்கணும். எங்க ரெண்டு பேருக்கும் பென்ஷன் திட்டம் இல்லாததுனால ஓய்வூதியத் திட்டத்துல ரெண்டு பேருக்கும் பணம் போடறோம்.

இப்பதான் எங்களோட சுமை குறைஞ்சு சேமிக்க ஆரம்பிச்சுருக்கோம். இனி நாங்க வாங்கின இடத்துல நாங்க விரும்பின மாதிரி வீடு கட்டணும். அதான் எங்க ரெண்டு பேரோட இப்போதைய கனவு. அதுக்காக இனிமேல் இன்னும் அதிகமா பணத்தைச் சேமிக்கணும்.

நம்ம குடும்ப சந்தோஷத்துக்காக, எதிர்கால நலனுக்காக சிக்கனமா இருக்கிறது தப்பே இல்லை. என்ன நான் சொல்றது சரிதானே?''

-பெ. தேவராஜ்
படங்கள்: சிவபாலன்