கிறிஸ்துமஸை ஒட்டி கோவாவுக்கு குடும்ப சகிதம் டூர் போன ஷேர்லக், இ-மெயிலில் நமக்கு அனுப்பிய செய்திகள் இங்கே...

பங்குகள் ஏலம்..!

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அரசு குட்டிக்கர்ணம் அடிக்கிறது. ஐ.பி.ஓ. வெளியீடு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, முன்னணி தனியார் நிறுவனங்களில் அரசு பங்குகளை அடமானம் வைப்பது என பல வழிகளில் பணத்தை திரட்ட முடியாமல் போகவே, பங்குச் சந்தைகள் மூலம், பொதுத் துறை நிறுவனங்களில் இருக்கும் மத்திய அரசின் பங்குகளை ஏலம்விடலாமா என யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. இது தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதில் செபி தீவிரமாக களமிறங்கி இருக்கிறது. இதற்கான செபியின் கூட்டம் ஜனவரி மூன்றாம் தேதி நடக்கிறது.

பைபேக் படலம்..!

எதிர்பார்த்ததைவிட பங்குகளின் விலை 52 வார குறைந்தபட்ச விலைக்கு கீழே போக, மீண்டும் பைபேக் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கின்றன சில நிறுவனங்கள். இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட், மொன்னத் இஸ்பத், பிராஜ் இண்டஸ்ட்ரிஸ் போன்ற நிறுவனங்கள் 600 கோடி ரூபாய் மதிப்புக்கு பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து பைபேக் செய்ய போகிறதாம்.

ஒரு கோடியில் ஒரு கம்பெனி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் பங்கின் விலை 52 வார குறைந்தபட்ச விலைக்கு போனதால், டி.சி.எஸ். நிறுவனம் அதிக மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் நிறுவனமாக மாறி இருக்கிறது.

.ஐ.பி.ஓ. மூலம் திரட்டிய பணத்தைச் சரியாக முதலீடு செய்யாமல் இருக்கும் அரை டஜன் கம்பெனிகளை செபி கையும்களவுமாகப் பிடித்திருக்கிறது. செபியினால் ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்ட சில நிறுவனங்களும் இதில் அடக்கம். இதனால் கூடிய விரைவில் ஐ.பி.ஓ. நடைமுறைகளை முற்றிலும் மாற்றப் போகிறதாம் செபி..
2011-ல் சந்தை எந்த அளவுக்கு சரிந்திருக்கிறது தெரியுமா? வெறும் ஒரு கோடி ரூபாய் இருந்தால் ஒரு கம்பெனியையே வாங்கிவிடலாம். இப்படி ஒரு கோடியில் கம்பெனிகள் மட்டும் பி.எஸ்.இ.-யில் நாற்பதுக்கு மேல் இருக்கிறதாம்!

இந்திய இன்ஷூரன்ஸ் கம்பெனிகளிடம் 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உபரி பணம் இருக்கிறது. இதில் ஒரு பகுதியைத் தங்கத்தில் முதலீடு செய்ய அனுமதிக்கும்படி ஐ.ஆர்.டி.ஏ.வை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கேட்டிருக்கின்றன. இதுகுறித்த இறுதி முடிவை ஐ.ஆர்.டி.ஏ. கூடிய சீக்கிரம் எடுக்கப் போகிறதாம்.