தங்கம்!

''டிசம்பர் 28-ம் தேதி இத்தாலியன் பாண்ட் ஏலத்திற்கு வந்ததைத் தொடர்ந்து யூரோ கடந்த பதினைந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு கீழே போனது. இதன் விளைவாக, டாலரின் மதிப்பு அதிகரித்து, தங்கத்தின் விலை கடந்த ஆறு மாதத்தில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. டிசம்பர் 29-ம் தேதி மட்டுமே ஒரு அவுன்ஸ் தங்கம் இரண்டு சதவிகிதம் குறைந்து 1,521 டாலருக்கு சென்று, பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

தங்கம் 1,804 டாலருக்கு மேலே போனபோது இன்னும் மேலே போகும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், பலரது ஆசையும் நிராசையானதுதான் மிச்சம்.

டெக்னிக்கல்படி பார்த்தால் தங்கத்திற்கு 1,478 டாலர் சப்போர்ட்டாகவும், அதையும் தாண்டி கீழே போனால் 1,449 டாலர் வரை கீழே போகவே வாய்ப்பு அதிகம். இனி தங்கம் வாங்கி லாங்க் போக நினைக்கிறவர்கள் 1,643 டாலர் வந்தால் மட்டுமே வாங்கலாம். அந்த விலைக்கு வந்தால் அதன்பிறகு சற்று மேலே போக வாய்ப்புண்டு.

சென்னா!

. உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இப்போதுதான் சென்னா பயிருக்கான விதை விதைக்கும் காலம் துவங்கியுள்ளது. 2011-ல் பதினெட்டு மில்லியன் டன் சென்னா உற்பத்தியாகும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், பதினேழு மில்லியன் டன் மட்டுமே உற்பத்தியானது. பருவநிலை சரியாக இல்லாததே உற்பத்தி குறைந்ததற்கு காரணம்..
2012-ல் சென்னா உற்பத்தியை அதிகரிக்க அரசு பல முயற்சி எடுத்து வருகிறது. தற்போது 3,325 ரூபாயாக இருக்கும் ஒரு குவிண்டால் சென்னா, 3,050 ரூபாய் வரை கீழே வர வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை மேலே போனால் 3,450 ரூபாய் வரை மேலே போக வாய்ப்பிருக்கிறது. டெக்னிக்கல்படி பார்த்தால், வாங்குவதற்கு பரிந்துரைக்கும் கமாடிட்டியாக சென்னா உள்ளது. ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷன் சென்னாவுக்கான மார்ஜினை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் தவறான ஆட்கள் உள்ளே வருவது குறையும்.''

மிளகு!

உலக அளவில் மிளகு உற்பத்தி பருவநிலை மாற்றங்களால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தேவையும் குறைவாகவே இருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும் மிளகு ஏற்றுமதியை பாதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகள் ஜனவரி மாதத்தில் நன்கு செயல்படும் என்பதால் மிளகு ஏற்றுமதிக்கான டிமாண்ட் அதிகரிக்கும். அதுவரை மிளகு விலை ஏற்ற, இறக்கத்துடனே இருக்கும்.

ஏலக்காய்!

ஏலக்காய் உற்பத்தி அதிகமாக இருப்பதால் விலை குறைந்துள்ளது. நல்ல பருவநிலை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் உற்பத்தி அதிகரித்துள்ளது. கம்பம், குமுளியிலிருந்து ஏலக்காயை ஏலம் எடுக்கும் இடமான போடிநாயக்கனூருக்குக் கொண்டு செல்ல, முல்லைப் பெரியாறு பிரச்னையால் இடையூறு ஏற்பட்டதால், செங்கோட்டை வழியாகக் கொண்டு செல்கின்றனர்.

மேலும், ஏலக்காய் பறிப்பதற்கு வேலையாட்கள் கிடைக்காமல் பிரச்னை ஏற்பட்டுள்ளதாலும் பல கமாடிட்டி எக்ஸ்சேஞ்சுகளில், ஏலக்காய்கான டிமாண்ட் குறைவாகவே கடந்த வாரத்தில் காணப்பட்டது. இதனால் விலை பெரிய அளவில் உயரவில்லை.

காப்பர்!

டிசம்பர் மாத கடைசி வாரத்தில் காப்பர் விலை கீழே போய் திரும்ப மேலே வந்தது. நீண்ட மற்றும் நடுத்தர காலத்தில் பார்த்தால், காப்பர் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் தெரிகிறது. எம்.சி.எக்ஸ்.ஸில் 384 ரூபாய் ஸ்டாப்லாஸாக கொண்டு காப்பரை வாங்கலாம். 405 ரூபாய்க்கு சந்தை முடிந்தால் அடுத்த வாரம் 414 ரூபாய் வரை போகலாம். அதனால் காப்பர் வரும் வாரத்தில் உயர வாய்ப்புண்டு.

வெள்ளி!

தங்கத்தைப் போல வெள்ளியும் வரும் வாரத்தில் இறங்கவே வாய்ப்புண்டு. டாலரின் மதிப்பு அதிகரித்தால் வெள்ளி விலை இன்னும் குறையும். எம்.சி.எக்ஸ். சந்தையில் ஒரு கிலோ வெள்ளிக்கான மார்ச் மாத கான்ட்ராக்ட் 51,238 ரூபாயாக வர்த்தகமானது.

-பானுமதி அருணாசலம்.