Published:Updated:

கடும் நிதி நெருக்கடியில் மத்திய அரசு - நிதிப் பற்றாக்குறை 115% அதிகரிப்பு!

மத்திய அரசு வருவாய்க்கும் செலவுக்குமான வித்தியாசமே நிதிப்பற்றாக்குறையாகும். கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் அரசின் மொத்தச் செலவு ரூ.16.13 லட்சம் கோடியாகவும், வரி வசூல் மூலமான வரவு ரூ.8.97 லட்சம் கோடியாகவும் உள்ளது. 

கடும் நிதி நெருக்கடியில் மத்திய அரசு - நிதிப் பற்றாக்குறை 115% அதிகரிப்பு!
கடும் நிதி நெருக்கடியில் மத்திய அரசு - நிதிப் பற்றாக்குறை 115% அதிகரிப்பு!

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதங்களுக்கான நிதிப் பற்றாக்குறை, 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டதைவிட 115 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு, நிதிப்பற்றாக்குறை இலக்காக 6.24 லட்சம் கோடி ரூபாயை நிர்ணயித்திருந்தது. இது 3.3 சதவிகித ஜி.டி.பி அளவாகும். ஆனால், தற்போது நிதிப்பற்றாக்குறை 114.8% உயர்ந்து ரூ.7.17 லட்சம் கோடியாக உள்ளது. 

அரசின் வருவாய்க்கும் செலவுக்குமான வித்தியாசமே நிதிப் பற்றாக்குறையாகும். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் அரசின் வருவாய் குறைந்து செலவு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் அரசின் மொத்தச் செலவு ரூ.16.13 லட்சம் கோடியாகவும், வரி வசூல் மூலமான வரவு ரூ.8.97 லட்சம் கோடியாகவும் உள்ளது. 

அரசின் நிதிப் பற்றாக்குறை, கடந்த அக்டோபர் மாதமே 100 சதவிகிதத்தைத் தாண்டி, 103.9 சதவிகிதமாக இருந்தது. தற்போது இது மேலும் அதிகரித்துள்ளது. எஞ்சியுள்ள நான்கு மாதங்களில் இந்தப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கக்கூடும். இதைச் சமாளிக்கத்தான் ரிசர்வ் வங்கியிடம் கூடுதல் நிதியைக் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகத் தகவல் வந்து, பின்னர் அதை அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்குமென்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது