2011-ல் பங்குச் சந்தை ஏகத்திற்குத் தள்ளாடிய சமயத்தில் பலருக்கும் கை கொடுத்து உதவியது கமாடிட்டி சந்தைதான். இதன் காரணமாகவே பலரும் கமாடிட்டி சந்தைக்குள் புகுந்து, நல்ல லாபமும் பார்த்தனர். இந்நிலையில், 2012-ல் கமாடிட்டி சந்தை எப்படி இருக்கும் என்று சொல்கிறார் ஸ்டாக் ஹைஃபை அட்வைஸரி சர்வீஸஸின் இயக்குநர் ரமேஷ் பஜாஜ்.

தங்கம்!

''கடந்த வருடம் அதிக ஏற்றத்தைக் கண்டது தங்கம்தான். 2011 செப்டம்பரில் 1,900 டாலர் வரை சென்று சாதனை படைத்தது. ஆனால், டிசம்பர் மாதம் விலை இறங்க ஆரம்பித்தது. இதற்கு காரணம், டாலரின் மதிப்பு அதிகரித்ததுதான். 2012-லும் டாலரின் மதிப்பு ஏற்றமாகவே இருக்கும். இதுவரை பாதுகாப்பான முதலீடாக இருந்து வந்த தங்கம் வரும் ஆண்டில் அப்படி இருக்க வாய்ப்பில்லை. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள் என எங்கும் பொருளாதார சூழ்நிலை சரியாக இல்லை. இதனால் தங்கத்தின் விலையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும். தற்போது 1,561 டாலராக இருக்கிறது தங்கத்தின் விலை. இது இறங்கினால் 1,470 டாலர் வரை குறைய வாய்ப்புண்டு. இதற்கும் கீழே இறங்கினால் 1,200 வரைகூட போகலாம். எனவே, ஜாக்கிரதை!

வெள்ளி!

வெள்ளியின் நிலைமையும் அடுத்த வருடம் இறங்குமுகம்தான். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு அவுன்ஸ் 48 டாலர் வரை சென்றது. வருடத்தின் இறுதியில் 26 டாலராக குறைந்தது. டெக்னிக்கல்படி பார்த்தால், 2012-லும் வெள்ளி இன்னும் இறக்கத்தையே சந்திக்கும். ஒரு அவுன்ஸ் வெள்ளி 26 டாலருக்கும் குறைந்தால் 23 டாலர் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. அதையும் தாண்டி இறங்கினால் 19 டாலர் வரை போகலாம்.

கச்சா எண்ணெய்!

. 2011 டிசம்பரில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 101 டாலர் வரை போனது. அமெரிக்காவில் அடுத்தடுத்து வந்த பொருளாதார புள்ளிவிவரங்கள் நம்பிக்கை ஊட்டுவதாக இருப்பதும், ஈரான் மற்ற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளையை குறைத்துள்ளதும் 2012-ல் கச்சா எண்ணெய் உயர முக்கிய காரணங்களாக இருக்கும்..
மேலும் மத்திய கிழக்கு நாடுகள், லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் ஏதாவது போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 200 டாலர் வரை போக வாய்ப்பிருக்கிறது. எப்படி பார்த்தாலும் கச்சா எண்ணெய்யின் விலை 85 டாலருக்கு கீழ் போக வாய்ப்பில்லை. கடந்த ஆண்டுகளில் தங்கம் லாபத்தை அள்ளித் தந்தது போல இனி கச்சா எண்ணெய் அள்ளித்தர வாய்ப்புண்டு!

இயற்கை எரிவாயு!

கடந்த மூன்று வருடங்களாக இயற்கை எரிவாயு விலையில் எந்தவித ஏற்றமும் இல்லை. அதற்கான டிமாண்ட் இல்லாததினால் வரும் ஆண்டிலும் விலையில் எந்தவித ஏற்ற, இறக்கமும் இருக்காது. எனவே இயற்கை எரிவாயு பக்கம் போகாமல் இருப்பது நல்லது.

காப்பர்!

அடிப்படை உலோகத்தில் காப்பருக்கு வரும் ஆண்டில் நல்ல வாய்ப்பிருக்கும். மற்ற உலோகங்களை ஒப்பிடும்போது காப்பர் விலை ஏற்றம் காண வாய்ப்புகள் அதிகம். தொழிற்சாலை உற்பத்தி வருகிற ஆண்டில் அதிகமாகி காப்பருக்கான டிமாண்ட் அதிகரித்தால் அதன் விலை நிச்சயம் உயரும்.''

-பானுமதி அருணாசலம்
படம் : சொ.பாலசுப்ரமணியன்.