Published:Updated:

ஜி.எஸ்.டி வரி குறைப்பால் புத்தாண்டிலிருந்து விலை குறையும் பொருட்கள் என்னென்ன?

ஜி.எஸ்.டி வரி குறைப்பால் புத்தாண்டிலிருந்து விலை குறையும் பொருட்கள் என்னென்ன?
ஜி.எஸ்.டி வரி குறைப்பால் புத்தாண்டிலிருந்து விலை குறையும் பொருட்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி வரி குறைப்பினால் சினிமா டிக்கெட் கட்டணம், டிவி ஸ்கீரின் மானிட்டர்  உள்பட 23 பொருட்களின் விலை இன்று முதல் குறையவுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில், ஜனவரி 1-ம் தேதி முதல் 23 பொருட்களின் வரி விகிதத்தைக் குறைக்க அனுமதியளித்துள்ளது. இதன் மூலம், சினிமா டிக்கெட், டி.வி, மானிட்டர் ஸ்கீன், பவர் பேங்க் மற்றும் குளிரூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் விலை குறையவுள்ளது. 

100 ரூபாய்க்குக் குறைவான சினிமா டிக்கெட் கட்டணத்துக்கு 18 சதவிகிதமாக இருந்த வரி 12 சதவிகிதமாகவும், 100 ரூபாய்க்கு மேல் கட்டணமாக வசூலிக்கப்பட்டவற்றிற்கு 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

பயன்படுத்தப்பட்ட டயர்கள் அல்லது ரிடிரேட் டயர்கள், டிஜிட்டல் கேமிராக்கள், வீடியோ கேமிராக்கள் போன்றவற்றின் வரி விகிதம் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. உடல் ஊனமுற்றோர்களுக்கான வாகனம் மற்றும் அதற்கான உதிரிப் பாகங்கள், மார்பிள் கற்கள், கார்க் மற்றும் நடப்பதற்கு உதவும் ஸ்டிக், சாம்பலால் தயாரிக்கப்படும் செங்கல் போன்றவற்றுக்கு ஐந்து சதவிகித வரியாகவும், பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ்க்கான வரி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

காய்கறிகள், குளிரூட்டப்பட்ட பொருட்கள் போன்றவற்றிற்கு முழுமையாக வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவியுடன் புனித யாத்திரை செல்லும் விமான பயணிகளுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதமாகவும், 32 இன்ச் வரை உள்ள மானிட்டர், டிவி ஸ்கீரின்களுக்கு 28 சதவிகிதமாக இருந்த வரை 18 சதவிகிதமாக குறைத்துள்ளது மத்திய அரசு.