Published:Updated:

கழுதை ஏற்றுமதி மூலம் லாபம் பார்க்கும் பாகிஸ்தான்!

கழுதை ஏற்றுமதி மூலம் லாபம் பார்க்கும் பாகிஸ்தான்!
கழுதை ஏற்றுமதி மூலம் லாபம் பார்க்கும் பாகிஸ்தான்!

``என்னைப் பார் யோகம் வரும்" என்று எழுதி, கழுதையின் புகைப்படத்தை மாட்டிவைப்பது நம் வழக்கம். நமக்கு யோகம் வருகிறதோ இல்லையோ, கழுதையால் பாகிஸ்தானுக்கு யோகம் வருகிறது! ஆம், பாகிஸ்தானுக்கு சீனா 42.5 பில்லியன் தொகையை கடனுதவியாக வழங்கவுள்ளது. அதற்குப் பதிலாக, அடுத்த மூன்றாண்டுகளில் 80,000 கழுதைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. உலகளவில் கழுதைகள் எண்ணிக்கையில் சீனா முதலிடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தானில் சுமார் 50 லட்சம் கழுதைகள் இருக்கின்றன. 

சீனாவின் பாரம்பர்ய மருத்துவமுறையில், கழுதைத்தோலிலிருந்து கிடைக்கும் ஜெலட்டின்(Gelatin) என்ற பொருள், மருந்துகள் தயாரிப்புக்குப் பெரிதும் பயன்படுகிறது. இந்த ஜெலட்டின், ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப் பயன்படுவதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக கழுதைக்கு அங்கே அதிக தேவை இருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து கழுதையை இறக்குமதி செய்வதோடு, கழுதை வளர்ப்பில் ஈடுபடவும் சீனா ஆர்வமாக இருக்கிறது. சீனாவைச் சேர்ந்த சில நிறுவனங்கள், பாகிஸ்தானில் கழுதைப்பண்ணை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. அதற்காக 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யக் காத்திருப்பதாகத் தெரிகிறது.