Published:Updated:

ஐடி பணியாளர்களுக்கு அடிக்குது யோகம் - நாஸ்காமின் புதிய அறிவிப்பால் குஷி!

ஐடி பணியாளர்களுக்கு அடிக்குது யோகம் - நாஸ்காமின் புதிய அறிவிப்பால் குஷி!
ஐடி பணியாளர்களுக்கு அடிக்குது யோகம் - நாஸ்காமின் புதிய அறிவிப்பால் குஷி!

டி துறை பணியாளர்களுக்கு, கடந்த ஆண்டைக் காட்டிலும்  இந்த ஆண்டு நல்ல சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான 'நாஸ்காம்' தெரிவித்துள்ளது. 

ஐடி எனப்படும் தகவல் தொழில் நுட்பத் துறையில், கடந்த ஆண்டு பணியாளர்களுக்கான சராசரி சம்பள உயர்வு 6% முதல் 8% வரை இருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு அவர்களுக்கான சராசரி சம்பள உயர்வு 8% முதல் 10% வரை இருக்கலாம் என 'நாஸ்காம்' அமைப்பின் மூத்த துணைத் தலைவர் சங்கீதா குப்தா தெரிவித்துள்ளார். இதே கருத்தை பல முன்னணி ஹெச்.ஆர் நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. ஐடி துறை பணியாளர்கள் நிச்சயம் 10 சதவிகிதத்துக்குக் குறையாமல் சம்பள உயர்வைப் பெறுவார்கள் என அந்த நிறுவனங்களின் உயரதிகாரிகள் கணித்துள்ளனர். 

ஆட்டோமேஷன், அனலிட்டிக்ஸ், டொமைன், க்ளவுட் டெப்லாய்மென்ட் சார்ந்த பணிகளுக்கான  ஊழியர்களுக்கு அதிக தேவை இருப்பதும் சம்பள உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. 

இது தொடர்பாக ஹெச்.ஆர் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ``2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சராசரி சம்பள உயர்வுடன், தற்போது நிலவும் சாதகமான சூழலை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அது நிச்சயம் 10% வரை இருக்கும்" எனத் தெரிவித்தார். 

மேலும், ``ஐடி துறையில் சர்வதேச அளவில் பொறியியல் படிப்புடன் கூடிய திறமையான மென்பொருள் பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தியா அத்தகைய திறமையாளர்களை அதிகம் கொண்டுள்ளது. மேலும், ஏஐ மற்றும் எம்எல் (AI & ML) போன்ற புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் இந்தியாவிலுள்ள இன்ஜினீயர்களும் மாணவர்களும் மிகவும் ஆர்வமுடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்."

இந்த நிலையில், முக்கியமான தொழில் நுட்பங்களில் சிறந்து விளங்குபவர்களுக்கான சம்பள உயர்வு, கடந்த ஆண்டைக் காட்டிலும் ஏறக்குறைய இரண்டு மடங்கு வரை இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.