Published:Updated:

பணம் பறிக்க நண்பன் கடத்தி கொலை

பணம் பறிக்க நண்பன் கடத்தி கொலை
பணம் பறிக்க நண்பன் கடத்தி கொலை
பணம் பறிக்க நண்பன் கடத்தி கொலை

ராஜபாளையம்: ஜாலியாக ஊர் சுற்ற பணம் தேவைப்பட்டதால், நண்பனின் தந்தையிடம் இருந்து பணம் பறிக்க நண்பனையே கடத்தி கொலை செய்த நண்பர்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

ராஜபாளையம் அழகிய நகரை சேர்ந்தவர் கஜேந்திர ராஜா. இவர் தொழிலதிபர். இவரது மகன் பிரேம் குமார் வயது 18. பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். மேற்கொண்டு படிக்காமல் தந்தைக்கு உதவியாக தொழிலை கவனித்து வந்தார்.

பிரேம் குமாருடைய நண்பர் ரஞ்ஜித் வயது 25. இவருடைய தந்தை பாலகிருஷ்ணன் பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அதே ராஜபாளையத்தை சேர்ந்த வளையாபதி என்பவரது மகன் சசிகுமார். நண்பர்களான இவர்கள் மூவரும் எப்போதும் ஊர் சுற்றுவது, ஜாலியாக திரிவது வழக்கம்.

கடந்த 3ஆம் தேதி பிரேம் குமாரின் தந்தை கஜேந்தி ரராஜா தனது குடும்பத்தினருடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். பிரேம் குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ரஞ்ஜித், பிரேம்குமாரை போனில் தொடர்பு கொண்டு வெளியே போகலாம் வா என்று அழைத்துள்ளார். பிரேம்குமாரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன்பின் பிரேம் குமார் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே கேரளாவில் இருந்த கஜேந்திர ராஜாவுக்கு ஒரு மர்ம போன் வந்துள்ளது. அதில் பேசியவர், உன் மகன் பிரேம் குமாரை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். 25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் விடுவிப்போம் என்று மிரட்டியுள்ளனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த கஜேந்திர ராஜா, உடனே ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். பிரேம்குமார் மாயமானது குறித்து விசாரித்த போலீசாருக்கு அவரது நண்பர்கள் ரஞ்ஜி மற்றும் சசிகுமார் மீது சந்தேகப்பட்டுள்ளது. ரஞ்ஜித்தின் செல்போன் அழைப்புகளை போலீசார் கண்காணித்த போது இறுதியா பிரேம் குமாரிடம் பேசியது தெரிய வந்துள்ளது.

##~~##
உடனே போலீசார் ரஞ்ஜித், சசிகுமார் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது ஜாலியாக ஊர் சுற்ற பணம் தேவைப்பட்டதால் பிரேம் குமாரை கடத்தி சென்று பணம் பறிக்க திட்டமிட்டிருந்தோம். அப்போது பிரேம் குமாருக்கும் எங்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் பிரேம்குமாரின் கழுத்தை நெறித்து கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.
பிணத்தை ரஞ்ஜித்தின் தந்தை பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான பாலித்தின் கம்பெனிக்கு பின்புறம் புதைத்துவிட்டதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜபாளையம் போலீசார் இன்று குற்றவாளிகள் இருவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று அவர்கள் புதைத்த பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எம்.கார்த்தி