Published:Updated:

பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!

பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!

பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!

பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!

Published:Updated:
பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!

செட்டி நாட்டு அரசர் அண்ணாமலை செட்டியாரின் குடும்பம் இன்றைய தமிழக பிஸினஸில் மிக முக்கியமானது. அண்ணாமலை அரசரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்போது தமிழக பிஸினஸ் உலகின் இளம் தளபதிகளாக இருந்து கொடிகட்டிப் பறக்கின்றனர். அண்ணாமலை அரசருக்கு மூன்று மகன்கள். முதல் மகனின் பெயர் முத்தையா; இரண்டாவது மகனின் பெயர் ராமநாதன், மூன்றாவது மகனின் பெயர் சிதம்பரம்.

முத்தையா செட்டியார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசரின் மூத்த மகன் என்பதால் அவருடைய குடும்பத் தொழிலான ஃபைனான்ஸிங்கை சிறுவயது முதலே நன்கு புரிந்து கொண்டு செய்தார். மிகச் சிறந்த பிஸினஸ்மேனாக விளங்கிய முத்தையா செட்டியார், 1941-ல் தென்னிந்திய சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவராகவும், 1943-ல் ஃபெடரேஷன் ஆஃப் த இந்தியன் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்தார்.

இந்தியன் வங்கி,  இம்பீரியல் வங்கியின் (இதுதான் பிற்பாடு பாரத ஸ்டேட் வங்கியாக மாறியது!) வளர்ச்சியில் இவர் ஆற்றிய பங்கு மகத்தானது.

பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!

பிஸினஸில் மட்டுமின்றி, அரசியலிலும் நுழைந்து சிறப்பான சேவை செய்தார். ஐஸ்டிஸ் கட்சியில் இவர் முக்கியமான தலைவர். அண்ணாமலை அரசருடன் இணைந்து சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் திறக்க பெரிய உதவி செய்தார்.

முத்தையா செட்டியாருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் பெயர் எம்.ஏ.எம்.முத்தையா செட்டியார். இரண்டாவது மகன் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார். இன்றைக்கு செட்டிநாடு என்கிற பெயரில் சிமென்ட், மருத்துவமனை, கன்ஸ்ட்ரக்ஷன், லாஜிஸ்ட்டிக், துறைமுக நிர்வாகம் என பன்னிரண்டுக்கும் மேற்பட்ட தொழில்களை செய்து வருகிறார் எம்.ஏ.எம்.ராமசாமி. இவரது மகனான எம்.ஏ.எம்.ஆர்.

முத்தையா, செட்டிநாடு நிர்வாகத்தைக் கவனிக்க ஆரம்பித்தபிறகு அந்நிறுவனத்தின்  வளர்ச்சி வேகம் அதிகரித்திருக்கிறது.

ராமநாதன் செட்டியார்!

இவர் பிஸினஸில் முக்கிய மானவர் இல்லை என்றாலும், தமிழ்த் தொண்டுக்குப் பெயர் போனவர். அண்ணாமலை அரசரின் அண்ணன் ராமசாமி யால் தத்தெடுக்கப்பட்டார். இவருக்கு சிறுவயது முதலே அரசியல் ஆர்வம் அதிகம். இவரது சொந்த அண்ணனான முத்தையா செட்டியார் ஜஸ்டிஸ் கட்சியில் இருக்க, இவரோ காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்கு வகித்தார். சென்னை நகரின் மேயராக இருந்தார். கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக மூன்று முறை இருந்தார்.

சிதம்பரம் செட்டியார்!

##~##
நகரத்தார்களின் குடும்பத் தொழிலான ஃபைனான்ஸிங் தொழிலை விட்டுவிட்டு, தொழில் துறையின் பக்கம் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தவர் சிதம்பரம் செட்டியார். இவர் மும்பையில் ஒரு ஸ்கூட்டர் தொழிற்சாலையை தொடங் கினார். மிக இளவயதிலேயே இந்தியன் அலுமினியம் கம்பெனியின் இயக்குநராக பதவியேற்ற பெருமை இவருக்கு உண்டு.

1955-ல் சதர்ன் பெட்ரோ கெமிக்கல் கம்பெனியை உருவாக்கினார் இவர். ஸ்பிக் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்நிறுவனம் மிகப் பெரிய உரத் தயாரிப்பு நிறுவனம்.

சிறுவயது முதலே கிரிக்கெட்டில் அலாதியான ஆர்வம் காட்டினார் சிதம்பரம் செட்டியார். 1956-லேயே பி.சி.சி.ஐ.யின் துணைத் தலைவராகவும், 1960-ல் பி.சி.சி.ஐ. அமைப்பின் தலைவராகவும் ஆனார். தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக 32 ஆண்டுகள் பதவி வகித்தார். சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர் என்பதால், பிற்பாடு அந்த மைதானத்திற்கு இவருடைய பெயரே வைக்கப்பட்டது.

எம்.ஏ.சிதம்பரம்

பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!

செட்டியாருக்கு ஒரு மகன், ஒரு மகள். இன்றைக்கு ஸ்பிக் நிறுவனத்தின் தலைவராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மற்றும் அகில இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்த ஏ.சி.முத்தையா, சிதம்பரம் செட்டியாரின் மகன்.

உரத் தயாரிப்பு என்று ஆரம்பித்த ஸ்பிக் நிறுவனம் இன்று, இ.பி.சி., மருந்து தயாரிப்பு, விவசாய உயிரிதொழில்நுட்பம் என பல்வேறு தொழில்களில் கிளை பரப்பி வருகிறது. முத்தையாவின் மகன் அஸ்வின் முத்தையா, ஸ்பிக் குழும நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

நகரத்தாரின் பிஸினஸ் திறமையை மீண்டும் மீண்டும் உலகிற்கு உணர்த்தியபடி முன்னேறிச் சென்று கொண்டி ருக்கிறார்கள் அண்ணாமலை அரசரின் வாரிசுகள்.

(அறிவோம்)

பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!


வசூல் ராஜா!

பைனான்ஸ் கம்பெனி யில் கடன் வசூலிப்பவராகச் சேர்ந்தார் ஒரு துடிப்பான இளைஞர். வருடக்கணக்கில் திரும்ப வராத கடன்களை வெற்றிகரமாகத் திருப்பி வாங்கினார். அவருடைய ரகசியம்?

கடன் வாங்கியவரிடம் போவார். 'நாலு வருஷமா நீங்க வாங்கின கடனுக்கு வட்டியும் தரலே, அசலும் தரலே. எப்போ குடுப்பீங்க?'

'ரெண்டுமே தர முடியாது. உன்னால் ஆனதைப் பாரு.' என்று பதில் வரும்.

'நான் என்ன செய்வேன் தெரியுமா?' என்று பதிலுக்கு கேட்பார் நம்மாள்.

'என்ன செய்வே?' என்று கேட்பார்கள்.

'நீங்க கடன் வாங்கி யிருக்கிற மத்த எல்லார் கிட்டேயும் போய், நீங்க எங்களுக்குத் தர வேண்டிய கடனைத் திருப்பிக் கொடுத்துட்டதாச் சொல்வேன்.

அவங்க எல்லோரும் உங்களுக்குக் கிடுக்கிப்பிடி போட்டுடுவாங்க. எப்படி உங்க சௌகர்யம்?'

மாத்தி யோசிங்க! நிச்சயம் சக்ஸஸ்தான்!

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism