பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, சர்க்கரை, மஞ்சள் என விவசாய விளைபொருட்களே நம் நினைவுக்கு வரும். கடந்த ஆண்டில் தங்கமும் வெள்ளியும் நமக்கு நல்ல லாபத்தை அள்ளித் தந்தது போல, இந்த விவசாய விளைபொருட்களும் பெரும் லாபம் அள்ளித் தரும் என்கிறார்கள் நிபுணர்கள். எந்தெந்த அக்ரி கமாடிட்டி நல்ல லாபம் தரும் என ஆனந்த் ரதி கமாடிட்டீஸ், ரிசர்ச் ஹெட் (கமாடிட்டி அண்ட் கரன்சி) கிஷோர் நார்னே-விடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

மஞ்சள் - 1

உற்பத்தி:

மஞ்சள் உற்பத்தி தமிழகத்தில் கடந்த ஆண்டு அதிகமாகவே இருக்கும். என்றாலும், ஆந்திராவில் மஞ்சள் உற்பத்தி 15-20 % குறைய வாய்ப்புண்டு.

டிமாண்ட்:

விளைச்சல் குறைந்தால் விலை உயர வாய்ப்பிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தரகர்கள் மற்றும் ஸ்டாக்கிஸ்ட்கள் இப்போதே மஞ்சளை ஸ்டாக் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

டார்கெட்:

18,000 ரூபாய்க்கு விலைபோன ஒரு குவிண்டால் மஞ்சள் 4,000 ரூபாய்க்கு கீழே போனது. தற்போது என்.சி.டி.இ.எக்ஸில் ஒரு குவிண்டால் மஞ்சள் 5,201 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. விலை குறைந்தால் 4,000-4,200 ரூபாய்க்கு வாங்கலாம். டார்கெட் 6,500 ரூபாய்க்குச் செல்லும்போது விற்கலாம். வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த டார்கெட்டை அடைய வாய்ப்பிருக்கிறது. விலை தற்போது இறங்கியிருந்தாலும் மீண்டும் விலை அதிகரிக்க நிறையவே வாய்ப்புண்டு.

சோயா - 2

சோயா காம்ப்ளக்ஸ் என்பது சோயா பீன் மற்றும் சோயா எண்ணெய்யைக் குறிக்கும். சோயா பீனிலிருந்து கிடைக்கும் புண்ணாக்கு கால்நடைத் தீவனமாகவும், சோயா எண்ணெய் சமையலுக்கும், பயோ டீசல் கலவையாகவும் பயன்படுகிறது.

.உற்பத்தி:.
உலகளவில் சோயா பீன் மொத்த உற்பத்தி 264 மில்லியன் டன். ஐந்து நாடுகளே இதை பெரிய அளவில் உற்பத்தி செய்கின்றன. அதிக உற்பத்தியில் அமெரிக்கா (90 மில்லியன் டன்), பிரேசில் (75 மில்லியன் டன்), அர்ஜென்டினா (49 மில்லியன் டன்), சீனா (14 மில்லியன் டன்), இந்தியா (10 மில்லியன் டன்) உள்ளன. மற்ற நாடுகள் 26 மில்லியன் டன் உற்பத்தி செய்கின்றன.

அமெரிக்காவில் கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு 10% உற்பத்தி குறைந்திருக்கிறது. பிரேசில் மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் இந்த ஆண்டு சோயா பீனை தாமதமாகவே விதைத்திருக்கிறார்கள். தெற்கு அமெரிக்க நாடுகளில் மழை குறைவாக இருக்கும் என கூறப்படுவதால் விளைச்சல் குறையும் என்று கணித்திருக்கிறார்கள். இந்தியா மற்றும் சீனாவில் சோயா பீன் சந்தைக்கு வரத் தொடங்கிவிட்டது.

டிமாண்ட்:

உலக நாடுகள் பயோ டீசல் பயன்பாட்டை அதிகமாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். பயோ டீசலில் சோயா எண்ணெயின் கலப்பு இருப்பதால், சோயா எண்ணெயின் தேவை அதிகமாகியுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தாலும், ஒரு நபருக்கான சமையல் எண்ணெயின் அளவும் அதிகரித்து வருகிறது. சோயா எண்ணெய் ஆரோக்கியமானது; உடலுக்கு நல்லது என பிரபலமடைந்து வருவதால் இன்னும் தேவை அதிகரித்து வருகிறது.

டார்கெட்:

தற்போது 2,500 ரூபாய்க்கு வர்த்தகமாகி வரும் ஒரு குவிண்டால் சோயா பீன் 3,000 ரூபாய் வரை போக வாய்ப்பிருக்கிறது. அடுத்த மூன்றிலிருந்து ஆறு மாதங்களில் 20% விலை உயர வாய்ப்புண்டு. தற்போது 10 கிலோ சோயா எண்ணெய் 720 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இது 850 ரூபாய் வரை போக வாய்ப்பிருக்கிறது.

கார் கம் - 3
guar gum

சமீபத்தில் அதிக விலை ஏற்றம் கண்டுள்ளது இந்த கார் காம்ப்ளக்ஸ். இது கார் விதையையும் (GUAR SEED), கார் கம்மையும் (GUAR GUM) குறிக்கும். தமிழில் இதற்கு கொத்தவரங்காய் என்று பெயர்.

உற்பத்தி:

உலக அளவில் 80 சதவிகித கார் விதையை உற்பத்தி செய்யும் நாம் அதை அதிகளவில் ஏற்றுமதியும் செய்கிறோம். நூறு கிலோ கார் விதையிலிருந்து வெறும் முப்பது கிலோ கார் கம் மட்டுமே கிடைக்கும். அதாவது, முப்பது சதவிகிதம் மட்டுமே கிடைக்கும்.

சென்ற வருடத்தில் 4.30 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்ட கார் விதை, இந்த வருடம் 5 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்றாண்டு டிசம்பர் மாதத்தில் 1,50,000 கார் விதை பைகள் சந்தைக்கு வந்தன. ஆனால், இந்த ஜனவரியில் 55,000 பைகளாக குறைந்துவிட்டன.

இந்த இரண்டு காரணங்களால் இதன் விலை அதிரடியாக உயர ஆரம்பித்துள்ளது.

டிமாண்ட்:

இந்திய அளவில் உள்நாட்டு பயன்பாடு மிகவும் குறைவு. ஏற்றுமதிதான் அதிகம். பார்மா, உணவு பதப்படுத்துதல், டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இந்த கார் கம் பயன்படுகிறது. 2012-ம் ஆண்டில் ஸ்டாக் முழுமையாக தீர்ந்துவிட வாய்ப்பிருக்கிறது.

தவிர, எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பிலும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதனாலும் கார் கம் கமாடிட்டிக்கு மவுசு பிறந்துள்ளது.

டார்கெட்:

கடந்த நவம்பர் முதல் இதன் விலை அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. இந்த தடாலடி விலை ஏற்றம் காரணமாக ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷன் இதற்கான மார்ஜினை 30% அதிகரித்துவிட்டது.

நவம்பர் மாதத்தில் 14,000 ரூபாய்க்கு வர்த்தகமான ஒரு குவிண்டால் கார் கம் தற்போது 29,300 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

வரும் மாதங்களில் 36,000 ரூபாயிலிருந்து 38,000 ரூபாய் வரை போக வாய்ப்பிருக்கிறது.

அதேபோல் தற்போது ஒரு குவிண்டால் கார் கம் விதை 8,800 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருவது 11,000 ரூபாய்க்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

சமீபத்திய காலாண்டில் அதிகளவு விலை ஏற்றம் கண்ட இந்த கமாடிட்டி விலை இறங்கி பிறகு மீண்டும் உயரும்.

சென்னா - 4

பருப்பு வகையைச் சேர்ந்த மிக முக்கியமான உணவு பொருள் இது.

உற்பத்தி:

உலகளவில் உற்பத்தி ஆகும் சென்னாவில் 90%-தை இந்தியா பயன்படுத்து கிறது. இதில் 70 சதவிகித சென்னாவை இந்தியா உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள 20%-தை இறக்குமதி செய்கிறது.

எப்போதுமே ஸ்டாக் இல்லாமல் சீக்கிரத்தில் தீர்ந்துவிடுவதால் இறக்குமதி செய்வார்கள். ஆனால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால் இறக்குமதியும் குறைந்தது.

டிமாண்ட்:

சென்னாவுக்கு தற்போது அதிக டிமாண்ட் இருக்கிறது. ஸ்பாட் சந்தையில் விலை அதிகரித்ததால், தற்போது பழைய சென்னாதான் சந்தையில் இருக்கிறது. மார்ச் மாதத்தில்தான் புதிய சென்னா சந்தைக்கு வரும். தென் மாநிலங்களிலிருந்து பிப்ரவரி முதல் வாரத்தில்தான் சென்னா சந்தைக்கு வரும். ஆனால், சமீபத்தில் அடித்த தானே புயலால் வரத்து தாமதமாகும் என சொல்லப்படுகிறது. புதிய சென்னா வரத்தின் அளவைப் பொறுத்தே விலை இருக்கும்.

தவிர, ரூபாயின் மதிப்பு வரும் நாட்களிலும் குறையும் என்பதால், இறக்குமதி செய்ய அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். தேவை அதிகமாக இருக்கும் அதேநேரத்தில் சப்ளை கம்மியாக இருப்பதால் இதன் விலை உயரவே வாய்ப்பிருக்கிறது.

டார்கெட்:

தற்போது குவிண்டால் 3,450 ரூபாய்க்கு வர்த்தகமாகி வரும் இந்த கமாடிட்டி 3,650 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. சப்போர்ட் 2,850 ரூபாய். இதற்கும் கீழே போக வாய்ப்பில்லை. மார்ச் மாதத்தில் விலை இறங்கினாலும் அதன்பிறகு விலை உயரும்.

மிளகு - 5

மிளகு சமையலுக்கும் மருத்துவத்திற்கும் மிகவும் பயன்படுகிறது.

உற்பத்தி:

மிளகு உற்பத்தியை அதிக அளவில் செய்யும் நாடு வியட்நாம். இங்கு ஒரு வருடத்தில் மட்டும் ஒரு லட்சம் டன் மிளகு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த வருடத்தில் 95,000 டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

மிளகில் வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு வகை இருக்கிறது. இதில் கருப்பு மிளகில் 80,000 டன்னும், வெள்ளை மிளகில் 15,000 டன்னும் வியட்நாமிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. வியட்நாமிற்கு அடுத்தபடியாக மிளகு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா.

டிமாண்ட்:

இந்தியாவில் சென்ற ஆண்டில் 49,000 டன் கருப்பு மிளகும், 1,000 டன் வெள்ளை மிளகும் என மொத்தம் 50,000 டன் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், இந்த வருடம் 43,000 டன் மட்டுமே உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. 2010, 2011-ம் ஆண்டை ஒப்பிடும்போது இந்தாண்டின் உற்பத்தி குறைவுதான்.

மேலும், சில வர்த்தக ஒப்பந்தங்களின்படி இந்தியா 14,000 டன் இறக்குமதி செய்தாக வேண்டும். மொத்த உற்பத்தியில் 40,000 டன் உள்நாட்டு பயன்பாட்டிற்கே சரியாக போய்விடும்.

வியட்நாமில் 2012-ல் 1,10,000 டன் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அங்கு 5% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் அவர்கள் 20,000 டன் இறக்குமதியும் செய்வார்கள். எனவே வியட்நாமில் 1,35,000 டன் தேவைக்கு அதிகமாக ஸ்டாக் இருக்கிறது.

டார்கெட்:

உலகளவில் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், இந்தியாவில் உற்பத்தி குறைந்துள்ளதால் வெளிநாட்டிலிருந்து மிளகு இறக்குமதி செய்ய வேண்டும்.

ஆனால், ரூபாயின் வீழ்ச்சியால் இறக்குமதி செய்தால் அதிக விலை தரவேண்டியிருக்கும். எனவே, இறக்குமதி செய்ய மாட்டார்கள்.

தற்போது ஒரு குவிண்டால் 30,000 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அடுத்த மூன்று முதல் ஐந்து மாதத்தில் 34,000 - 35,000 ரூபாய் வரை போக வாய்ப்பிருக்கிறது. 28,000 ரூபாய் வரை விலை இறங்கினாலும் மீண்டும் ‑அதிகரிக்கவே செய்யும்.

-பானுமதி அருணாசலம்