Published:Updated:

கமாடிட்டி!

கமாடிட்டி!

கமாடிட்டி!

தங்கம்!

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கடந்த சில நாட்களாகச் சரிந்து வந்த தங்கம் சென்ற வியாழக்கிழமை அன்று 1,655 டாலரைத் தொட்டது. இந்த ஜனவரி மாத இறுதியில் சீன புத்தாண்டு வருவதால் அந்நாடு அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் விலை உயர்ந்திருக்கிறது. தவிர, ஐரோப்பியன் யூனியன் வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதால், டாலருக்கு நிகரான யூரோ மதிப்பு உயர வாய்ப்பிருக்கிறது. மேலும், அமெரிக்காவில் இருந்து பலவிதமான டேட்டாக்கள் வெளிவர காத்திருக்கிறது. குறிப்பாக, ஒபாமா அரசாங்கம் பட்ஜெட் காரணமாக நிறைய பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இதன் காரணமாக டாலர் மதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கம் விலை உயரும் என்றே கமாடிட்டி நிபுணர்கள் கருதுகிறார்கள். அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் வலிமையாகவே இருக்கும்.

வெள்ளி!

தங்கம் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்திருக்கிறது. உலகின் பல மத்திய வங்கிகள் தங்களது பொருளாதாரக் கொள்கையை தளர்த்த முடிவு செய்திருக்கிறது. அப்படி செய்யும் பட்சத்தில் வெள்ளி விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி!


கச்சா எண்ணெய்!

கடந்த டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியிலிருந்தே ஏற ஆரம்பித்த கச்சா எண்ணெய், புத்தாண்டுக்கு பிறகு ஒரு பேரல் 103 டாலருக்கு மேல் போனது. நைஜீரியா அரசாங்கம் ஏற்கெனவே கொடுத்த மானியத்தை மீண்டும் தராவிட்டால் எண்ணெய் உற்பத்தியை குறைக்கப் போவதாக அந்நாட்டு  எண்ணெய் நிறுவனங்கள் சொல்லி வருகின்றன.  

மேலும், ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைக்கு சுமூகமான தீர்வு கிடைத்தபாடில்லை. இச்சூழ்நிலையில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை ஜப்பான் குறைத்துக் கொள்ள போவதாக அந்நாட்டு அமைச்சர் சொல்லி இருக்கிறார். அமெரிக்காவில் வெளியாகப் போகும் பொருளாதார டேட்டாக்களும் கச்சா எண்ணெய்யின் விலை உயர வாய்ப்பிருப்பதையே காட்டுகின்றன. எனவே, கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.

கமாடிட்டி!


காப்பர்!

சீனாவின் பணவீக்கம் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது.  பணவீக்கம் குறைந்ததினால், வட்டி விகிதங்களை சீன மத்திய வங்கி குறைக்கக்கூடும். இதன் காரணமாக காப்பருக்கான தேவை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், இத்தனை நாட்களாக அனைத்து மெட்டல்களும் விலை உயராமல் இருக்கக் காரணம் ஐரோப்பிய கடன் பிரச்னைதான். இந்த வருட இறுதியில் ஐரோப்பிய பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த இரண்டு காரணங்களுக்காக இந்த வருட இறுதிக்குள் காப்பர் 25 சதவிகிதம் வரை உயர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் கமாடிட்டி நிபுணர்கள்.

- வா.கார்த்திகேயன்