Published:Updated:

வரி சேமிப்பு திட்டங்கள்... முந்தும் இ.எல்.எஸ்.எஸ்.!

வரி சேமிப்பு திட்டங்கள்... முந்தும் இ.எல்.எஸ்.எஸ்.!

வரி சேமிப்பு திட்டங்கள்... முந்தும் இ.எல்.எஸ்.எஸ்.!


புது வருஷம் பிறந்துவிட்டது. ஆனால், நிதி ஆண்டு (2011-12) முடிய இன்னும் இரண்டரை மாதம் இருக்கிறது. மாதச் சம்பளக்காரர்களுக்கு இந்த மாதம் முதல் சம்பளத்தில் வருமான வரி பிடிக்க ஆரம்பித்திருப்பார்கள் என்பதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு எள்ளும் கொள்ளுமாகத்தான் இருப்பார்கள்.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. கையில் பணம் வைத்திருப்பவர்கள், வரிச் சலுகை தரும் திட்டங்களில் முதலீடு செய்தால் தாராளமாக வரிச் சலுகையும் நல்ல வருமானத்தையும் பெறலாம்.  

அந்த வகையில் நீண்ட காலத்தில் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள், பங்குச் சந்தை சார்ந்த வரிச் சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில் முதலீடு செய்யலாம். கடந்த மூன்றாண்டு காலத்தில் டாப் 10 வரிச் சேமிப்பு ஃபண்டுகள் ஆண்டுக்கு 25 முதல் 30% வரை வருமானம் தந்திருக்கின்றன. 2008-லும் 2011-லும் நெகட்டிவ் ரிட்டர்னை தந்தன இ.எல்.எஸ்.எஸ். திட்டங்கள்.

புதிய வருமான வரிச் சட்டத்தில் இந்த ஃபண்டுக்கு வரிச் சலுகை தொடருமா என்பது பெரிய கேள்விக்குறிதான். என்றாலும், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் நீண்ட காலத்தில் சிறப்பாகவே இருக்கிறது. அந்த வகையில் இந்த ஃபண்டில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை முதலீடு செய்து வரிச் சலுகை பெற வாய்ப்பு இருக்கிறது.

வரி சேமிப்பு திட்டங்கள்... முந்தும் இ.எல்.எஸ்.எஸ்.!

இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டுகள் ஈக்விட்டி டைவர்சிஃபைட் வகையைச் சேர்ந்தது. இதில் செய்யப்படும் முதலீடு மூன்றாண்டு காலத்திற்குப் பிறகே எடுக்க முடியும் என்பதால் இதற்கு வருமான வரி இல்லை.

ரிஸ்க் இல்லாத மற்ற முதலீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிட்டால் இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டுக்கான 'லாக் இன் பிரீயட்’ மிக குறைவாக உள்ளது. தற்போது சந்தை சரிவில் இருப்பதால் முன்னணி ஃபண்டுகளின் யூனிட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வரிச் சலுகை பெறுவதோடு, உங்களின் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை வலிமையானதாக மாற்றலாம்.

மேலும், இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில், லாக் இன் பிரீயட் முடிந்த பிறகு அது ஓப்பன் எண்டட் ஃபண்டாக மாறிவிடும் என்பதால், முதலீட்டை உடனே வெளியே எடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்து சில காலம் கழித்து யூனிட்களை விற்றால் லாபத்தை முழுமையாக அறுவடை செய்யலாம்.

நீண்ட காலத்தில் பணம் எதுவும் தேவைப்படாதவர்கள் இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில் குரோத் ஆஃப்ஷனை தேர்வு செய்யலாம். இடையே பணத் தேவை உள்ளவர்களுக்கு டிவிடெண்ட் ஆஃப்ஷன் நல்லது. இந்த டிவிடெண்ட் தொகைக்கு வரி இல்லை என்பது கூடுதல் லாபம். (புதிய வருமான வரிச் சட்டத்தில் டிவிடெண்டுக்கு 5% வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.)

வரி சேமிப்பு திட்டங்கள்... முந்தும் இ.எல்.எஸ்.எஸ்.!

டிவிடெண்ட் மறுமுதலீட்டு ஆஃப்ஷனை தவிர்ப்பது நல்லது. காரணம், இப்படி மறுமுதலீடு செய்யும் டிவிடெண்ட் தொகைக்கான யூனிட்களை மறுமுதலீடு தேதியிலிருந்து மூன்றாண்டுகள் கழித்தே விற்க முடியும்.  

வரிச் சேமிப்புக்கான இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில் முதலீடு செய்யும்போது, அந்த ஃபண்ட் லார்ஜ்கேப் ஃபண்டா? மிட்கேப் ஃபண்டா? மல்டிகேப் ஃபண்டா? என்பதைக் கவனியுங்கள்.

உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் வருமான எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஃபண்டை தேர்வு செய்யுங்கள்..! லார்ஜ்கேப் ஃபண்டைவிட லார்ஜ் மற்றும் மிட்கேப் ஃபண்ட், மல்டிகேப் ஃபண்ட் சற்று ரிஸ்க் குறைவாக இருக்கும். இந்த ஃபண்டுகளோடு ஒப்பிடும்போது மிட் அண்ட் ஸ்மால்கேப் ஃபண்டில் சற்று ரிஸ்க் அதிகமாக இருக்கும்.

இந்த இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டுகளில் மாதம் 500 ரூபாய்  முதலீடு செய்ய முடியும். பான் கார்டு எண் மட்டும் இருந்தால் போதும். இதுவரைக்கும் வரிச் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்காக இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டுகளை நாடாதவர்கள் இனியாவது முயற்சி செய்து பார்க்கலாமே!

- சி.சரவணன்