''பொங்கலுக்கு நான் மதுரைக்குப் போகிறேன். எனவே, வியாழன் இரவு பத்து மணிக்கு மெயிலில் உமக்கு மேட்டர் அனுப்புகிறேன்!'' - வியாழக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு ஷேர்லக்கிடமிருந்து இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தது. இரவு டிபனாக இட்லியை சாப்பிட்டுவிட்டு, ஷேர்லக் மெயிலுக்காகக் காத்திருந்தோம். நிமிஷம் தவறாமல் வந்து சேர்ந்தது மெயில்.

இறங்கிய இன்ஃபோசிஸ்!

. ''இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு இது போதாத காலம். இதன் நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் சுமார் 25% அதிகரித்திருக்கிறது. ஆனால், பங்கு விலை வியாழனன்று மட்டும் 8% குறைந்திருக்கிறது. கடந்த காலாண்டில் மார்க்கெட்டின் டார்லிங் பங்காக இருந்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி நடப்பு ஜனவரி-மார்ச் காலாண்டில் பெரிதாக இருக்காது என்கிறார்கள். அதாவது, அதன் லாப வரம்பு கணிசமாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் இந்த பங்கின் விலை 2,400 ரூபாய்க்குகூட செல்லலாம். மிக நீண்ட காலத்தில் வைத்திருக்க நினைப்பவர்கள் மட்டுமே இந்த பங்கை புதிதாக வாங்கலாம்..
பாட்டா பரபர!

''பாட்டா இந்தியா, அடுத்த ஐந்தாண்டு களில் 1,000 சதுர அடிக்குக் குறைவாக இடவசதி உள்ள 150 கடைகளை மூடத் திட்டமிட்டுள்ளது. இவற்றை 3,000 சதுர அடிக்குமேல் உள்ள கடைகளாக மாற்ற இருக்கிறது. இந்நிலையில், இந்நிறுவனத்தில் எல்.ஐ.சி. வைத்திருந்த பங்குகளில் சுமார் 13.42 லட்சம் பங்குகளை 64 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. இந்த பங்கின் நிலைமை சரியில்லாததால் இன்னும் 8 முதல் 12% வரை குறைய வாய்ப்பிருக்கிறது.''

கோல் அடிக்கும் கோல் இந்தியா!

''கோல் இந்தியாவில் அந்நிய முதலீட்டாளர் கள் தங்கள் பங்கினைக் குறைத்துக்கொண்டே வருகிறார்கள். நிலக்கரிக்கு இந்த நிறுவனம் வைத்திருக்கும் புதிய விலை கொள்கைக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இப்பிரச்னை இன்னும் உக்கிரமானால் பங்கு விலை சரிய வாய்ப்பிருக்கிறது.''

குதூகலிக்கும் குஜராத் கேஸ்!

''குஜராத் கேஸ் நிறுவனத்தின் 65 சதவிகிதப் பங்குகளை வாங்க ஜி.எஸ்.பி.சி., அடானி, கெயில் இந்தியா போன்ற நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. தற்போதைய மதிப்பைவிட 37 சதவிகிதம் கூடுதலாக வாங்க சில நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. ஏதேனும் டீல் நடக்கும் பட்சத்தில் குறுகிய காலத்தில் 25 சதவிகிதம் இந்த பங்கு விலை உயர வாய்ப்பிருக்கிறது.''

விரட்டும் விப்ரோ!

''விப்ரோவில் தலைமை நிர்வாகியாக இருக்கும் டி.கே.குரியன், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எடுத்திருக்கும் ஆயுதம் பலரின் வேலைக்கு வேட்டு வைப்பதாக இருக்கிறது. கடந்த ஒன்பது மாதங்களில் அறுபது மேனேஜர்களை வேலையைவிட்டு போகும்படி சொல்லி இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களிடம் மேனேஜர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதாம். இவர்களுக்குப் பதிலாக திறமைசாலிகளைச் சேர்த்து வருவதாகவும் தகவல். எது எப்படியோ பங்கு விலை குறையாமல் இருந்தால் சரி!''

தடதடத்த தாமஸ் குக்!

''இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாத் துறை நிறுவனமான தாமஸ் குக், கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. அதிலிருந்து மீள இந்தியப் பிரிவை விற்றுவிட தீர்மானித்திருக்கிறதாம். மேலும் புரமோட்டர்கள் பங்குகளும் அடமானத்தில் உள்ளன. இந்த நிறுவனத்தை வாங்க நான்கு கம்பெனிகள் போட்டியிடுகிறது. ஆனால், அந்த நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு கேட்பதால் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறது. இந்த பிரச்னையால் கடந்த மூன்று மாதத்தில் தாமஸ் குக் இந்தியா பங்கு விலை சுமார் 30% இறங்கியிருக்கிறது. இந்த பங்கை ஏற்கெனவே வாங்கி வைத்திருப்பவர்கள் லாபத்தில் இருந்தால் விற்றுவிடலாம். புதிதாக வாங்க விரும்புகிறவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் மட்டுமே வாங்கலாம்.''

அசத்தல் ஆஃல்பா!

''ஆஃல்பா லாவல் இந்தியா நிறுவனம், அதன் ஆஃபர் விலையாக பங்கு ஒன்றுக்கு 2,045 ரூபாயாக அறிவித்ததை யட்டி இதன் விலை சுமார் 2,750 ரூபாய்க்கு அதிகரிக்க, ஆஃபர் விலையை 2,850 ரூபாயாக அதிகரித்தது. இதைவிட அதிக விலை கேட்டும் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சொல்லி முதலீட்டாளர்களை அசத்தியிருக்கிறது!''

டீலிஸ்ட் யூ.டி.வி.!

''டீலிஸ்ட் அறிவித்துள்ள யூ.டி.வி. சாஃப்ட் நிறுவனம், பங்கு ஒன்றுக்கு 835 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை ஆஃபர் விலை அறிவிக்க, அதன் விலை 1,040 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் அந்நிறுவனம் ஆஃபர் விலையை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு கிளம்ப, இதுதொடர்பாக அடுத்த சில நாட்களில் ஏதாவது ஒரு நல்ல செய்தி வரலாம் என்கிறார்கள்.''

மெர்க்கன்டைல் வங்கியின் ஐ.பி.ஒ.!

''தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, உரிமை பிரச்னை தீர்ந்த பாடில்லை. அது தீர்ந்த பிறகு ஆர்.பி.ஐ. அனுமதியுடன் ஐ.பி.ஓ. வரத் திட்டம் போட்டிருப்பதாக தகவல். ஐ.பி.ஓ. வந்தால் உரிமை பிரச்னை தீர்வதோடு, பங்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். 10 ரூபாய் முக மதிப்புள்ள இந்நிறுவனத்தின் பங்குக்கு 9,000 சதவிகிதம், அதாவது 900 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட்டுள்ளது.''

வட்டி குறையும்!

''ரிசர்வ் வங்கி வருகிற 24-ம் தேதி கூட்டம் நடத்துகிறது. இதில் 0.25% அளவுக்கு வட்டியைக் குறைக்கும் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.''

ஏற்றம் பார்த்து ஏமாற வேண்டாம்!

''தற்போதைய நிலைமையில் சந்தையில் ஒரு ஏற்றம் வந்திருப்பது போல தெரிந்தாலும், அதை உண்மையான ஏற்றமாகக் கருத வேண்டாம். தற்போதைக்கு எந்த நெகட்டிவ் செய்தியும் வராததால் அதுவே ஒரு நல்ல செய்தியாகக் கருதி சந்தை மேலே போகிறது. இத்தாலியின் ரேட்டிங்கை ஃபிட்ச் குறைக்க போவதாகச் செய்திகள் வருகிறது. ஜனவரி மாதத்தில் 15 ஐரோப்பிய நாடுகளின் ரேட்டிங்கை ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிறுவனம் குறைக்கப் போவதாகவும் செய்தி கசிந்துள்ளது. உலகம் முழுக்க சந்தை சரியும்போது நம் சந்தை மட்டும் எப்படி உயரும்? எனவே, இந்த வாரம் ஷேர்டிப்ஸ் எதுவும் இல்லை. அனைவருக்கும் ஹேப்பி பொங்கல் வாழ்த்துக்கள்!''