Published:Updated:

50 லட்சம் கேட்டு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

50 லட்சம் கேட்டு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
50 லட்சம் கேட்டு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

சேலம்: சேலத்தில் பணத்திற்காக ஆட்கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் ராஜ்குமார் 37. இவர் சேலம் வின்சென்ட் ஏரியாவில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை ராமகிருஷ்ணா சாலையில் நடந்து போய் கொண்டிருந்தபோது அவர் அருகில் ஒரு டாடா சுமோ கார் வந்து நின்றுள்ளது. அதில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் ராஜ்குமாரை கத்தி முனையில் கடத்தி சென்றது.

50 லட்சம் கேட்டு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

கடத்தல் கும்பல் அவரை விடுவிக்க 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு ராஜ்குமார் நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் ‘ஒர்த்தான ஆள்’ கிடையாது, நான் ஏழை என்னை விட்டு விடுங்க என்று கெஞ்சியுள்ளார். அதன்பின் சரி 10 லட்சம் ரூபாயாவது கொடு என்று மிரட்டியுள்ளனர். அதற்கும் ராஜ்குமார், என்னை நம்பி 10 பைசா கூட யாரும் தர மாட்டார்கள் அதனால் என்னை விட்டு விடுங்கன்னு திரும்பவும் கேட்டுள்ளார்.

இதில் வெறுத்துப்போன கடத்தல் கும்பல், இறுதியாக உன்னை கடத்த பயன்படுத்திய டாடா சுமோவுக்கு வாடகையாவது கொடுத்துவிட்டு ஓடிப்போ என்று மிரட்டியுள்ளனர். அதன் பிறகு ராஜ்குமார் தனது தந்தையிடம் சொல்லி 15 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் ராஜ்குமாரை விடுவித்துள்ளனர்.

##~~##
இது சம்மந்தமாக ராஜ்குமார், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி கடத்தலில் ஈடுபட்ட கோபிநாத் மற்றும் பிரதாப் என்ற இருவரை இன்று கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வி.கே.ரமேஷ்

படங்கள்:
க.தனசேகரன்