நான் செய்யும் சிறுதொழில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் என்கிற அளவில் டேர்ன்ஓவர் இருக்கிறது. நான் எனது வரிக் கணக்கை ஒவ்வோர் ஆண்டும் ஆடிட்டர்மூலம் தாக்கல் செய்ய வேண்டுமா?

விவேகானந்தன், சேலம்.

ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோவை.

‘‘நீங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் டேர்ன் ஓவர் செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த வரம்புக்குள் டேர்ன்ஓவர் உள்ள சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் கணக்கைத் தாக்கல் செய்யவேண்டும் என்கிற கட்டாய மில்லை. மேலும், உங்கள் ஆண்டு வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் இருந்தால் அதாவது, ரூ.2.5 லட்சத்துக்குமேல் இருந்தால்தான் வருமான வரியைச் செலுத்த வேண்டும். உங்களுடைய தொழிலுக்கான டேர்ன்ஓவர் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் (ரூ.20 லட்சம்) வரவில்லை என்பதால், உங்கள் வரிக் கணக்கைக் கட்டாயமாகத் தாக்கல் செய்ய வேண்டு மென்பதில்லை. ஆகவே, நீங்கள் ஆடிட்டரிடமிருந்து சான்றிதழ் எதுவும் பெறவேண்டிய கட்டாயமில்லை.’’

நான் பொருள்களைத் தரமாக உற்பத்தி செய்வதில் திறமையுடன் விளங்குகிறேன். ஆனால், அவற்றை எங்கு விற்பது என்று தெரியாமல் இருக்கிறேன். இதற்கு என்ன செய்யலாம்?

ஆர்.கே.கண்ணன், புதுச்சேரி.

முத்துராமலிங்கம், சி.இ.ஓ, www.HelloLeads.io

‘‘இந்தப் பிரச்னை உங்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் இருக்கிறது. என்னுடைய பொருளை எங்கே போய் விற்பது என்கிற கேள்வியை உலகம் முழுக்க உள்ள சிறு தொழில்முனைவர்கள் கேட்டுக்கொண்டி ருக்கிறார்கள். விற்பனையைப் பொறுத்தவரை, இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது, நம்முடைய தயாரிப்புகளை வாங்குவதற்கான வாடிக்கை யாளரைக் கண்டறிவது. இரண்டாவது, அந்த வாடிக்கையாளரிடம் பொருளை விற்பது.

முதலில், வாடிக்கையாளர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று பார்ப்போம். இதற்கு, உங்களிடம் ஒரு நல்ல இணையதளம் இருக்க வேண்டும் என்பதுடன், அந்த இணைய தளத்தினைப் பலரின் பார்வையில் படும்படி நீங்கள் பிரபலப்படுத்தவேண்டும். உங்களின் இணையதளமானது கூகுள் தேடுதளத்தில் வருகிறதா என்பதைப் பார்ப்பது மிக முக்கியம். இப்படிச் செய்வதுடன் மட்டுமல்லாமல், உங்கள் தயாரிப்புகளை நீங்கள் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டா கிராமிலும் பிரபலப்படுத்தலாம். கண்காட்சிகளில் கலந்துகொண்டு, உங்கள் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைப்பதும் நல்ல பலனைத் தரும்.

விற்பனையாளர்களை நியமித்து உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதன் மூலமும், உங்கள் பொருள்களை வாங்க விரும்புகிறவர்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று ‘டெமோ’ செய்து காட்டுவதன்மூலமும் உங்களின் தயாரிப்புகளை வெற்றிகரமாக விற்க முடியும். உங்கள் சக உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் பொருள்களை எங்கு விற்பனை செய்கிறார்கள் என்கிற விவரங்களைத் தெரிந்துகொள்வதும் உங்கள் விற்பனையை உயர்த்த நிச்சயம் உதவும்.

இனி இரண்டாவது விஷயத்தைப் பார்ப்போம். உங்கள் வாடிக்கையாளர் யார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவர்கள் உங்கள் தயாரிப்பினை வாங்கும்வரை தொடர்ந்து ஃபாலோ செய்வது அவசியம். இதற்கு உங்களிடம் தணியாத உற்சாகமும் மொபைல் அடிப்படையிலான நல்ல டூல்ஸ்களும் தேவை. விற்பனையை அதிகப்படுத்துவதற்கு எங்களுடைய ‘ஹலோலீட்ஸ் ஆப் (Hallo Leads App)’ டூல் உள்பட, தற்போது பல டூல்கள் வந்துவிட்டன.

மேற்குறிப்பிட்ட விஷயங்களை நீங்கள் கச்சிதமாகக் கடைப்பிடித்தீர்கள் எனில், உங்கள் தயாரிப்புகளை நீங்கள் நிச்சயமாக நன்கு விற்பனை செய்யமுடியும்!’’

வெளிநாட்டுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்யும்போது எத்தனை வகை பேமென்ட் முறைகள் உள்ளன. அவற்றில் எது பாதுகாப்பான முறை?

- வடிவேல், விழுப்புரம்

கே.எஸ்.கமாலுதீன், இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம்

‘‘ஏற்றுமதிக்கான பேமென்ட் முறைகள் என்று வரும்போது, அட்வான்ஸ் பேமென்ட் (Advance), லெட்டர் ஆஃப் கிரெடிட் (Letter of credit) பேமென்ட், டி/பி பேமென்ட் (Documents against payment (D/P), டி/ஏ பேமென்ட் (Documents against acceptance (D/A), ஓப்பன் அக்கவுன்ட் என ஐந்து பேமென்ட் முறைகள் உள்ளன. இவற்றில் அட்வான்ஸ் பேமென்ட் முறைதான் 100% பாதுகாப்பானது. இதில் ஏற்றுமதிக்குமுன்பே பொருளை வாங்குபவரிடமிருந்து அதற்கான பணத்தினைப் பெற்றுவிடுவதால், பணத்துக்குப் பாதுகாப்பு உறுதி. இந்த அட்வான்ஸ் பணத்தை, ஏற்றுமதிக்கான ஆவணத்தின் ஷிப்பிங் பில்லில் உள்ள வங்கிக் கணக்கு வழியாகப் பரிமாற்றம் செய்வதே நல்லது. அட்வான்ஸ் பேமென்டுக்கு அடுத்ததாக, எல்.சி பேமென்ட் முறை 95% பாதுகாப்பானது.’’

தொகுப்பு: ஏ.ஆர்.குமார்

தமிழகம் முழுக்க உள்ள லட்சக் கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இதுமாதிரி பல கேள்விகளும் சந்தேகங்களும் வருவது இயற்கையே. இந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரிய பதிலை நிபுணர்களிடமிருந்து தருவதே இந்தப் பகுதியின் நோக்கம். நீங்கள் செய்துவரும் தொழில் பற்றி உங்களுக்குக் கேள்விகள் ஏதும் இருந்தால், businessclinic@vikatan.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்கான பதில் நாணயம் விகடன் இதழில் இடம்பெறும்!