மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் மறக்க முடியாத ஆண்டு 2008. காரணம், அந்த ஆண்டுதான் பங்குச் சந்தைக் குறியீடு 50% வரை இறங்கி, பல முதலீட்டாளர்களைக் கதிகலங்க வைத்தது. ஆனால், திருப்பூரைச் சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் அனுராதா தம்பதி, இந்தச் சந்தை இறக்கத்தைக் கண்டு அசரவில்லை. அந்த ஆண்டு தொடங்கிய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டினை இன்றுவரை நிறுத்தாமல் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

விஸ்வநாதன் - அனுராதா தம்பதி, பள்ளி மாணவர்களுக்கான சீருடையைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார்கள். பிசினஸ்மூலம் கிடைக்கும் லாபத்தின் ஒருபகுதியை எதில் முதலீடு செய்து, அதிக லாபம் பார்ப்பது என்று தெரியாமல் தவித்த நிலையில்தான், திருப்பூரில் நாணயம் விகடன் நடத்திய மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். “அந்தக் கூட்டத்தில் நிதி ஆலோசகர் நாகராஜன் சாந்தனைச் சந்தித்தோம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர்” என்ற விஸ்வநாதன் தொடர்ந்து பேசினார்.

‘‘நாங்கள் அரசு அலுவலகத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ வேலை செய்யவில்லை. பிசினஸ் நன்றாக நடந்தால்தான் எங்களுக்கு வருமானம். எனவே, இப்போது பிசினஸ்மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒருபகுதியை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து எதிர்காலத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடிவெடுத்தேன். 2008-ம் ஆண்டு தொடங்கி, நீண்டகால முதலீடாக மூன்று ஃபண்டுகளில் ரூ.5,000 எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய ஆரம்பித்தேன். இப்போது எங்களுக்குக் கிடைக்கும் வீட்டு வாடகை வருமானத்தை அப்படியே மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்கிறேன். கடந்த 11 ஆண்டு களாக நான் சேர்த்த பணம் என் மகள்கள் ஷிவாணி, ஹரிணியின் மேற்படிப்புக்கும், கல்யாணத்தை ஜாம்ஜாம் என்று செய்து முடிக்கவும் கைகொடுப்பதாக இருக்கும். தவிர, எங்கள் ஓய்வுக்காலத்துக்கும் இந்த முதலீடு உதவும்’’ என்ற விஸ்வநாதனைத் தொடர்ந்து, அவர் மனைவி அனுராதா பேசினார்.

‘‘என் அப்பா, தன் பேத்திகளுக்காக தங்கத்தில் முதலீடு செய்து வந்தார். தங்கத்தைவிட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு லாபகரமாக இருக்கும் என அவருக்கு விளக்கிச் சொன்னோம். இப்போது அவர் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறார். அவர் மட்டுமல்ல, என் அக்கா, அக்காவின் மகள் எனப் பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டார்கள். எங்கள் மூத்த மகள் ஷிவாணி வேலைக்குச் சேர்ந்து முதல் சம்பளம் வாங்கியதுமே எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பித்து விட்டார்’’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் அனுராதா.

முதலீடு விஷயத்தில் விஸ்வநாதன் - அனுராதா குடும்பம் மற்றவர்களுக்கு நல்ல உதாரணம்!

சி.சரவணன்

உங்களின் எஸ்.ஐ.பி முதலீட்டு அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயிலுக்கு அனுப்பிவைக்கலாம்.