அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரினால் ஏற்பட்ட பதற்றம் நமது பங்குச் சந்தை உள்பட பலவற்றிலும் எதிரொலித்துக்கொண்டிருக்க, இந்தியா சந்திக்கவேண்டிய சவால்கள் என்னென்ன என்பது குறித்துப் பேச சென்னைக்கு வந்திருந்தார் ஏசியன் டெவலப்மென்ட் பேங்கின் டைரக்டர் ஜெனரல் ரமேஷ் சுப்ரமணியன். சென்னை இன்டர்நேஷனல் சென்டர் (CIC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசினார் அவர். அவர் பேசியதிலிருந்து முக்கியமான கருத்துகள் இனி...

‘‘அமெரிக்க - சீன வர்த்தகப் போரினால் குறுகிய காலத்தில் சில நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்றாலும், எல்லா நாடுகளுக்குமே பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, வளர்ந்த நாடுகளின் பொருளாதார வேகம் கொஞ்சம் மட்டுப்படும். இந்த வர்த்தகப் போரினால், நீண்ட காலத்தில் சீனாவைவிட அமெரிக்காதான் அதிக பலனடையும். ஆனாலும், அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு என்பது வேகமாக இருக்காது. இதனால் நிதித் துறைகளில் ஏற்ற இறக்கம் என்பது இருந்துகொண்டிருக்கும்.

உலக அளவில் ஆசிய நாடுகள்தான் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுவருகின்றன. குறுகிய காலத்தில் ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் நன்றாகவே இருக்கிறது.

ஆசிய நாடுகளில் இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், பூட்டான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாப்புவா நியூகினியா ஆகிய நாடுகளின் ஜி.டி.பி மட்டுமே ஏற்றத்தில் உள்ளன. இதில் 8% என்கிற அளவில் ஆப்கானிஸ்தானும் 7.2% என்கிற அளவில் இந்தியாவும் ஜி.டி.பி வளர்ச்சி கண்டுவருகின்றன. ஆசியாவின் மற்ற நாடுகள் எல்லாம் இந்த அளவைவிடக் குறைவாகவே வளர்ச்சி கண்டுவருகின்றன.

இன்றைக்கு இந்தியாவின் மிகப் பெரிய சவாலாக இருப்பது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான். இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவுக்கு வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி அதிகரிக்கவில்லை. 2011-12-ம் ஆண்டில் கிடைக்கும் புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது, வேலை செய்பவர்களில் 90% பேர் முறைசாராதவர்களாகவே இருக்கிறார்கள். உற்பத்தித் துறையில் 10.9 சதவிகிதத்தினர் மட்டுமே முறைசார்ந்தவர்களாக இருக்கிறார்கள். சேவைத் துறையில் 20 சதவிகிதத்தினர் முறைசார்ந்தவர்களாக இருக்கிறார்கள். கடந்த 2011-12-ல் மொத்த வேலைவாய்ப்பில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 12 சதவிகிதமாக இருந்து, 2015-16-ல் 10.3% குறைந்துபோனது இதற்கு ஓர் உதாரணம்.
உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதில் இந்தியாவுக்குப் பல சவால்கள் இருக்கின்றன. உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்காக 230 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 16.10 லட்சம் கோடி) தேவைப்படுகிற நிலையில், இதில் பாதி அளவுக்கு மட்டுமே செலவழிக்கப்படும் நிலை இருக்கிறது.

நகர்ப்புறங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கழிவறை வசதி இல்லாதவர்கள் 2005-ல் அதிகமாக இருந்தாலும், 2015-ல் 7.4 சதவிகிதமாகக் குறைந்திருக் கிறது. இது உலக அளவில் அதிகம்தான். சுகாதார வசதிகள்கூட உலக நாடுகளில் இந்தியாவில்தான் குறைவாக இருக்கிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் சேரிகளில் வசிக்கும் மக்கள் சுமார் 24% பேர் இருக்கின்றனர். இதுவும் மற்ற நாடுகளைவிட அதிகம்தான்.

இப்படிப் பல சவால்கள் இந்தியாவுக்கு இருந்தாலும், இந்த சவால்களையெல்லாம் வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ளலாம்’’ என்றவர், இந்திய நாடு சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமான பதிலைத் தந்தார் ரமேஷ் சுப்ரமணியன்.

இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்துத் தந்தார் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பொருளாதார விஷயங்களில் புலியாக இருக்கும் இவர், தமிழக அரசுக்குக் கிடைத்த மிகப் பெரிய சொத்து என்றுகூடச் சொல்லலாம்!

- ஏ.ஆர்.குமார், படங்கள்: ப.பிரியங்கா