Published:Updated:

முதன்முறையாக சம்பளம் தராமல் ஊழியர்களைத் தவிக்கவிடும் பி.எஸ்.என்.எல்!

முதன்முறையாக சம்பளம் தராமல் ஊழியர்களைத் தவிக்கவிடும் பி.எஸ்.என்.எல்!
முதன்முறையாக சம்பளம் தராமல் ஊழியர்களைத் தவிக்கவிடும் பி.எஸ்.என்.எல்!

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக, அதில் பணியாற்றும் சுமார் 1.76 லட்சம் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் இன்னமும் கொடுக்கப்படவில்லை. வழக்கமாக மாத இறுதி நாளில் சம்பளம் பெற்றுவந்த ஊழியர்களுக்கு இம்மாதச் சம்பளம் இருவார காலமாகத் தாமதப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முதன்முறையாக சம்பளம் தராமல் ஊழியர்களைத் தவிக்கவிடும் பி.எஸ்.என்.எல்!

மத்திய அரசு, ஜியோ போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படும் சூழலில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பது அந்த எண்ணத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.8,000 கோடி வருமான இழப்பைச் சந்தித்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.4,786 கோடி வருமான இழப்பைச் சந்தித்தது. இந்த வருமான இழப்பு, நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரியில், சம்பள உயர்வு, 4ஜி உரிமம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். இதை மனதில்கொண்டுதான் சம்பளத்தைத் தாமதப்படுத்துவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம்சுமத்துகிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்த்து, ஊழியர்களுக்கு சம்பளத்தைக் கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி தொலை தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில், பிப்ரவரி மாதச் சம்பளம், வரும் 20-ம் தேதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.