Published:Updated:

அதிக லாபம், டர்ன் ஓவர்: இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமானது ரிலையன்ஸ்! 

மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2018-19-ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தைக் காட்டிலும் அதிக லாபம் ஈட்டி, இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டர்ன் ஓவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation - IOC) நிறுவனத்துடன் ஒப்பிடுகையில், அதில் பாதியளவே இருந்தது. ஆனால், அதற்குப் பின்னர் அந்த நிறுவனம் தொலைத் தொடர்பு, சில்லறை விற்பனை, டிஜிட்டல் சேவை எனப் பல தளங்களில் தனது தொழிலை விரிவுபடுத்தி, பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. 

இந்த நிலையில், கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 2018-19-ம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 6.23 லட்சம் கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்துள்ளது. அதே சமயம் ஐஓசி நிறுவனம் 6.17 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே டர்ன் ஓவர் செய்துள்ளது. 

லாப அடிப்படையில் பார்த்தால், ஐஓசி நிறுவனம் மேற்கூறிய நிதியாண்டில் 17,274 கோடி ரூபாய்  நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதே சமயம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஐஓசி-யைவிட இரு மடங்கு, அதாவது 39,588 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

கடந்த ஆண்டு வரை அதிக லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றாக இருந்த ஐஓசி நிறுவனம், இன்னொரு பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்திடம், கடந்த 2018-19-ம் நிதியாண்டில் அந்த நிலையை இழந்தது. ஓஎன்ஜிசி நிறுவனம், கடந்த நிதியாண்டுக்கான தனது வரவு செலவு அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை என்றபோதிலும், அந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களிலேயே 22,671 கோடி  ரூபாய் லாபம் ஈட்டிவிட்டது. 

ஐஓசி நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் ஆகியவை அதன் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் எரிவாயு தொழிலைச் சார்ந்தே உள்ளது. 2017-18-ம் நிதியாண்டில் இந்த நிறுவனம் 22,189.45 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியிருந்த நிலையில், கடந்த 2018-19-ம் நிதியாண்டில் இது 23.6 சதவிகிதம் குறைந்துள்ளது. 

இதன்மூலம் வருவாய், லாபம் மற்றும் சந்தை மூலதனம் ஆகிய 3 அம்சங்களின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனம், மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் முன்னணியில் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம், தனது எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் மூலம் ஒருபக்கம் நல்ல லாபம் ஈட்டி வருகிற நிலையில், அதன் சில்லறை விற்பனைப் பிரிவும் 2018-19-ம் நிதியாண்டில் 44 சதவிகித வருவாய் பங்களிப்பை அளித்துள்ளது. 

அதிக லாபம், டர்ன் ஓவர்: இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமானது ரிலையன்ஸ்! 

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை 1,345 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், அதன் சந்தை மூலதன மதிப்பு 8.52 லட்சம் கோடியாக அதிகரித்தது. 

இதனிடையே ரிலையன்ஸ் நிறுவனம், 2019 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, தனது வரவு செலவு கணக்குப் புத்தகத்தில் 1.33 லட்சம் கோடி ரூபாய் ரொக்க கையிருப்பு இருப்பதாகவும், 2.87 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஐஓசி நிறுவனம் தனக்கு 92,700 கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.