முடிந்த காலாண்டு முடிவுகள் மற்றும் டெக்னிக்கல் அடிப்படையில் அடுத்து வரும் காலாண்டுகளில் முக்கிய நிறுவனப் பங்குகளின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பங்குச் சந்தை நிபுணர் லெட்சுமணராமன் விளக்கிச் சொன்னார்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி!

. நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான இது செலவுகளை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த வங்கியில் கடன் வாங்குபவர்களின் தரம் உயர்ந்திருப்பது பாசிட்டிவ் ஆன விஷயம்..!.
அண்மைக் காலத்தில் பங்கின் விலையில் நல்ல ஏற்றம் ஏற்பட்டிருக்கிறது. 1,000 ரூபாயைத் தாண்டுவது சற்று சிரமம். அதைத் தாண்டினால் சுலபமாக ரூ.1,150 ரூபாய்க்கு செல்லக் கூடும். ரூ.900 என்பது நல்ல சப்போர்ட் ஆக உள்ளது. அதையே ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளலாம்.

பெட்ரோ நெட்!

இந்நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருகிறது. விற்பனை அதிகரிப்பால் முடிந்த மூன்றாவது காலாண்டில் நிகர லாபம் 74% உயர்ந்திருக்கிறது.

டெக்னிக்கல்படி பார்த்தால், கடந்த இரு மாதங்களாக இந்தப் பங்கின் விலை ரூ.150 முதல் ரூ.175 இடையே வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இதை தாண்டும்பட்சத்தில் ரூ.185-220-க்கு செல்லக் கூடும்.

அப்போலோ டயர்ஸ்!

ரப்பர் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பது, இந்தியாவில் வர்த்தக வாகனங்களுக்கான தேவை கூடியிருப்பது போன்றவை இந்நிறுவனத்துக்குச் சாதகமான அம்சங்கள்..! பங்கின் விலை குறைய குறைய வாங்கி சேர்க்கலாம்..! நீண்ட கால இலக்கு விலை ரூ.115.

கோத்ரெஜ் இண்டஸ்ட்ரிஸ்!

இந்த நிறுவனத்துக்கு இக்ரா 4/5 என்ற தரக்குறியீட்டை தந்திருக்கிறது. அந்த வகையில் இதன் அடிப்படை வலுவானதாக இருக்கிறது. இந்த பங்கின் விலை ரூ.225-230-க்குள் வர்த்தகமாகி வருகிறது. இந்நிலை உடைபடும்போது வேகமாக மேலேறக்கூடும். நீண்ட கால இலக்கு விலை ரூ.310.

எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ்!

இதன் வருமானம் மற்றும் நிகர லாபம் தொடர்ந்து சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. வீட்டுக் கடன் அசல் மற்றும் வட்டிக்கான வரிச் சலுகை வரம்பு வரும் பட்ஜெட்டில் உயர்த்தக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. அப்படி நடந்தால் இந்த நிறுவனத்துக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். இந்நிறுவனப் பங்கின் விலை நடுத்தர காலத்தில் ரூ.290, நீண்ட காலத்தில் ரூ.350-360-ஆக அதிகரிக்கக் கூடும்.

மாரிக்கோ!

கேசம் மற்றும் மேனி பராமரிப்பு பிரிவில் சுமார் 30 சதவிகித வளர்ச்சி கண்டு வருகிறது. பங்கின் விலை ரூ.137 மற்றும் ரூ.170 இடையே வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இந்நிலை உடைந்து மேலே போனால் ரூ.205-க்கு அதிகரிக்கக் கூடும்.

ஹெக்ஸாவேர்!

வளர்ச்சிக்கான ஒப்பந்தங் களையும் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் பங்கின் விலை ரூ.170 வரை உயரலாம்.

கீதாஞ்சலி!

இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவது இந்நிறுவனத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. மூன்றாவது காலாண்டில் நிகர லாபம் 28% அதிகரித்திருக்கிறது. 2011 டிசம்பரில் பங்கின் விலை ரூ.387 மற்றும் ரூ.286 இடையே வர்த்தகமாகி உள்ளது. அந்த வகையில் பங்கின் விலையில் கரெக்ஷன் வர வாய்ப்பு இருக்கிறது. அப்போது முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பார்க்க முடியும். நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் பங்கின் விலை ரூ.550 வரை உயரக்கூடும்.

பி.என்.பி.!

பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி.) அதன் வாராக் கடன்களை மறுசீரமைப்பு செய்து வருகிறது. அதன் மொத்தக் கடனில் வாராக்கடன் சுமார் 6.4% ஆக இருக்கிறது. பங்கின் விலையில் ஹெட் அண்ட் சோல்டர் பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. ஸ்டாப் லாஸ் ரூ.990 வைத்துக் கொண்டு முதலீடு செய்யவும். பங்கின் விலை 1,225 ரூபாய்க்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ்!

முடிந்த காலாண்டில் இழப்பில் இருந்து லாபத்துக்குத் திரும்பி இருக்கிறது. பங்கின் விலை இறங்கும் போது வாங்கிக் கொள்ளலாம்.

அல்ட்ராடெக் சிமென்ட்!

மூன்றாவது காலாண்டில் இதன் நிகர லாபம் 93% அதிகரித்துள்ளது. வரும் காலாண்டுகளில் இந்தியாவில் சிமென்ட் தேவை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் பங்கின் விலை ரூ.1,100லிருந்து 1,490 ரூபாய்க்கு அதிகரித்துள்ளது. இதனால், பங்கின் விலை குறையும் போது வாங்குவதுதான் லாபகரமாக இருக்கும். நீண்ட காலத்தில் பங்கின் விலை 2,000 ரூபாய்க்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

படம்: எம்.உசேன்.