Published:Updated:

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

பிஸினஸ்

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

பிஸினஸ்

Published:Updated:
ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!


எது சரியான பிஸினஸ் மாடல்?

நெருங்கிய நண்பர்கள் இருவர். நடுத்தர வருடங்களைத் தாண்டிய வயது. தினமும் மாலையில் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும்முன் ஒருவரை ஒருவர் சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு வருவது வழக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

ன்றும் அப்படித்தான். வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று தண்ணீர்  கேட்டார். தண்ணீரை குடித்துக் கொண்டிருக்கும் போதே நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார். உடனே ஒரு டாக்டர் வந்து பார்க்க, ''ஸாரி, சிவியர் ஹார்ட் அட்டாக் வந்திருக்குன்னு நினைக்கிறேன். உயிர் பிரிஞ்சிடுச்சு'' என்றார்.

நான் சொல்வது கற்பனைச் சம்பவம் அல்ல. என் வாழ்க்கை யில் நடந்த உண்மைச் சம்பவம். உங்களில் பலர் இத்தகைய நிகழ்ச்சிகளை கேட்டோ, அனுபவப்பட்டோ இருக்கலாம். மருத்துவ உதவி வரும் வரை மாரடைப்பு ஏற்பட்டவருக்கு உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா?

##~##
மாரடைப்பு ஏற்பட்டவர் களுக்குத் தக்க மருத்துவ உதவி வரும் வரை அவசர கால செயல்முறையாகப் பரிந்துரைக்கப்படுவது மீளுயிர்ப்பு சுவாசம் எனப்படும் Cardiopulmonary resuscitation அதாவது சிபிஆர் எனப்படும் செயல்முறை ஆகும். பல திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், சில வருடங்களுக்கு முன்னால் வந்த சிவாஜி திரைப்படத்தில் கட்டடப் பணி புரியும் சிறுவன் ஒருவன் மின்னதிர்ச்சி ஏற்பட்டு தூக்கி எறியப்பட்டிருப்பான். அந்த அதிர்ச்சியில் அவனுடைய இதயம் ஸ்தம்பித்து போயிருக்கும். மருத்துவராக நடித்த ரகுவரன் அந்தச் சிறுவனின் நெஞ்சை அழுத்தி உயிர்த்தெழச் செய்த காட்சி உங்கள் நினைவுக்கு வரலாம்.

அதுவும் சிபிஆர் செயல் முறையைச் சேர்ந்ததுதான். மனஅழுத்தம், துரித உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற பல காரணங்களினால் இன்று மாரடைப்பு பலரை பாதிக்கிறது. அதே சமயம் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களினால் பலரும் நோயிலிருந்து வெற்றிகரமாக குணமடைந்து வருகின்றனர். ஆனால், சென்ற வாரம் நான் கூறியிருந்தது போல் மாரடைப்பு ஏற்பட்ட பிறகு இருக்கும் நிமிடங்கள் பொன்னான நேரம் என்று கூறலாம். அருகில் இருப்பவர் அந்த நேரத்தில் முறையாக சிபிஆர் செய்தால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு பலமுறை அதிகரிக்கும்.

சமுதாயத்தில் அனைவரும் இத்தகைய சிபிஆர் பயிற்சி பெற்றிருந்தால் மாரடைப்பு மூலம் இறப்போர் பலரை காப்பாற்ற முடியும் என்று நினைத்தார்கள் வருண் துரையும், கனகப்பிரியாவும். தொடு அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மனித பொம்மையை உருவாக்கினர். ஜவுளிக் கடையின் வாயில்களில் இத்தகைய நிஜ அளவிலான உருவகங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அதேபோன்ற ஒரு நிஜ உருவ பொம்மைதான் இவ்விருவர் உருவாக்கியதும். அந்த பொம்மை மூலம் அனைவரும் சிபிஆர்.-ஐ எப்படி செய்வது என்பதை அறிந்து கொள்ளலாம். ஒரு உண்மையான மனிதருக்கு சிபிஆர் செய்வது எப்படி இருக்கும் என்கிற அனுபவத்தை ஒருவர் தத்ரூபமாக அந்தப் பொம்மையின் மேல் பயிற்சி செய்வதின் மூலம் பெறமுடியும்.

விமானம் ஓட்டும் பயிற்சி பெறுபவர்கள் நிஜ விமானம் ஓட்டுவதற்கு முன் சிமுலேடர் மூலம் பயிற்சி பெறுகிறார்கள் அல்லவா? அதே மாதிரிதான் மெர்கல் ஹாப்டிக்ஸ் தயாரித்திருக்கும் பொம்மையும். நிஜமாகவே ஒருவருக்கு சிபிஆர் செய்யும் அனுபவத்தை இது தருகிறது. சிபிஆர் செய்வதில் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது, நெஞ்சை எப்படி அழுத்துவது? எவ்வளவு அழுத்தம் கொடுப்பது? எவ்வளவு தூரம் அழுத்துவது? ஒரு குறிப்பிட்ட நிமிடங்களில் எத்தனை முறை அழுத்த வேண்டும்?

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

இத்தகைய பயிற்சியை நேரடியாக ஒருவர் மேல் மேற்கொண்டால் எவ்வளவு அசௌகரியமாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். அதனால்தான் வருணும், கனகப்பிரியாவும் அவர்கள் தயாரித்திருக்கும் இந்த பொம்மை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பினார்கள்.

இன்று அம்மாதிரி ஒரு உருவகம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது, ஆனால் அது மேல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றின் விலையும் அதிகம். நம் நாட்டிலேயே வடிவமைத்திருப்பதால் மெர்கல் ஹாப்டிக்ஸ்  தயாரித்திருக்கும் உருவகம் மிகவும் மலிவான விலையில் இருக்கிறது. அது மட்டுமின்றி மெர்கல் ஹாப்டிக்ஸின் தொழில்நுட்பம் மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது.

அதனால், இந்த தொழில் நுட்பத்தை ஆதாரமாக வைத்து சமுதாயத்திற்கு உகந்த, ஒரு லாபகரமான நிறுவனத்தை உருவாக்க முடியும் என இருவரும் நம்பினார்கள். தற்போதுள்ள விலையுயர்ந்த சிபிஆர் பயிற்சிகள் பொது மக்கள் பலரையும் சென்று அடைவதில்லை. ஆனால், அவர்கள் உருவாக்கிய உருவகத்தின் மூலம் மலிவாக சிபிஆர் பயிற்சி தரமுடியும் என்பதினால், அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று உணர்ந்தார்கள்.

ஆனால், இத்தகைய நிறுவனத்தின் பிஸினஸ் மாடல் என்னவாக இருக்கலாம் என்பதை யோசித்தனர். பரந்த அளவில், இரண்டு வழிகள் இருப்பது அவர்களுக்குப் புரிந்தது. ஒவ்வொன்றிற்கும் அதற்கான குறைகளும் நிறைகளும் இருந்தன. உருவகங்களை அவர்களே தயாரித்து, பயிற்சியாளர்களை நியமித்து, பலருக்கும் பயிற்சி அளிப்பது ஒரு வழி. இதில் முதலீடு அதிகம் தேவைப்படும். பல ஊழியர்களை நியமித்து அவர்களை மேலாண்மை செய்ய வேண்டும்.

இரண்டாவது வழி, உருவகத்திற்கான தொழில் நுட்பத்தின் உரிமத்தைக் குறிப்பிட்ட உற்பத்தியாளர் களுக்கு கொடுப்பது. இம்முறையில் விற்பனைக்கேற்ப ராயல்டி வருவாய் கிடைக்கும். இந்த பிஸினஸ் மாடலில் ஆரம்ப முதலீடு அவ்வளவாகத் தேவைப்படாது. ஆனால், உரிமம் பெறும் நிறுவனம் தொழில்நுட்பத்தை அபகரித்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. நுகர்வோரிடம் நேரடி தொடர்பும் அவ்வளவு இறுக்கமாக இருக்காது.    

இந்த இரண்டு பிஸினஸ் மாடல்களில் இதுதான் சரி, தவறு என்றில்லை. சூழ்நிலை,  தொழில் முனைபவர்களின் முதலீடு செய்யும் திறன், மேலாண்மை அனுபவம் ஆகிய காரணிகளைப் பொறுத்தே அது அமையும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், பிஸினஸ் மாடல் என்பதை தீர யோசித்து, பிறகு அலசி ஆராய்ந்த பிறகே முடிவு செய்ய வேண்டும். இல்லையேல் நிறைய பணத்தை விரயமாக்க நேரிடும். யானை அசைந்து கொண்டே தின்னும், வீடு அசையாம தின்னும் என்று சொல்வார்கள். ஆனால், பிஸினஸ் எப்படி தின்னும் என்று சொல்லவே முடியாது. தவறான பிஸினஸ் மாடலினால் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தையும் இழக்க நேரிடலாம். ஆக, தொழில் தொடங்க இருக்கும் நிலையில் முனைவர்கள் சற்று எச்சரிக்கையாகவும் கவன மாகவும் இருந்தால் நன்று.

குறும்புக்கார மாணவன் ஒருவன் தன் பேராசிரியரிடம் கேட்டானாம். 'சார், எனக்கு ஃபேஷன் மாடல் தெரியும். அதென்ன பிஸினஸ் மாடல்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?'

சற்றும் சளைக்காத பேராசிரியர் கூறினாராம், 'ஃபேஷனை பிசினஸாக கருதுவோர் பேஷன் மாடல்ஸ். ஆனால், ஃபேஷனுகேற்ப பிஸினஸ் செய்வதுதான் பிஸினஸ் மாடல்' என்றாராம்.

படம்: கே.கார்த்திகேயன்

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!

கேளுங்கள் சொல்கிறேன்!

என்னால் என் தொழிலை திருப்திகரமாகச் செய்ய முடியவில்லை. என்னால் ஆட்களை சரிவர நிர்வாகம் செய்ய முடியவில்லை. எனக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்.

ரஜினி, சின்ன சேலம்.

''அன்பு வாசகருக்கு,

தொழில் செய்வதில் உள்ள கஷ்டங்களை உங்கள் அனுபவம் நன்கு பிரதி பலிக்கிறது. எந்தவொரு பிரச்னைக்கும் பிறரிடம் மனம் விட்டு பேசினால் கண்டிப்பாக எதாவது ஒரு வழி பிறக்கும். அதையேதான் நான் உங்களுக்கும் பரிந்துரை செய்வேன். உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான, உங்கள் தொழிலைப் பற்றி பல்வேறு நுணுக்கங்களை அறிந்த ஒருவரை தேர்வு செய்து கொண்டு, உங்கள் பிரச்னையை எடுத்துச் சொன்னால், உங்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

உங்களைப் போன்ற தலைமை நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்சி தரவும், ஆலோசனை சொல்லவும் சில பயிற்சியாளர்கள் (சிணிளி சிஷீணீநீலீ/விமீஸீtஷீக்ஷீ) இருக்கின்றனர். அவர்களிடம் நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை சென்று கவுன்சலிங் அல்லது கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். உங்கள் பிரச்னைகளுக்கு புது வழிகளைக் காட்டும்.

இந்த பயிற்சியாளர்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. உங்களுக்கு அத்தகைய சிரமம் இருந்தால் ஏதாவது தொழில் முனைபவர்கள் சங்கங்களில் (இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த சங்கங்களின் முகவரியை சொல்லி இருக்கிறேன்!) உங்களைப் போல பல நிர்வாக முகவர்களை நீங்கள் சந்தித்து பேசலாம். உங்களுக்கு நேர் போட்டியாளராக இல்லாத முனைவர்களிடம் பரஸ்பரம் கலந்துரையாடினாலும் உங்கள் உற்சாகம் அதிகரிக்கும்.

இதுவும் வொர்க் அவுட் ஆக வில்லையா? மேலாண்மைக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருப்பவர்களை அணுகுங்கள். கல்வித் துறையில் இருக்கும் பேராசிரியர் உங்கள் தொழிலை வெறுப்பு, விருப்பின்றி அலசி ஆராய்வார்கள். எனவே, அவர்கள் சொல்லும் யோசனை உங்களுக்குச் சரியானதாகவே இருக்கும்.

ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்!


வாடிக்கையாளரைக் கவரும் வழி!  

மெரிக்காவின் அட்லாண்டா நகரத்தில் டேவிட் லெஃப்ட் கோவிட்ஸ் கட்டட கான்ட்ராக்டர். பழைய வீடுகளை இடிப்பதும், புதுப்பிப்பதும் இவருடைய ஸ்பெஷாலிட்டி. ஒரு தெருவில் வீட்டை இடிக்கும் கான்ட்ராக்ட் எடுத்தவுடன், டேவிட் செய்யும் முதல் வேலை அந்தத் தெருவில் வசிக்கும் எல்லோருடைய பெயர், விலாசங்களையும் சேகரிப்பார். அவர்கள் எல்லோருக்கும் ஒரு கடிதம் எழுதுவார்.

''அன்புள்ள ஜான்,

நான் உங்கள் தெருவில் 23- ம் எண்  வீட்டை இடித்துப் புதுப்பிக்கும் கான்ட்ராக்ட் எடுத்திருக்கிறேன். சுமார் ஆறு வாரங்கள் வேலை நடக்கும். இந்த சமயத்தில் வரும் தூசி, சப்தம் ஆகியவை அதிகமாக வராமல் எங்கள் வேலையைச் செய்ய முயற்சிப்போம். எங்கள் முயற்சிகளை மீறி ஏதும் தொந்தரவுகள் ஏற்பட்டால் மன்னித்தருளுங்கள்.  

நாங்கள் அறியாமல் தொந்தரவு ஏதும் செய்தால், என் மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள்'' என்ற கடிதத்துடன் தன் நம்பரையும் கொடுப்பது வழக்கம்.

கடிதத்தைப் படிக்கும் ஜான் தன் வீட்டைப் புதுப்பிக்க யாரைக் கூப்பிடுவார் என்று நினைக்கிறீர்கள்? இப்படி ஒரு முயற்சியை நீங்கள் செய்து பார்த்திருக்கிறீர்களா?

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism