Published:Updated:

திருமதி எஃப்.எம்.

வீட்டு நிதி நிர்வாகம்

திருமதி எஃப்.எம்.

வீட்டு நிதி நிர்வாகம்

Published:Updated:
திருமதி எஃப்.எம்.

கணவரின் தொழிலுக்கு பக்கபலம், தொழில் முனைவோராகச் சொந்தக்காலில் நிற்கும் திடம், ஏரியா மகளிர் சுய உதவிக்குழுத் தலைவி, கூட்டுக்குடும்ப நிதி நிர்வாகம் என்று பன்முகம் காட்டும் பட்டதாரி பெண்மணி சிந்துஜா இளங்கோவன். அவர்தான் இந்த வார திருமதி எஃப்.எம்.                

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நி
தி நிர்வாக ஆர்வம்ங்கிறது என்னோட சிறு வயது தொட்டே பழக்கமாயிடுச்சு. எனக்கு ராசி அதிகம்னு என் அம்மா, அப்பாவின் கருத்து. சம்பளம் வாங்கி வந்ததும் செலவு, சேமிப்பு, முதலீடுன்னு எல்லாத்துக்கும் என் மூலமாதான் கரன்சி போக்குவரத்து அமையும். பிறந்தகத்துல மட்டுமல்ல, புகுந்தகத்திலும் அது தொடருது'' என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்த சிந்துஜா, தன்னுடைய நிதி நிர்வாக ரகசியத்தைப் பல அனுபவங்களின் மூலம் அடுக்கிக் கொண்டே போனார்.  

''திருமணமாகி வந்த புதுசுல லால்குடியில என் கணவர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்ல ஒருத்தரா இருந்தார். சம்பாதிக் கணும்ங்கிற கனவு, ஆசை எல்லாம் அவருக்குள்ள இருந்தாலும் எதுவுமே நடைமுறையில ஸ்திரமா பிடி படலை. காரணம் வருமானம், செலவு இந்த விகிதத்தை பேலன்ஸ் பண்ற நுணுக்கத்துல இன்னும் நிறைய விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருந்ததால, அடுத்த கட்டத்துக்குப் போக முடியாம இருந்தாரு.  

என்னோட பாலபாடமான கணக்கு எழுதும் கலையைப் பயன்படுத்தி, அவர்கிட்ட காட்டுனேன். ''அட, இவ்ளோ சம்பாதிக்கிறேனா! அப்புறம் எங்கே உதைக்குது?’ என்று அவரை ஆச்சரியப்பட வைத்தேன். ஒரு நோட்டுல பச்சை இங்க்ல வரவையும், புளூ இங்க்ல செலவையும் எழுதிட்டு வருவேன். ஒவ்வொரு அஞ்சு நாளைக்கு ஒரு தரமும் உட்கார்ந்து கணக்குகளை முடிச்சு சரிபார்த்துடுவேன். இப்படி கணக்கு எழுதறதுல துவங்கி பல ஒழுங்குகளுக்குள்ள நாம வந்துட்டோம்னா, பண விவகாரத்துல துணிஞ்சு ரிஸ்க் எடுக்கலாம்ங்கிறது என்னோட அனுபவம்.

திருமதி எஃப்.எம்.

இப்படி கச்சிதமா கணக்கு எழுதி ஆரம்பிச்சதனாலதான் சைக்கிள்ல சுத்திகிட்டு இருந்த என் கணவரை இ.எம்.ஐ. லோன் போட்டு டி.வி.எஸ். 50 வாங்க வச்சேன். அதேபோல என் மாமனார் கட்டின புது வீட்டுக்கான வங்கிக் கடனை கட்றதுக்கே குடும்ப வருமானம் பாதி போய்ட்டு இருந்தது.  இடையிடையே தவணை தவறும்போதெல்லாம் பேங்க் அதிகாரிகள் வீடு தேடி விசாரிக்கிற அவஸ்தையையும் கொடுக்கவே, துணிஞ்சு என்னோட நகைகளை அடமானம் வச்சு அந்த வீட்டுக் கடனை முழுவதும் கட்டி முடிச்சேன்.

மாதாந்திரம் வீட்டுக் கணக்கை சரி பார்த்து உபரியா இருக்கிற தொகையை சீட்டு போட்டு வருவேன். சீட்டு பணத்துல நகை வாங்கி வைப்பேன். எனக்கு இரண்டுமே பசங்கன்னாலும் கணவரோட பிஸினஸ் விஸ்தரிப்புக்கு இந்த நகைகள்தான் கைகொடுத்தது. பிறகு, மாதாமாதம் கோல்டு ஆர்.டி. மூலமா தங்க காயின்கள் வாங்கி சேமிக்க துவங்கினேன். எங்க வளர்ச்சியோட அடுத்த கட்டமா புகுந்த வீடு பக்கத்திலேயே ஒரு மனை கிடைக்கவே சட்டுனு வாங்கிப் போட்டுட்டு, அதில எங்க கனவு இல்லத்தை எப்படி கட்டுறதுனு முடிவு செஞ்சோம். அதுக்குத் தேவையான பணம் கொஞ்சம் குறைஞ்சப்ப, என் அம்மாவிடம் கடன் வாங்கி பிறகு அதையும் மாதந் தவறாம கட்டி முடிச்சேன். கடன் வாங்குறது தப்பே இல்லை. ஆனால், அதை எப்படி திருப்பிக் கட்டுவோம்ங்கிற தெளிவும் தீர்க்கமான ஒழுங்கும் இருக்கணும்.

என்னோட ரெண்டு பசங்களும் ஸ்கூல் போக ஆரம்பிச்சபிறகு எனக்கு ஓய்வுநேரம் அதிகமா கிடைச்சது. பல வருடமா எங்க ஏரியாவுல மகளிர் சுய உதவிக்குழு தலைவியா இருந்து வர்றேன். என்னுடைய நிதி அறிவை பெருக்கிக்கிறதுக்கும், மத்தவங்களுக்கு உதவியா இருக்குங்கிறதுக்காகவும் 'நாணயம் விகடனை’ தொடர்ந்து வாசிக்கிற பழக்கம் எனக்கு உண்டு. அப்படித்தான் ஒரு தடவை பேப்பர் கப் பிஸினஸ் பற்றி விலாவாரியான கட்டுரை நாணயம் விகடன்ல படிச்சேன். அது பத்தி எங்க மகளிர் குழு முன்னாடி வச்சப்ப, பலரும் அத ஏத்துக்க தயங்கினாங்க.

ஆனா, தனிப்பட்ட விதத்துல அந்தக் கட்டுரை எனக்குள்ள பெரும் தாக்கத்தைத் தந்ததால மெள்ள கணவர்கிட்டேயும், வீட்டு பெரியவங்ககிட்டேயும் ஓப்பன் பண்ணினேன். எங்க வீட்ல எந்த புது ஐடியாவை யார் சொன்னாலும், அதை வாண்டுங்கள்ல ஆரம்பிச்சு வீட்டுப் பெரியவங்க வரை எல்லாரும் விவாதிப்போம். பேப்பர் கப் யோசனைக்குப் பயங்கர வரவேற்பு கிடைச்சுது என் குடும்பத்துல. பெரும் பங்கு வங்கிக் கடனோட, பல லட்சம் முதலீட்டுல ஆறு மாசம் முன்னாடி ஆரம்பிச்ச பேப்பர் கப் பிஸினஸ் இன்னைக்கு செம பிக்-அப்.

திருமதி எஃப்.எம்.

நல்ல விஷயங்களை தாராளமா ஏத்துக்கிற மாதிரி, தப்பாபட்டதுன்னா எவ்வளவு பணம் கிடைச்சாலும் அந்த வேலையை நான் கை கழுவ தயங்க மாட்டேன். கிட்டத்தட்ட அஞ்சாறு வருஷம் முன்னாடி, ஒரு தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனியில ஏஜென்ட் ஆகும் வாய்ப்பு கிடைச்சது. அட, நல்ல விஷயம்தானேன்னு நானே தேர்வெல்லாம் எழுதி ஆலோசகர் ஆனேன். நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாவே பாலிசி சேர்ந்தது. நான் ஆலோசகரா இருந்த மூன்று வருஷமும் எம்.டி.ஆர்.டி. அந்தஸ்தும் கிடைச்சது.

அப்ப யூலிப் பாலிசிகள் பிரபலமா இருந்ததால, அதிகம் விவரம் தெரியாத மக்கள்ட்ட பாலிசி வாங்கிட்டு ஷேர் மார்க்கெட் தள்ளாட்டத்துல அவங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாம தவிக்க வேண்டிய சிக்கல் தலை தூக்குச்சு. பேர் ரிப்பேராக கூடாதுங்கிற பரிதவிப்புல உச்சத்துல இருந் தாலும் ஆலோசகர் வேலையை அத்தோட நிறுத்திட்டேன்.

ஆனா, இன்ஷூரன்ஸ் துறையில இருந்ததால எங்க குடும்பத்துக்குத் தேவையான பாலிசிகளை எடுக்க முடிஞ்சது பெரிய உதவி. இதுவரை என் குடும்பத்துக்கு நான்

செஞ்சதைவிட இன்னும் நிறைய செய்யணும்னு நினைக்கிறேன். அதுக்கான வேலையிலதான் நான் இப்ப இறங்கப் போறேன்!'' என தன் பிஸினஸ், குடும்பம் என அனைத்து நிதி நிர்வாகத் தகவல்களையும் கொட்டித் தீர்த்தார் சிந்துஜா.

- எஸ்.கே.நிலா

திருமதி எஃப்.எம்.


கஸ்டமர்களின் லப்டப்!

துருக்கியைச் சேர்ந்த ஹம்தி உலுக்கையா அமெரிக்காவில் கல்லூரி படிப்புப் படிக்க வந்தார். படிப்பு போரடித்தது. துருக்கியில் பால் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பில் அவர் குடும்பம் ஈடுபட்டிருந்தது. அமெரிக்காவில் பிஸினஸ் தொடங்க முடிவு செய்தார்.

'அமெரிக்காவில் வெண்ணெய் பொருட்களுக்கு நல்ல மார்க்கெட். அந்தத் தயாரிப்பில் இறங்கு' என்று அப்பா அறிவுரை சொன்னார்.   கேட்கவில்லை. தயிர் தயாரிப்பு விற்பனையில் இறங்கினார். 2005-ல் அறிமுகமான அவருடைய சோபானி (Chobani) பிராண்ட் தயிர் விற்பனை இன்று 1,300 கோடி ரூபாய்க்கும் மேல்.

தான் ஜெயித்த ரகசியத்தை இப்படி சொல்கிறார் ஹம்தி உலுக்கையா.

'எல்லோரும் இந்தத் துறை வேண்டாம் என்று சொல்லியும், என் உள்ளுணர்வு சொன்னபடி தயிர் பிஸினஸில் இறங்கினேன். என் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம், தினமும் சோபானி தயிரைப் பாராட்டியும், குறை சொல்லியும் வரும் அத்தனை எஸ்.எம்.எஸ்.களையும் ஒன்றுவிடாமல் படித்து வாடிக்கையாளர்களின்  விருப்பு வெறுப்புகளை அறிவேன்.

வாடிக்கையாளர் நாடித் துடிப்பைப் புரிந்துகொண்டால் வெற்றி நிச்சயம்!

- அத்வைத்

திருமதி எஃப்.எம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism