Published:Updated:

தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 728 ரூபாய் குறைந்தது!

விகடன் விமர்சனக்குழு
தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 728 ரூபாய் குறைந்தது!
தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 728 ரூபாய் குறைந்தது!
தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 728 ரூபாய் குறைந்தது!

சென்னை: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 728 ரூபாய் குறைந்து பவுன் 19,032 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. சர்வதேச சந்தை சூழலாலும், தொடர்ந்து சரிந்து வந்த இந்திய ரூபாய் மதிப்பு சற்றே மீளத் தொடங்கியதாலும் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 592 ரூபாய் குறைந்து, 19,168 ரூபாய்க்கு விற்கப்பட்டது. காலை நிலவரப்படி, 24 காரட் சொக்க தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் விலை குறைந்து, 2,562 ரூபாயாக உள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கமும் கிராமுக்கு 74 ரூபாய் விலை குறைந்து, 2,396 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதனிடையே, பிற்கலில் தங்கம் விலை மேலும் 136 ரூபாய் குறைந்த பவுன் 19,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மட்டும் ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு 728 ரூபாய் குறைந்துள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை 675 ரூபாய் குறைந்து 39,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில், ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் குறைந்து ரூ.42.10 காசுகளுக்கு விற்பனையாகிறது.