Published:Updated:

ஓவிய முதலீடு: அழகுக்கு அழகு, லாபத்துக்கு லாபம்!

பொக்கிஷம்

ஓவிய முதலீடு: அழகுக்கு அழகு, லாபத்துக்கு லாபம்!

பொக்கிஷம்

Published:Updated:
ஓவிய முதலீடு: அழகுக்கு அழகு, லாபத்துக்கு லாபம்!


மும்பையில் உள்ள ஜஹாங்கீர் ஆர்ட் கேலரி... இந்திய அளவில் முக்கியமான ஓவியர்களின் ஓவியங்கள் இடம் பெற்றிருந்த கண்காட்சி அது. லட்ச ரூபாய்க்கு மேல் விலை கொண்ட ஏழெட்டு ஓவியங்களை வாங்கிக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து, ''நீங்கள் ஆர்ட் ஏஜென்டா?'' என்று கேட்டிருக்கிறார் நண்பர் ஒருவர்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நா
ன் ஒரு தொழிலதிபர். திருமண நிகழ்ச்சிகளில்   ஓவியங்களை பரிசாக அளிப்பது என் பழக்கம். எந்த பரிசுப் பொருளானாலும் பத்து, இருபது ஆண்டுகளில் அழிந்துவிடும். ஆனால், ஓவியங்களின் மதிப்பு காலம் செல்லச் செல்ல அதிகரிக்கவே செய்யும். அதனால்தான் இத்தனை ஓவியங்களை வாங்குகிறேன்'' என்றாராம் அந்த மனிதர்.
ஓவிய முதலீடு: அழகுக்கு அழகு, லாபத்துக்கு லாபம்!

இன்றைய தேதியில் ஓவியங்கள் என்பவை அழகுக்கு அழகு சேர்ப்பதோடு, காலத்தைக் கடந்து அபரிமிதமான லாபத்தை அள்ளித் தரும் தங்கச் சுரங்கமாகவும் இருக்கிறது. பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் என பலவற்றில் முதலீடு செய்பவர்கள் சமீப காலமாக ஓவியங்களை வாங்கியும் முதலீடு செய்து வருகிறார்கள். உலகின் மிகச் சிறந்த ஓவியங்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாவதே இதற்கு சிறந்ததொரு உதாரணம்.

சுமார் முப்பது வருடங் களுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள்கூட இன்று பல மடங்கு மதிப்பு கொண்டதாக மாறியிருக்கிறது. ஓவியர்களின் அனுபவம், புகழ், தனித்துவமான அவரது ஓவியப் பாணியைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் ஓவியத்தின் மதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது என்கிறார்கள், ஓவிய விற்பனைக் கூடம் நடத்துபவர்கள்.

''மரபு சார்ந்த பாரம்பரிய ஓவியங்கள், நவீன ஓவியங்கள் இரண்டுக்குமே தொடர்ச்சியாக நல்ல மதிப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. மரபு சார்ந்த ஓவியங்களில்   தஞ்சாவூர் பாணி ஓவியம், ஒடிஷா பழங்குடி ஓவியம், மொகலாயர் ஓவியங்களின் மதிப்பு நாளுக்குநாள் கூடிக் கொண்டே இருக்கிறது. அதேபோலத்தான் நவீன ஓவியங்களுக்குரிய மதிப்பும்.

சமீபத்தில் காலமான எம்.எஃப்.ஹுசேனின் ஓவியங்கள் இன்று உலக அளவில் விலை மதிப்பில்லாத பொருளாக மாறிவிட்டது. ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் கிடைத்தால், அதை கோடி ரூபாய் தந்து வாங்குவதற்கும் ஆட்கள் தயாராக இருக்கிறார் கள்'' என்று சொன்னார் ஓவியரும், ஓவிய விமர்சகருமான இந்திரன்.

ஓவிய முதலீடு: அழகுக்கு அழகு, லாபத்துக்கு லாபம்!
ஓவிய முதலீடு: அழகுக்கு அழகு, லாபத்துக்கு லாபம்!

கலை சார்ந்த படைப்புகளை வாங்குவது ஒரு முதலீடாகப் பார்க்க முடியுமா? அப்படி வாங்குவதில் உள்ள சாதக - பாதக விஷயங்கள் என்னென்ன? என்பது பற்றி விளக்கமாகச் சொன்னார் நிதி ஆலோசகர் ரமேஷ் பட்.  

''உலக அளவில் பழங்காலப் பொருட்களுக்கும், ஓவியங்களுக்கும் இருக்கும் சந்தை மதிப்பைப் பார்க்கும் போது இப்படியான பொருட்களை வாங்கி வைப்பதை நிச்சயமாக ஒரு சிறந்த முதலீடாக கருதலாம். சமீப காலத்தில்கூட லண்டன் ஏல மையம் ஒன்றில் காந்தி பயன்படுத்திய சில பொருட்களை ஏலம் விட்ட போது கோடிக்கணக்கான விலை கொடுத்து வாங்கினார் விஜய் மல்லையா. அரிதான விஷயங்கள் என்ன விலைக்கும் போகும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

இந்த முதலீட்டில் சாதகமான அம்சம் இவற்றுக்கு  இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளவும் முடியும். உங்களது முதலீட்டை நீங்கள் திரும்ப விற்கும்போது அதற்குரிய விலையை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. ஓர் ஓவியத்தை மட்டும் வாங்குவது என்பது ரசனை சார்ந்த விஷயமாக இருக்கலாம். பத்து, இருபது ஓவியங்களை வாங்கும்போது அது முதலீடாகிறது. ஆனால், இந்த வகை முதலீட்டில் உடனடி பலனை எதிர்பார்க்க முடியாது. நீண்ட காலத்திற்கு அரிய ஓவியத்தை நீங்கள் வைத்தி ருந்தால், நிச்சயம் பல மடங்கு லாபத்தை அள்ளித் தரும்'' என்றார்.

ஓவிய முதலீடு: அழகுக்கு அழகு, லாபத்துக்கு லாபம்!
ஓவிய முதலீடு: அழகுக்கு அழகு, லாபத்துக்கு லாபம்!

ஓர் ஓவியத்தை எப்படி பார்த்து வாங்குவது என்று லலித் கலா அகாடமியின் மண்டலச் செயலாளர் ஆர்எம்.பழனியப்பனோடு பேசினோம்.

'ஓர் ஓவியத்தை எப்படியாவது தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற உந்துதலை மற்றவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அப்படியான ஓவியத்தை வாங்கும்போது அந்த ஓவியரின் வரலாறு, அவருடைய ஓவிய பாணி, உலக அளவில், இந்திய அளவில் ஓவியக் கலைக்கு அந்த ஓவியரின் பங்களிப்பு என்ன என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். ஓவியங்களின் நுட்பங்களைத் தெரிந்து கொள்ளும் உணர்வு, ஓவியத்தின் போக்கு பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளும் போது ஓவியங்களில் முதலீடு எளிதாகிவிடும்'' என்றவர், ஓவியங்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டார்.

தரம்: அந்த ஓவியம் எந்த வகை வண்ணம் கொண்டு தயாரிக்கப் பட்டிருக்கிறது. குறிப்பாக, ஆயில் பெயின்ட், வாட்டர் பெயின்ட், அக்ரலிக் பெயின்ட் என அதன் தன்மை. இப்படி பார்க்கும்போது ஓவியத்தை எத்தனை வருடங்களுக்கு அழியாமல் பாதுகாக்கலாம் என்பதை அறிய முடியும்.

ஓவிய முதலீடு: அழகுக்கு அழகு, லாபத்துக்கு லாபம்!

உண்மைத்தன்மை: ஓர் ஓவியத்தைப் போல இன்னொரு ஓவியம் இருக்காது என்பதுதான் ஓவியக் கலையின் முக்கியமான விஷயம். ஓர் ஓவியர் ஒரு படைப்பு முயற்சியை ஒருமுறை மட்டுமே மேற்கொள்கிறார் என்பதால், அந்த ஓவியத்துக்காக அவரின் கையெழுத்துடன் கூடிய உண்மை உறுதிச் சான்றிதழ் இருக்க வேண்டும். அதைபோல வேறொரு ஓவியம் இருந்தால் அது போலியாகக் கருதப்படும்.

ஓவிய முதலீடு: அழகுக்கு அழகு, லாபத்துக்கு லாபம்!

கரு: ஓவியம் எதைப் பற்றி பேசுகிறது என்பதும் முக்கியமான விஷயம். குறிப்பாக, உலக அளவில் ஏற்படும் மாற்றங்களை உள்ளடக்கமாகச் சொல்லும் ஓவியங்கள் அதிக விலைக்குப் போகின்றன.  

பாணி: ஓர் ஓவியரின் ஓவிய பாணி என்பது தனித்தன்மையானது. அந்த பாணி ஓவியத்தை அவர் மட்டுமே வரையக் கூடியதாக இருக்கலாம். அப்படிப்பட்ட ஓவியங்களுக்கு மதிப்பு காலம் செல்லச் செல்ல அதிகரிக்கவே செய்யும்.  

சந்தை மதிப்பு: ஓவியத்தின் சந்தை மதிப்பு என்பது அந்த ஓவியரின் அனுபவம், சமூக பங்களிப்பு, வாங்கியுள்ள விருதுகள் போன்றவற்றின் அடிப்படையில் ஏறிக்கொண்டே இருக்கும்.

''நீங்கள் வாங்கும் ஓவியங்களைத் திரும்ப விற்பதற்குப் பெரிய சிரமம் இருக்காது. இதற்கென ஏல நிறுவனங்களும், மியூசியங்களும் உள்ளன. இணையம் மூலமாக விற்கவும் வாய்ப்பு உள்ளது'' என்று விளக்கமாக எடுத்துச் சொன்னார் பழனியப்பன்.

பிறகென்ன, இனி ஓவிய முதலீட்டிலும் இறங்க வேண்டியதுதானே?

-நீரை.மகேந்திரன்.
படங்கள்: கே.கார்த்திகேயன், சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism